குடியரசு தின கொண்டாட்டம்
ஜனவரி 26 நமது குடியரசு தினம். தொலைக்காட்சிகளில்
சிறப்பு நிகழ்ச்சிகள் என்று எதையெல்லாமோ விளம்பரம் செய்தவண்ணம் இருந்தனர். அதிகாலை
யாரோ ஒரு நடிகையின் பேட்டி. பத்து மணிக்கு பட்டிமன்றம். அடுத்து புதிதாய் வெளிவந்த
படத்தின் குழுவினர் வந்து அரட்டை அடிக்கும் நிகழ்ச்சி. அடுத்து புதிதாய் வந்த படங்களில்
இருந்து பாடல்கள். அப்புறம் இந்திய தொலைக்காட்சிகளில் முதைமுறையாக என்று சொல்லி ஓடாத
ஒரு மொக்கை படத்தை போடுவார்கள். அப்புறம் ஏதாச்சும் ஒரு நடிகரோ நடிகையோ பேட்டி தருவார்கள். மாலையில் மீண்டும் ஒரு மொக்கை
படம். அதை அவர்கள் மட்டுமே சூப்பர் ஹிட் படம் என்று சொல்லிப்பாங்க. அடுத்து மீண்டும்
ஏதாச்சும் நடிகர் நடிகையின் பேட்டி.
இப்படி தான் குடியரசு தினம், சுதந்திர தினம்,
மற்றும் நாம் போற்றி கொண்டாட வேண்டிய தினங்கள் தொல்லைக்காட்சிகளின் ஆதிக்கத்தால், செத்துக்
கொண்டிருக்கின்றன.
குடியரசு தினத்தன்று, யாராச்சும் சுதந்திர போராட்ட
தியாகி ஒருவரின் பேட்டியை போடலாமே. தேசப்பற்றை போற்றும் விதமான திரைப்படங்களை போடலாமே.
அது சரி, அப்படிப்பட்ட படங்களுக்கு இங்கு தட்டுப்பாடு இருக்கையில் நீங்கள் என்ன செய்ய
முடியும்.
நம் நாட்டின் கலாச்சாரத்தை போற்றும் விதமாக நீங்கள்
நிகழ்ச்சிகளை வழங்காவிட்டாலும் பரவாயில்லை. தயவுசெய்து நம் கலாசாரத்தை கெடுக்கும்விதமாக
எந்த நிகழ்ச்சிகளையும் ஒளிப்பரப்ப வேண்டாமே…
தினேஷ்மாயா
0 Comments:
Post a Comment