அர்ஜீனா அர்ஜீனா

Sunday, December 11, 2011



என் சிறு வயதில் நாங்கள் ஓட்டு வீட்டில் இருந்தோம். அப்போதெல்லாம் மழைப்பெய்தால் ஓட்டின் மீது மழைப்பொழிவதால் மழையின் சத்தம் கொஞ்சம் அதிகமாக கேட்கும். அப்போது இடி இடிக்கும்போது எனக்கும் என் தங்கைக்கும் ரொம்ப பயமாக இருக்கும். நாங்க இருவரும் அம்மாவை போய் கட்டிபிடிச்சுகிட்டு அழுவோம். அம்மா அதுக்கு, பயப்படாதீங்க ரெண்டு பேரும் அர்ஜூனா அர்ஜூனா-னு சொல்லிட்டே இருங்க மழை நின்னுரும்னு சொன்னாங்க. அதேப் போல நாங்களும் அர்ஜூனா அர்ஜூனா-னு சொல்லிட்டே இருந்தோம். மழை ஒரு வழியா நின்னுடுச்சு.

அப்புறமா நான் அம்மாவிடம் கேட்டேன். எதுக்குமா அர்ஜூனா அர்ஜூனா-னு சொல்ல சொன்னனு. அதுக்கு அவங்க சொன்னாங்க, மழை நிக்கனும்னா வானவில் வரனும். வானவில் வந்துச்சுனா மழை நின்னுரும். அர்ஜூனா அர்ஜூனா-னு சொன்னா அவர் வானத்தில் அம்பு விடுவார். அதுதான் வானவில்லாக வரும்னு சொன்னாங்க.

அதை இப்போ கேட்க கொஞ்சம் சிறுபிள்ளைத்தனமாக இருக்கு. ஆனா நான் யோசிச்சு பார்த்தாதான் தெரியுது அப்போ நான் நிஜமாவே சிறுபிள்ளைதான் என்று..


- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: