தேடல்….
நாம் எல்லோரும் ஏதோ ஒன்றை தேடித்தான் பயணித்துக்
கொண்டிருக்கிறோம். சிலர், தாங்கள் எதை தேடிகிறோம் என்று தெரிந்து தேடுகின்றனர். பலர்,
எதை தேடி பயணிக்கிறோம் என்று தெரியாமலே பயணித்துக் கொண்டிருக்கின்றனர். எல்லோர் வாழ்வின்
தேடலிலும் நிம்மதி தான் முதலாம் இடத்தில் இருக்கிறது. அதற்கு அடுத்து ஒவ்வொருவர் ஒவ்வொன்றை
வைத்துள்ளனர். ஒரு சிலர், இறைவனை தேடுகின்றனர், பலர் பணத்தை தேடுகின்றனர், பலர் அன்பை
தேடுகின்றனர், சிலர் அரவணைப்பை தேடுகின்றனர், சிலர் ஆறுதலை தேடுகின்றனர், சிலர் மரணத்தை
தேடிக்கொள்கின்றனர், சிலர் வெற்றியை தேடுகின்றனர், சிலர் மண், பெண், பொன்னை தேடுகின்றனர்,
சிலர் போதையை தேடுகின்றனர், சிலர் பாதையை தேடுகின்றனர், சிலர் தனிமையை தேடுகின்றனர்,
சிலர் வாழ்க்கையையே தேடுகின்றனர், சிலர் அடைக்கலம் தேடுகின்றனர், சிலர், தூக்கத்தை
தேடுகின்றனர், சிலர் அந்தஸ்தை தேடுகின்றனர், சிலர் பதவியை தேடுகின்றனர், சிலர் காதலை,
காதலனை, காதலியை தேடுகின்றனர், சிலர் குழந்தை பிறக்க வேண்டி கோவில்களை தேடுகின்றனர்,
சிலர் உணவை தேடுகின்றனர், சிலர் உடல் நலத்தை தேடுகின்றனர், சிலர் கல்வியை தேடுகின்றனர்,
சிலர் வேலையை தேடுகின்றனர், சிலர் உறவை தேடுகின்றனர், சிலர் உண்மையை தேடுகின்றனர்….
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். தேடல் நிறைந்ததே
நம் வாழ்க்கைப் பயணம். சரியான தேடல் இருந்தால் மட்டுமே நாம் நமது சரியான இலக்கை அடைய
முடியும். நம் வாழ்வில் தவறான தேடலை வைத்துக்கொண்டால், நிச்சயம் நல்வழி கிடைக்காது.
நல்ல தேடலை அமைத்துக்கொண்டு, நல்ல பாதையை தேர்ந்தெடுத்துக்கொண்டு,
நல்வழியில் பயணித்தால் நிச்சயம் வாழ்க்கையின் அர்த்தம் புரியும், வாழ்க்கையை வாழவும்
தெரியும்..
- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா
0 Comments:
Post a Comment