18 சித்தர்கள்..

Friday, December 16, 2011




  1. இடைக்காடர்
  2. சட்டைநாதர்
  3. கருவூரார்
  4. கொங்கணர்
  5. குதம்பை சித்தர்
  6. பாம்பாட்டி சித்தர்
  7. சுந்தரானந்தர்
  8. பதஞ்சலி
  9. போகர்
  10. நந்தி தேவர்
  11. தன்வந்திரி
  12. வான்மீகர்
  13. கோரக்கர்
  14. கமலமுனி
  15. மச்சமுனி
  16. திருமூலர்
  17. இராமதேவர்
  18. அகத்தியர்

இது என்னுடைய 800-ஆவது பதிவு. இதை நான் அர்த்தம் நிறைந்ததும் அழுத்தம் நிறைந்ததுமாக பதிவு செய்ய நினைத்தேன். உடனே என் மனதில் வந்தவர்கள் சித்தர்கள். இதுவரை சித்தர்களைப் பற்றி நான் பதிவு செய்த்தே இல்லை. இன்று அவர்கள் அருளுடன் இதை பதிவு செய்ய நல்ல நேரம் கிடைத்துள்ளது.
18 சித்தர்கள் அனைவரும் நம்மைப்போலவே மனிதர்களாய் பிறந்தவர்களே. மனிதனாய் பிறந்த அனைவருக்கும் தன்னலம் என்பது நிச்சயம் உண்டு. ஆனால் இந்த உலக மக்களின் நன்மையை மட்டுமே கருதிய மனிதர்கள் அவர்கள். துறவறம் பூண்டு இறைவனையும் இயற்கையையும் பிரபஞ்ச ரகசியத்தையும் கண்டவர்கள்.
மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் இறைவனை காணலாம் என்பதற்கு இவர்கள் உதாரணம். இவர்கள் ஆற்றிய அற்புத செயல்கள் எண்ணிலடங்காது. மனதை மட்டுமல்லாமல் இயற்கையையும் இன்னபிற சக்திகளையும் கட்டுப்படுத்தியவர்கள்.
இறைவனின் அருளையும் கூட பெற்றுவிடலாம், சித்தர்கள் அருள் பெறுவது அவ்வளவு சுலபமல்ல என்பேன் நான். சித்தன் வாக்கு சிவன் வாக்கு என்று நான் கேட்டிருக்கிறேன். சிவனை சித்தன் என்பார்கள். சித்தனை சிவன் என்பார்கள். 
சித்தர்கள் 18 பேர் மட்டுமில்லை. இன்னும் பலர் இருக்கின்றனர். ஆனால் பெரிதும் மக்களுக்கு தெரிந்திருப்பது அனைத்து சித்தர்களிலும் முதலாய் விளங்கும் இந்த 18 சித்தர்களைத்தான்.
சதுரகிரி மலையில் சித்தர்கள் இன்னமும் வாழ்ந்து வருகிறார்கள் என்று மக்கள் வெகுவாக நம்புகிறார்கள். சித்தர்கள் அவ்வளவு சீக்கிரமாக எவருக்கும் காட்சி தந்திட மாட்டார்கள். நான் விரைவில் சதுரகிரி சென்று வரலாம் என்றிருக்கிறேன். சித்தர்களின் அருளுடன் விரைவில் அவர்களை தரிசித்துவிட்டு மீண்டும் அவர்களைப் பற்றி இங்கே பதிவு செய்கிறேன்..


- என்றும் பக்தியுடன்..
தினேஷ்மாயா

0 Comments: