என் வாழ்நாளில் மறக்க முடியாதது நான் அவளுடன் சென்ற அந்த இரயில் பயணத்தைதான். தொலைத்தூர இரயில் பயணம் என்பது எனக்கு மட்டுமல்ல பலருக்கும் மறக்க முடியாத நினைவுகளைத் தரும்.
நீங்கள் இதுவரை இரயிலில் பயணம் செய்யவில்லையா. எனக்காக ஒருமுறை இரயிலில் பயணித்துப்பாருங்கள்.
ஏ.சி. அல்லது முன்பதிவு செய்த பெட்டியிலோ அல்லது
இருக்கவே இருக்கு நம்ம இரண்டாம் வகுப்பு பெட்டி..
ஒரு முறை இரயிலில் எந்த வேலையும் இல்லாமல்
வெறுமனே பயணம் செய்யவேண்டும் என்று பயணித்துப்பாருங்கள்
நிச்சயம் அது உங்கள் வாழ்வில் ஒரு திருப்பத்தையே கொண்டுவரும்.
என்ன.. ஒன்றும் புரியவில்லையா..
முதலில் இரயிலில் பயணித்துப் பாருங்கள்..
எல்லாம் புரியும்...
- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா
0 Comments:
Post a Comment