She is a Fantasy..She has an Harmony..Don't you know She is a Mystery..Fills the Heart with Ecstasy..
ஒரு ஊரில் அழகே உருவாய்
ஒருத்தி இருந்தாளே…
அழகுக்கே இலக்கணம் எழுத
அவளும் பிறந்தாளே…
அவள் பழகும் விதங்களை
பார்க்கையிலே…
பலவருட பரிச்சயம்போல்
இருக்கும்…
எதிலும் வாஞ்சைகள்தான்
இருக்கும்..
முதலாம் பார்வையிலே..
மனதை ஈர்ப்பாளே..
முதலாம் பார்வையிலே..
மனதை ஈர்ப்பாளே..
ஒரு ஊரில் அழகே உருவாய்
ஒருத்தி இருந்தாளே…
அழகுக்கே இலக்கணம் எழுத
அவளும் பிறந்தாளே…
மரகத சோம்பல்
முறிப்பாளே..
புல்வெளி போலே
சிரிப்பாளே..
விரல்களை ஆட்டிஆட்டி
பேசும்போதிலே…
காற்றிலும் வீணை உண்டு
என்று தோன்றுமே…
அவள் கன்னத்து குழியில்
சிறு செடிகளும் நடலாம்…
அவள் கன்னத்து குழியில்
அழகழகாய்….
சிறு செடிகளும் நடலாம்…
விதவிதமாய்…
ஏதோ ஏதோ தனித்துவம்
அவளிடம் ததும்பிடும் ததும்பிடுமே…
ஒரு ஊரில் அழகே அழகே…
ஒரு ஊரில் அழகே உருவாய்
ஒருத்தி இருந்தாளே…
அழகுக்கே இலக்கணம் எழுத
அவளும் பிறந்தாளே…
மகரந்தம் தாங்கும்
மலர்போலே..
தனியொரு வாசம்
அவள்மேலே…
புடவையின் தேர்ந்த மடிப்பில்
விசிறி வாழுகள்…
காற்றினில் ஆடும் கூந்தல்
கரிசல் காடுகள்…
அவள் கடந்திடும்போது
தலை அணிச்சையாய் திரும்பும்
அவள் கடந்திடும்போது
நிச்சயமாய்…
தலை அணிச்சையாய் திரும்பும்
அவள்புறமாய்…
என்ன சொல்ல என்ன சொல்ல
இன்னும் சொல்ல
மொழியில்லை வழியில்லையே…
அவள் பழகும் விதங்களை
பார்க்கையிலே…
பலவருட பரிச்சயம்போல்
இருக்கும்…
எதிலும் வாஞ்சைகள்தான்
இருக்கும்..
முதலாம் பார்வையிலே..
மனதை ஈர்ப்பாளே..
முதல் முதல் பார்வையிலே..
மனதை ஈர்ப்பாளே..
திரைப்படம் : காக்க காக்க
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள்: தாமரை
என்னவளை நான் வர்ணித்தால் இந்த வரிகளைத்தான் எழுதுவேன்....
-என்றும் அன்புடன்
தினேஷ்மாயா
0 Comments:
Post a Comment