கருவறைக்கும்
கல்லறைக்கும்
அநேக வித்தியாசம்
ஏதுமில்லை…
தாய் நம்மை
ஏந்தி கொண்டிருக்கிறாள்
கருவறையில்…
பூமித்தாய் நம்மை
தாங்கி கொண்டிருக்கிறாள்
கல்லறையில்…
நாளை பிறப்பவன்
விழித்துக் கொண்டிருக்கிறான்
அங்கே –
நேற்று இறந்தவன்
உறங்கிக் கொண்டிருக்கிறான்
இங்கே –
உலகை பார்க்கப்போகும்
ஆவலோடு
அவன் –
உலகை பார்த்துவிட்ட
களிப்போடு
இவன் –
வெளியே வர
துடித்துக்கொண்டிருக்கிறான்
அவன் –
மீண்டும் வெளியே வர
பயந்துக்கொண்டிருக்கிறான்
இவன் –
ஆனால் –
இருவரும் இங்கே மட்டும்தான்
நிம்மதியாக இருக்கமுடியும்….
வெளியுலகில் அல்ல !
- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா
0 Comments:
Post a Comment