கனவில் வந்தவள்
நேரில் வந்தாள்…
கண்களால் பேசினாள்…
அவள் கண்களின் வார்த்தைகளை
படிக்க கற்றுக்கொடுத்தாள்…
பயணம் முழுதும்
மனதில் பயணம் செய்தாள்…
பேசாமலேயே பல
அர்த்தங்கள் சொன்னாள்…
மௌனத்திலும் அவள்
மனதை புரியவைத்தாள்…
தன் தலையசைவில் உலகையே
என்னை சுற்றச்செய்தாள்…
பேச்சுக்களினால் உயிரை
திருடி சென்றுவிட்டாள்…
செல்ல சிணுங்களால் எனை
உயரே பறக்கவைத்தாள்…
- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா
0 Comments:
Post a Comment