ஒரு நாள் எங்கள் ஊர் பேருந்து நிறுத்ததிற்கு
இரவு 1 மணிக்கு சென்றிருந்தேன்.. அது ஆடி மாதம் என்பதால் தெருவெங்கும் வண்ணமயமான விளக்குகளால்
அலங்கரிக்கபட்டிருந்தது.. ஆட்கள் நடமாட்டம் பெரிதும் இல்லை. தெருவெங்கிலும் விளக்குகள்
வெளிச்சத்தை தூவிக் கொண்டிருந்தது. மெல்லிய தென்றல் வீசிக் கொண்டிருந்தது. அதிகம் நெரிசல்
இல்லாத பிரதான சாலை. மெதுவாய் ஊர்ந்து செல்லும் ஆட்டோ. வேகமாய் பறந்து செல்கிறது கார்
ஒன்று. நான் சாலையின் இருபுறமும் ரசித்தபடி என் வண்டியை மெதுவாக ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.
ATM-ல் காவலாளி விழித்துக் கொண்டிருக்கிறார். பேருந்திற்காக சிலர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
சென்னையில் இருந்து வந்த பேருந்தில் இருந்து பயணிகள் இறங்குகின்றனர். அதில் சிலர் வாடகை
ஆட்டோவை நாடி செல்கின்றனர். இன்னும் சிலர் தங்கள் வீட்டில் இருந்த வந்த ஆட்களுடன் வண்டியில்
செல்கின்றனர். இன்னும் சிலர் நடையை கட்டுகின்றனர். அப்போது சேலம் செல்லும் பேருந்தும்
வருகின்றது. அதில் இடம்பிடிக்க பயணிகள் முண்டியடித்து செல்கின்றனர். தெருவோரத்தில்
பழவண்டியை தள்ளியபடி சென்றுக்கொண்டிருக்கிறார் பெரியவர் ஒருவர். நின்றுக்கொண்டிருக்கும்
வாடிக்கையாளர்களுக்கு தோசை ஊத்திக்கொண்டிருக்கிறார் கையேந்திபவன் முதலாளி. காலையில்
திருமணம் போல, வேகவேகமாய் பூமாலையை கற்றிக்கொண்டிருக்கின்றனர் பூக்கடை ஊழியர்கள். எப்பொழுதும்
பரபரப்புடன் காணப்படும் பேருந்து நிறுத்தம் உறங்கிக்கொண்டிருக்கிறது. ஒரு சில Care
Of Platform மக்களும் பேருந்து நிறுத்தத்தில் உறங்கி கொண்டிருக்கின்றனர். பேருந்தில்
வேலை செய்யும் சிலர் பேருந்தை நிறுத்ததிலேயே நிறுத்திவிட்டு பேருந்திலேயே உறங்கி கொடிருக்கின்றனர்.
ஒருசிலர் அங்கே இருக்கும் ஒரே டீ கடையில் டீ குடித்துக் கொண்டிருக்கின்றனர். திறந்திருக்கிறது
அப்போலோ மெடிக்கல்ஸ் அதில் ஒருவர் மருந்துகளை வாங்கிக் கொண்டிருக்கிறார். போலீஸ் நண்பர்
இருவர் அந்த இரவு நேரத்திலும் ரோந்து செல்கின்றனர். ஓ… என் தங்கை வரும் பேருந்து வந்துவிட்டது..
அவளை அழைத்துச் செல்லத்தான் நான் இங்கே பேருந்து நிறுத்ததிற்கு வந்தேன். அதை மறந்துவிட்டு
நான் பார்த்ததையெல்லாம் உங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்.. தங்கை வந்துவிட்டாள்..
நான் வீட்டிற்கு சென்றதும் மற்றதை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்…..
- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா
0 Comments:
Post a Comment