சில்லறை வர்த்தகத்தில் அந்நிய
முதலீடு
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை இந்திய அரசு அனுமதித்ததை
எதிர்த்து இன்று நாடு தழுவிய அளவில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு
தீர்மானம் கொண்டுவரும் அளவிற்கு இந்த பிரச்சனை அவ்வளவு பெரியதாக வெடித்து இருக்கிறது.
சரி. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்தால் என்ன என்று
நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. நம்மில் பெரும்பாலானோருக்கு இதன் தாக்கம் தெரிய
வாய்ப்பில்லை. ஏன், சில்லறை வணிகர்களுக்கும்கூட இதைப்பற்றி அவ்வளவாக தெரிந்திருக்காது.
யாராச்சும் இதை படிச்சுட்டு மத்தவங்களிடமும் பகிர்ந்துகிட்டா அது எனக்கு ரொம்ப சந்தோஷமாக
இருக்கும்.
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதை விடுங்கள். சில்லறை
வர்த்தகத்தில் தனியார் முதலீட்டை அனுமதித்ததனால் ஏற்பட்ட விளைவுகளை பார்ப்போம். முன்பெல்லாம்
வீட்டு செலவுகள் வாங்க அண்ணாச்சி மளிகை கடைக்கு சென்று வீட்டுக்கு தேவையான செலவுகளை
எல்லாம் வாங்கி வருவோம். மொத்தமாக வாங்குவோர்க்கு மொத்த தொகையில் கொஞ்சம் தள்ளுபடி
கிடைக்கும். எதாச்சும் இனாமாக ஒரு பொருளை அண்ணாச்சி பாசமாக தருவார். அந்த காலம் எல்லாம்
மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் எதாச்சும் மளிகை செலவுகள் வாங்க வேண்டுமென்றால், Reliance Fresh, Nilgris, More Shoppe, Spencers Shoppe, என்று செல்கிறோம். இதனால் காலம்
காலமாக இந்த தொழில்புரிந்து வரும் நம்மவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்
அது போன்ற கடைகளில் அவர்கள் சொல்வதுதான் விலை. காய்கறிகள் கூட அங்கே கிடைக்கிறது அதற்கும்
அவர்கள் வெச்சதுதான் விலை. நாம் பேரம் பேசுவதற்கே இடமில்லை. பேரம் பேசுவதை விடுங்கள்.
இதனால் நம் மக்கள் நம் வியாபாரிகள் எவ்வளவு இழப்பை சந்திக்கின்றனர் என்று நம்மில் பலருக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இது இப்படி இருக்க, சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை
அனுமதித்தால், அவர்கள் வெச்சதுதான் சட்டம் என்றாகிவிடும். அவர்கள் தங்கள் கடைகளை இங்கே
திறந்துவிட்டு அவர்கள் விருப்பத்திற்கேற்ப விலையை நிர்மானம் செய்வர். இதனால் பாதிக்கபோவது
நம் வியாபாரிகள் மட்டுமன்றி சாதாரன குடிமக்களும்தான். மக்களின் வாழ்வாதாரத்தையும் அவர்தம்
வருமானத்தையும் உயர்த்த வழி செய்யாமல், அந்நிய முதலீட்டை அனுமதித்தால், அவர்கள் நிர்னயிக்கும்
விலையை மக்களால் ஏற்கமுடியாதபோது அது ஒரு ஏற்கதக்க முடிவாக இருக்குமா என்ன.
- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா
0 Comments:
Post a Comment