சரஸ்வதி துணை

Tuesday, December 06, 2011




சரஸ்வதி துணை
      இந்துக்கள் பல கடவுள்களை வழிப்படுகிறார்கள். அதில் கல்விக்கென சரஸ்வதியை வழிப்படுவர். ஆயக்கலைகள் அறுபத்துநான்கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று இவளை துதித்துப் பாடுவர். அனைத்து கலைகளையும் கற்று தேர்ச்சிப்பெற்ற ஒரே கடவுள் என்றும் சரஸ்வதியை சொல்வார்கள். சரஸ்வதியை வழிப்பட்டால் கல்வியில் சிறந்தி விளங்கலாம் என்பார்கள். அது எந்த அளவிற்கு உண்மை என்று எனக்கி தெரியாது. இருப்பினும் எனக்கு சரஸ்வதிதேவியை மிகவும் பிடிக்கும். அவள் புகைப்படத்தை என் அறையில் வைத்து தினமும் வழிப்படுகிறேன். அவளை மனதார உருகி வேண்டிக்கொண்டால், கல்வி மட்டுமல்ல, எல்லா கலைகளிலும் வல்லவனாக வரலாம். நான் கலை தொடர்பாக தொடங்கும் எந்தவொரு விஷயத்திலும் என் முதல் பிரார்த்தனை சரஸ்வதிதேவியை நினைத்துத்தான் இருக்கும்… அவளுக்கும் என் வாழ்வின் வெற்றி தோல்விகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வெற்றி மூலம் எனக்கு சந்தோஷத்தையும் தோல்வி மூலம் பல பாடங்களையும் எனக்கு சொல்லித்தருபவள். அவளைப்பற்றி இங்கே என் வலைப்பக்கத்தில் எழுதனும்போல் தோன்றியது. அதான் இந்த பதிவு…. 

- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: