பார்த்தீனியம் செடிகள்
நம் இந்தியா
ஒரு விவசாய நாடு. நம்மில் எத்தனை பேருக்கு விவசாயத்தை பற்றிய குறைந்தபட்ச அறிவு இருக்கிறது
அல்லது விவசாயத்தை பற்றிய அக்கறை இருக்கிறது சொல்லுங்கள். நம் நாட்டில் விவசாயிகளுக்கு
இருக்கும் பல பிரச்சனைகளில் பார்த்தீனியம் செடிகளும் ஒன்று. சொல்லப்போனால் இதுதான்
அவர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும். வேண்டுமானால் நீங்கள் ஒரு விவசாயியை
கேட்டுப்பாருங்கள். நம் நாட்டில் ஒவ்வொரு பகுதியில் இதனை ஒவ்வொரு பெயர் சொல்லி அழைக்கிறார்கள்.
எனக்கு தெரிந்த இதன் இன்னொரு பெயர் பெங்களூர் பூண்டு.
முதலில் இந்த
செடியைப்பற்றி பார்க்கலாம். இந்த செடி, அமெரிக்க கண்டத்தில்தான் தோன்றியது. இது தானாக
பரவும் தன்மை உடையது. இதன் துகள்கள் காற்றில் மிதக்ககூடியது. அதனை நாம் சுவாசித்தால்
ஆஸ்துமா ஏற்படும். இந்த செடி நம் உடலில் பட்டால் அரிப்பை ஏற்படுத்தும், மற்றும் சரும
நோய்களை உருவாக்கும். இந்த செடியை அவ்வளவு சுலபமாக அகற்றிவிட முடியாது. ஒரு ஏக்கர்
நிலத்தில் சாதாரணமாக ஆயிரக்கணக்கில் வளர்ந்து கிடக்கும் இந்த செடி. ஒரு 100 விவசாயிகளை
வேலைக்கு அமர்த்தி இந்த செடியை அடியோடு அறுத்தெறிய செய்தால் அவர்கள் அனைவரும் இந்த
செடிகளை அறுத்து முடித்த மறு நொடி அனைத்து செடிகளும் மீண்டும் துளிர்விட்டு வரும்.
இந்த செடியை அகற்றுவது சுலபமல்ல. கையில் இதை பிடுங்க முயன்றால், கைகள் புண்ணாகும் அளவிற்கு
இதன் தண்டில் நச்சுத்தன்மை இருக்கிறது. இதை அகற்ற சிறந்த வழி இதை வேறோடு பிடுங்கி எறிவதுதான்.
ஆனாலும் அது முற்றிலும் அழிந்துவிடாது.
இந்த செடி புல்லோடு
புல்லாக வளர்ந்து வரும். இதனால் நாம் பயிரிட்டிருக்கும் செடிகளும் பாதிக்கப்படுகிறது.
இந்த செடியை தின்னும் கால்நடைகளும் பாதிக்கப்படுகிறது. அந்த கால்நடைகள் தரும் பாலிலும்
இதன் நச்சுத்தன்மை கலந்து இருக்கும். இதனை மக்கள் உட்கொள்ளும்போது அவர்களுக்கும் இந்த
நச்சுத்தன்மை சென்று சேருகிறது. நாளாக நாளாக இது மரணத்தையும் ஏற்படுத்தலாம் என்று அறிவியலாளர்கள்
அஞ்சுகின்றனர்.
மிகவும் வேதனையான
விஷயம் என்னவென்றால், இந்த செடியை அமெரிக்கர்கள் வேண்டுமென்றே நம் நாட்டில் இதை திட்டம்
போட்டு பரப்பியுள்ளனர் என்பதுதான். 7-ஆம் அறிவு படத்தில் வரும் கதைபோலத்தான் இதுவும். நம்மில் பெரும்பாலானோர்
விவசாயத்தை எதோ ஒரு வேற்று கிரக வாசிப்போல பார்ப்பதால்தான் இது நமக்கு தெரியாமலேயே
இருக்கிறது. நேருக்கு நேராக நின்று போரிட தைரியமில்லாத சில தந்திர நாய்களும் நரிகளும்
செய்யும் வேலைதான் இது. இதை முறியடிக்க ஒரே வழிதான் இருக்கிறது. இளைஞர்களாகிய நாம்,
நாம் படித்த அறிவை பயன்படுத்தி இதற்கு மாற்று வழி கண்டுபிடிக்கனும் அதை உலகிற்கு சொல்லித்தரணும்,
அதோடு விவசாயத்திலும் கொஞ்சம் ஆர்வம் செலுத்த வேண்டும். நம் நாட்டின் முதுகெலும்பாபிய
விவசாயத்தை ஒதுக்கி ஓரம்கட்டி வைப்பது மிகப்பெரிய பாவம். அந்த பாவச்செயலை இனிவரும்
காலங்களிலாவது நம்மைப்போன்ற இளைஞர்கள் செய்யாமல் நாட்டையும் இந்த உலகிற்கே உணவளிக்கும்
விவசாயத்தையும் காப்போமே……
- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா
0 Comments:
Post a Comment