யார் நீ இறைவா ?
இறைவன்… கடவுள்… ஈசன்… தெய்வம்… ஜீசஸ்… புத்தன்… அல்லாஹ்…
இன்னும் பல பெயர்கள் உண்டு. இப்போது நாம் விவாதிக்க கடவுள்
என்று எடுத்துக்கொள்வோம்.. இந்த பெயர்கள் எல்லாம் கடவுள் ஒரு ஆண் என்றே காட்டுகிறது.
முன்குறிப்பு. அல்லாஹ் என்மது எந்த உருவத்தையும் குறிக்காது என்பது இசுலாமியர்களின்
கருத்து. நான் அவர்களின் கருத்தை புன்படுத்தவில்லை. என் மனதில்படும் கருத்தை மட்டுமே
இங்கு தெரிவிக்கிறேன்.
இந்த பெயர்கள்
பொதுவாக பார்த்தால், ஒரு ஆண் தான் கடவுள் என்று சொல்லும்படித்தான் இருக்கிறது. ஈசன்
என்னும் வார்த்தை ஒரு பெண் தெய்வத்தை குறிப்பதாக இல்லையே. அம்மன், அன்னை, மாதா, இப்படி
பல வார்த்தைகள் பெண் தெய்வங்களை குறிப்பதாக இருந்தாலும் நாம் பொதுவாக கடவுளை குறிக்கும்
வார்த்தைகள் கடவுள் ஒரு ஆண் என்ற எண்ணத்தையே நம் மனதில் பதியவைக்கிறது. இதற்கு முதல்
முக்கிய காரணம் என்னவென்றால், நாம் இன்று இருப்பது ஒரு ஆணாதிக்க சமுதாயம். என்னத்தான்
பெண் சுதந்திரம் என்று வாய்வலிக்க பேசினாலும் பெண்களுக்கு இன்றைய சமுதாயத்தில் இருக்கும்
சுதந்திரம் வெறும் கானல்நீர்தான்.
கடவுளை கூட
ஆண் பெண் என்று பிரித்துப்பார்க்கும் நம் சமுகத்தில் பெண் சுதந்திரத்தை பேசுவது மூடத்தனம்.
கடவுளில் ஆண் கடவுள் தான் மிகவும் சக்திவாய்ந்தது என்ற கருத்து நம்மில் பலருக்கு உண்டு.
கடவுள் என்பவன் அல்லது என்பவள் அனைவருக்கும்
பொதுவானவன் பொதுவானவள் என்று நான் சொல்ல மாட்டேன். கடவுள் என்பது என்னைபொறுத்த வரை
இயற்கையே. இயற்கைத்தான் நம்மை வாழவைத்தும் அழித்தும் வருகிறது. இயற்கை பொதுவானது, உங்கள்
கடவுள் பொதுவானவன் இல்லை.. ஒருவனை வாழவைத்து இன்னொருவனை பட்டினியால் சாகவைப்பவன் இல்லை
என் இயற்கை. அது அனைவருக்கும் பொதுவானது. வேறுபாடின்றி அனைவருக்கும் கொடுப்பது இயற்கை
மட்டுமே.. என்னைப்பொறுத்தவரை இறைவன் கடவுள் தெய்வம் நீங்க என்ன வேணும்னா சொல்லிக்கோங்க,
அது எனக்கு இயற்கை மட்டும்தான்…
ஓம் இயற்கையே நமஹ..
- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா
0 Comments:
Post a Comment