என்னாகுமோ நம் அரசாங்கம்

Tuesday, December 06, 2011




என்னாகுமோ நம் அரசாங்கம்
      ஒரு நாள் என் அலுவலகத்திற்கு ஒரு ஆசிரியர் வந்தார். தன் பள்ளியின் பெயரில் புதிதாக சேமிப்பு கணக்கு துவங்க வேண்டும் என்றார். நானும் என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்று சொன்னேன். அவரும் அதை கொண்டு வந்திருந்தார். அந்த கணக்கு கூட்டாக இருவர் இயக்கும் சேமிப்பு கணக்கு. அந்த ஆசிரியர் முதலாமவர், இன்னொருவர் அந்த ஊரின் கவுன்சிலர். அந்த கவுன்சிலர் ஒரு பெண். அவரும் அவரின் கணவரும் அந்த ஆசிரியரும் அன்று வந்திருந்தனர்.
      நான் அந்த கவுன்சிலரிடன், உங்கள் பெயர் என்ன என்றேன். அதற்கு அவர் தன் கணவரை பார்த்தார். அவரின் கணவர் அந்த கவுன்சிலரின் பெயரை சொன்னார். உங்கள் வயசு என்ன, எங்கு குடியிருக்குறீங்க எத்தனை வருஷமா இருக்கீங்க மற்றும் சில கேள்விகளை அவரிடம் கேட்டேன். அதற்கும் அந்த கவுன்சிலர் தன் கணவரை பார்த்தார். அவரின் கணவர்தான் அனைத்திற்கும் பதில் சொன்னார். அவர் கணவர் தோளில் ஒரு கட்சியின் துண்டை அணிந்திருந்தார். இதை கண்ட உடனேயே நான் கணித்துவிட்டேன். இவர் தேர்தலில் நிற்காமல் இவரின் மனைவியை நிற்க வைத்திருக்கிறார் என்று. அதுதான் உண்மையும்கூட. இதை அந்த ஆசிரியரிடம் கேட்டு தெரிந்துக்கொண்டேன்.
      என் கருத்து என்னவென்றால், தன் பெயரையும்கூட சொல்ல யோச்சிகும் இவர், எல்லா விஷயத்தையும் கணவரின் நிழலில் இருந்து செய்யும் இவர், மக்களின் குறைகளை எப்படி தீர்ப்பார். எதாச்சும் உடனடியாக முடியு எடுக்க வேண்டுமென்றால் அதற்கும் இவர் தன் கணவரைத்தான் எதிர்பார்ப்பார். இதுபோன்றோர் அதிகாரம் மிகுந்த பதவியில் இருந்து என்ன பயன். இது போன்ற விஷயங்களை பார்க்கும்போதுதான் நம் நாட்டின் அடித்தளைத்திலேயே பிரச்சனை இருக்கிறது அதனை சரி செய்யாமல் ஒட்டுமொத்த நாட்டையும் மாற்ற முடியாது என்பதை உணர்ந்துக்கொண்டேன். மாற்றம் என்று வரும் என்று தெரியாது. ஆனால் மாற்றத்தை கொண்டுவர துடிப்போடு இருக்கிறேன். அந்த மாற்றம் வரும் வரை என்னாகுமோ நம் அரசாங்கம்…

- என்றும் அன்புடன்..

தினேஷ்மாயா

0 Comments: