பெண்ணின் மனதை தொட்டு
என் நண்பர் ஒருவர், நம் மனதிற்கு பிடித்த பெண்ணை கவர்வது
எப்படி என்று கேட்டார். நான் அவரிடன், நான் என் வலைப்பக்கத்தில் அடுத்ததாக பதிவு செய்யும்போது
இதை சொல்கிறேன் என்றேன். நம் மனதிற்கு பிடித்த பெண்ணின் மனதில் இடம் பிடிப்பது என்று
எனக்கு தெரிந்தவற்றை சொல்கிறேன்.
ஒருதலை காதல் என்பது எவ்வளவு சுகமான அனுபவம் என்பதை அவள்
எனக்கு உணர்த்தியிருக்கிறாள். நம் மனதிற்கு பிடித்த பெண்ணின் மனதில் வேறு ஒருவர் இருக்கிறாரா
என்பதை முதலில் தெரிஞ்சுக்கனும். அவளுக்கும் மனசு இருக்கு ஆசைகள் இருக்கு. அப்படி இருக்கும்
போது நாம் அவளை பின்தொடர்வதோ அல்லது வற்புறுத்துவதோ கீழ்தரமான செயல். அப்படி அவள் மனதில்
யாருமில்லை என்று தெரிந்தால் உங்கள் காதலை சற்றும் தாமதமின்றி அவளிடம் சொல்லிவிடுங்கள்.
முதலில் காதலை சொல்லி அவள் மறுத்துவிட்டாள் என்னாகும் என்று பயப்படுவதைவிட, நம் காதலை
அவளிடம் சொல்லிவிட்டு அவள் மறுத்தாலும் பின்னர் நம் செயல்களால் அவள் மனதில் இடம் பிடித்து
விடலாம். அதைவிடுத்து எப்போதுமே ஒருதலையாகவே காதலித்து வருவதை ஏற்கமுடியாது.
முதலில் காதலை அவளிடம் சொல்லுங்கள். எந்த பெண்ணும் முதலில்
எந்த பதிலும் சொல்லமாட்டாள். நீங்கள் உங்கள் காதலை எப்படி வெளிப்படுத்துகிறீர்கள் எங்கு
சொல்கிறீர்கள் என்பது மிக முக்கியம். ஆனால் ஒரு விஷயம், எதுவானாலும் சரி, உங்கள் காதலை
நீங்களே நேரில் சொல்லுங்கள். தொலைப்பேசியிலோ, அல்லது கடிதம் வாயிலாகவே அல்லது அவள்
தோழிகள் மூலமோ அல்லது வேறு எந்த முறையிலோ சொல்ல வேண்டாம். காதலிக்கும் பெண்ணின் கண்ணைப்பார்த்து
தன் காதலை சொல்ல முடியாதவனுக்கு காதலே வேண்டாம் என்பேன் நான்.
உங்கள் காதலை நீங்கள் சொன்னபின்னர் அவள் எதும் பேசாமல்தான்
இருப்பாள். நீங்களும் எதுவும் பேசாமல் வந்துவிடுங்கள். அவளை மறுபடியும் பார்க்கும்போது
அவளிடம் எதும் பேசாதீர்கள். அவளிடம் பேசுவது போல செல்லுங்கள். அவளும் அதைதான் எதிர்பார்ப்பாள்.
அதாவது நீங்கள் வந்து அவளிடம் பேசப்போகிறீர்கள் என்று அவள் நினைப்பாள். ஆனால் நீங்கள்
அவள் அருகில் இருந்தாலும் அவளிடம் எதும் பேசாதீர்கள். அவள் தனிமையிலிருந்தாலும் சரி,
தோழிகளுடம் இருந்தாலும் சரி. ஆனால் வழக்கம்போல் நீங்கள் அவளை எப்போதும் பார்த்துட்டே
இருங்க. அவள் கண்கள் என்ன சொல்லுதுனு தெரியும். உங்கள் மீது கோபமாக இருக்கிறாளா இல்லை
உங்கள் காதலை அவள் கண்டுக்கவே இல்லையா இல்லை வேறு என்ன நினைக்கிறாள் என்பதை அந்த மௌன
வார்த்தைகளில் அவள் கண்களின் பாஷைகளில் நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம்.
வழக்கத்தைவிட இனிமேல் அவள் கண்களில் நீங்கள் அதிகம் முறை
தென்பட வேண்டும். அவள் இருக்கும் இடம் உங்கள் இருப்பிடமாக இருக்க வேண்டும். நீங்கள்
அவளை பார்க்க வேண்டும் என்பதற்காக அல்ல, அவள் உங்களை பார்க்க வேண்டும் என்பதற்காக.
கொஞ்சம் நாட்கள் கழித்து அவளிடம் அவள் பதிலை கேளுங்கள்.
அவள் அப்போதும் மாட்டேன் என்றுதான் சொல்வாள். இப்போதும் நீங்கள் எதும் பேசாமல் வந்துவிடுங்கள்.
முடிஞ்சா ஒரு தேங்க்ஸ் சொல்லிட்டு வாங்க. எதுக்கு தேங்க்ஸ் சொல்லனும்னு கேட்கறீங்கதானே.
அட அத அவள் யோசிச்சு பார்க்கட்டும் பாஸ். நாம் முடியாதுனு சொன்னதுக்கு தேங்க்ஸ் சொல்றானே
இதுன்னு என்ன அர்த்தம்னு அவ குழம்பட்டும். உங்களை அவளுக்கு பிடிச்சு இருக்கோ இல்லையோ,
அவ உங்களை பற்றி நீங்க சொன்ன இந்த பதிலை நினைச்சு அன்னைக்கு கொஞ்ச நேரமாச்சும் யோசிச்சுட்டே
இருப்பா.
அவள் மனதில் இடம் பிடிக்க என்ன வழி தெரியுமா. அவள் அதிகம்
உங்களை பற்றி நினைத்துக்கொண்டே இருக்க வேண்டும். அவள் உங்களை வெறுத்தாலும் உங்களை அதிகமாக
வெறுக்க வேண்டும். அப்போதுதான் அவள் உங்களை எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறாள்
என்று அர்த்தம்.
அவள் மனதில் இடம்பிடிக்கிறேன்
என்று கையை அவள் முன்னால் அறுத்துப்பது, கதாநாயகன் மாதிரி சாகசம் செய்வது, இல்லை அவளுக்கு
பிடிச்ச விஷயத்தை உங்களுக்கும் பிடிச்ச மாதிரி காட்டிப்பது இப்படி எதுவும் செய்ய வேண்டாம்.
ஏன்னா, இந்த மாதிரி நடிப்புகளை இப்போதைய பெண்கள் விரும்புவதில்லை. யதார்த்தமான, உண்மையான
மனதைதான் எந்த ஒரு பெண்ணும் எதிர் நொக்கியிருப்பாள். நீங்கள் யதார்த்தமாக நடந்துக்கொண்டு
அதை அவள் உணரும்படி செய்தாலே போதும். இதைவிட இன்னொரு விஷயம். முடிந்தால், அவளிடம் காதலை
சொன்ன ஒரு வாரத்தில் அவள் வீட்டிற்கு சென்று அவள் பெற்றொரிடமும் உங்கள் காதலை சொல்லுங்கள்.
மிக முக்கியமாக, நீங்கள் அவளை ஒருதலையாக காதலிப்பதை முதலில் சொல்லுங்கள். எல்லா வீட்டிலும்
ஒரு பெண்மீது அதீத மரியாதை வைத்து இருப்பார்கள். அது உங்களால் கெட்டுவிட கூடாது. உங்கள்
மனதும் உங்கள் காதலும் உண்மையானது என்பதை உங்களால்
முடிந்தவரை அவர்களுக்கு சொல்லி புரிய வையுங்கள். காதலை வெறும் காதலாக பார்ப்பதால்தான்
அனைவரும் அவளிடம் சொல்வதிலேயே குறியாக இருக்கிறார்கள். காதலை கல்யாணம் என்று நினைத்து
அவள் பெற்றொரிடம் முதலில் பேசுங்கள். எப்படியானாலும் ஒரு நாள் பெண் கேட்டு போகத்தானே
போறீங்க. அதை இப்பவே போனால் என்ன. அதைவிட முக்கியமான விஷயம் ….
அவள் பெற்றொரிடம் பேசும் முன்னர் உங்களால் உங்கள் சொந்த
காலில் நிற்கும் தகுதி இருக்கிறதா என்று பாருங்கள். அதுதான் மிக முக்கியம். உங்கள்
செலவிற்கே நீங்கள் பெற்றொரையும் மற்றவர்களையும் சார்ந்து இருந்தால் அவளை எப்படி காப்பாற்றுவீர்கள்.
முதலில் இந்த சமூகத்தில் உங்களுக்கென ஒரு இடத்தை பிடிக்கப் பாருங்கள். பின்னர் அவள்
மனதில் இடம் பிடிக்கலாம். தைரியமான ஆண்மகன் தான் அனைவருக்கும் பிடிக்கும். எதையும்
தைரியமாக கையாளுங்கள். நிச்சயம் அவள் மனதில் இடம் பிடிப்பீர்கள். வாழ்த்துக்கள் அன்பர்களே….
- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா
0 Comments:
Post a Comment