வைரமுத்துவின் தண்ணீர் தேசம் புத்தகத்தை அண்மையில் கொஞ்சம் புரட்டி பார்த்தேன். புல்லரித்துப்போனேன். என்னை ஈர்த்த சில வரிகளை இங்கே பதிந்து செல்கிறேன்...
இந்தப் பிரபஞ்சமே
பொதுவென்று கொள்ளாமல்
மனிதர்கள் மனைப்பட்டா
வாங்கும் போராட்டத்திலேயே
மரித்துப்போகிறார்கள்..
பணம் ஒரு விசித்திரமான
மாயமான்.. அது தன்னைத்
துரத்துபவனுக்குக்
குட்டு போட்டுவிட்டு
ஓடிக்கொண்டேயிருக்கிறது.
குட்டிகளில் திருப்தி அடையாத
மனிதன் தாய்மானைப் பிடிக்கும்
வேட்டையில் தவிக்கத் தவிக்க
ஓடிச் செத்துப் போகிறான்…
பெரிதும் பெண்கள் ஆராதிப்பது
அதிரப்புணரும்
அதிரப்புணரும்
அந்நிகழ்வை அல்ல.
அவர்கள் அதிகம் விரும்புவது
இந்த நேசம்
நிஜம் என்னும் நினைப்பை.
வாழ்நாளில் 66,000 லிட்டர்
தண்ணீர் குடித்தான்.
ஆயுளில் மூன்றில் ஒருபங்கு
தூங்கினான்.
நான்குகோடி முறை
இமைத்தான்.
நாலரை லட்சம் டன்
ரத்தத்தை இதயத்தால்
இறைக்கவைத்தான்.
35 ஆயிரம் கிலோ உணவு
அதாவது எடையில் இந்திய
யானைகள் ஏழு தின்றான்.
மரித்துப் போனான்.
இதற்குத்தானா மனிதப்பிறவி?
யாருக்கும் இங்கே
குறைந்தபட்ச
லட்சியம்கூட இல்லை…
செருப்புக் கடித்துச்
செத்துபோகும்
தேகங்களை
வளர்த்துவிட்டோம்.
தந்திவந்தால் இறந்துபோகும்
இதயங்களை
வளர்த்துவிட்டோம்.
தேகம் வன்மை செய்து இதயம்
செம்மை செய்யும் பயிற்சிகள்
இல்லை..
- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா
0 Comments:
Post a Comment