உயிரிலே எனது உயிரிலே

Saturday, September 08, 2012




உயிரிலே எனது உயிரிலே
ஒரு துளி தீயை உதறினாய்
உணர்விலே எனது உணர்விலே
அணுவென உடைந்து சிதறினாய்
ஏனெனை மறுத்து போகிறாய்
கானல் நீரோடு சேர்கிறாய்
கொடுத்ததாய் சொன்ன இதயத்தை
திருப்பி நான் வாங்க மாட்டேனே..
உயிரிலே எனது உயிரிலே
ஒரு துளி தீயை உதறினாய்
உணர்விலே எனது உணர்விலே
அணுவென உடைந்து சிதறினாய்
அருகினில் உள்ள தூரமே
அலைகடல் தீண்டும் வானமே
நேசிக்க நெஞ்சம் ரண்டு
போதாதா போதாதா நீ சொல்லு
நேசமும் ரெண்டாம் முறை
வாராதா கூடாதா நீ சொல்லு
இது நடந்திட கூடுமா
இரு துருவங்கள் சேருமா
உச்சரித்து நீயும் விலக
தத்தளித்து நானும் வருக
என்ன செய்வேனோ
உயிரிலே எனது உயிரிலே
ஒரு துளி தீயை உதறினாய்
உணர்விலே எனது உணர்விலே
அணுவென உடைந்து சிதறினாய்

ஏதோ
ஒன்று என்னைத் தடுக்குதே
பெண்தானே நீ என்று முறைக்குதே
என்னுள்ளே காயங்கள்
ஆராமல் தீராமல் நின்றேனே
விசிரியாய் உன் கைகள்
வந்தாலும் வாங்காமல் சென்றேனே
வா.. வந்து எனை சேர்ந்திடு
என் தோள்களில் தேய்ந்திடு
சொல்லவந்தேன் சொல்லி முடித்தேன்
வரும் திசை பார்த்து இருப்பேன்
நாட்கள் போனாலும்

ஏனெனை மறுத்து போகிறாய்
கானல் நீரோடு சேர்கிறாய்
கொடுத்ததாய் சொன்ன இதயத்தை
திருப்பி நான் வாங்க மாட்டேனே….

திரைப்படம்: வேட்டையாடு விளையாடு
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஸ்ரீனிவாஸ், மகாலட்சுமி அய்யர்
வரிகள்: தாமரை


- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: