Rab Ne Bana Di Jodi

Saturday, September 01, 2012



          நேற்றிரவு இந்த இந்தி திரைப்படத்தை பார்த்தேன். அவ்வளவு எளிதாக ஒரு திரைப்படத்தைப் பற்றி என் வலையில் நான் எழுதிடமாட்டேன். இப்படம் என்னை வெகுவாக கவர்ந்துவிட்டது. பாடல்களும் ரொம்ப இனிமையாக இருக்கிறது. காதலை அவ்வளவு அருமையாக செதுக்கி சொல்லியிருக்கிறார்கள். அதுவும் ஷாருக்கானின் நடிப்பு பிரமாதம். சில காட்சிகள் மனதில் இன்னமும் ஒட்டுக்கொண்டிருக்கிறது. புரியாத மொழியாக இருந்தாலும் பாடல் வரிகள் சிலவற்றை மனம் அசைப்போட்டுக்கொண்டே இருக்கிறது. திரைப்படம் பார்த்ததும் மனம் ரொம்பவே லேசாக மாறிப்போனது. ரொம்ப நாட்களுக்கு பிறகு என் மனதை லேசாக்கிய திரைப்படம் இது. வாய்ப்பு கிடைத்தால் திரைப்படத்தை நீங்களும் ஒருமுறை பாருங்களேன்.


- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: