இந்த உலகத்தில் பொதுவாக நடைமுறையில் இருக்கும் ஒரு விஷயம் தான் இந்த வாரிசு விஷயம்.
தொழிலதிபரின் வாரிசு தொழிலதிபராகிறான்.
அரசியல்வாதியின் வாரிசு அரசியல்வாதி ஆகிறான்.
ஆசிரியரின் வாரிசு ஆசிரியர் ஆகிறான்.
அதிகாரியின் வாரிசு அதிகாரி ஆகிறான்.
நடிகனின் வாரிசு நடிகன் ஆகிறான்.
கலைஞனின் வாரிசு கலைஞன் ஆகிறான்.
அதே போல
ஒரு ஏழையின் வாரிசு ஏழையாக ஆகிறான்.
இதுதான் இன்று உலகத்தில் இருந்துவரும் வழக்கம். ஏழையின் வாரிசு ஒருபோதும் வாழ்க்கையில் உயர இவர்களைப்போன்றோர் விரும்புவதில்லை. இது பல நூற்றாண்டுகளாய் இவ்வுலகில் இருந்துவரும் கொடுமைதான். இதில் சில காலமாகத்தான் அதீத மாற்றங்களை காணமுடிகிறது. வாய்ப்புகளுக்காக காத்திருந்த காலங்கள் மலையேறிவிட்டன. வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொண்டு முன்னேறும் எண்ணம் நம் ஏழை மக்களின் மத்தியில் வந்துவிட்டது. இருப்பினும் அவர்களின் முன்னேற்றத்திற்கான உதவிகள்தான் இன்னும் அவர்களை சரிவர சென்று சேரவில்லை.
“ஏழையாய் பிறந்தது உன் குற்றமில்லை
ஆனால்,
ஏழையாய் இறந்தால் அது நிச்சயம் உன் குற்றம்தான்” என்று படித்திருக்கேன்.
அனைவரும் சமமாய் இருக்க வேண்டும் என்பது விருப்பம். ஆனால் ஏற்றம் தாழ்வு நிறைந்ததுதான் இவ்வுலக வாழ்க்கை என்பது கசப்பான உண்மை என்றானபோது அதை மாற்ற முடிந்தவரை முயல்வோமே. முன்னேற துடிக்கும் வசதியற்ற இளைய தலைமுறைக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்து அவர்கள் வாழ்விலும் கொஞ்சம் விளக்கேற்ற முயல்வோமே..
- அன்புடன்
****தினேஷ்மாயா****
0 Comments:
Post a Comment