என் வலையில் அதிகம் திரைப்படங்களைப் பற்றி
அதிகம் நான் எழுதியதில்லை. “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” எனும் பாரதியின் வரிகளை
மனதில் கொண்டு, நான் ரசித்த திரைப்படங்களை இங்கே கொஞ்சம் உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள
விரும்புகிறேன். திரைப்படத்தின் கதையையோ, திரைக்கதையையோ, அதன் விமர்சனத்தையோ நான் இங்கே
எழுதப் போவதில்லை. திரைப்படத்தில் நான் ரசித்த விஷயங்களை, என்னை பாதித்த விஷயங்களை
பதிவுசெய்ய விரும்புகிறேன். சமீபத்தில் நான் பார்த்த முகமூடி திரைப்படத்தில் இருந்து
என் இப்பயணத்தை துவங்குகிறேன்.
எந்தவித எதிர்பார்ப்புமின்றி இப்படத்திற்கு சென்றேன்.
படத்தின் TITLE-ஐ BATMAN திரைப்படத்தின் TITLE போல முதலில் காட்டினார்கள். அப்போதே
புரிந்துவிட்டது, இது அதுமாதிரியான ஒரு கதைதான் என்று. BRUCE LEE –அவர்களுக்கு இப்படத்தை
சமர்ப்பணம் செய்தார் மிஷ்கின். முதலிலேயே எனக்கு சற்று நெருடலாய் தெரிந்த விஷயம் என்னவேன்றால்,
படத்தின் கதாபாத்திரம் முதல் இயக்குனர் வரை அனைவரின் பெயர்களையும் ஆங்கிலத்தில் மட்டுமே
போட்டனர். வழக்கமாக அனைத்து தமிழ் படங்களிலும் ஆங்கிலம், தமிழ் இரண்டுமே கலந்து இருக்கும்.
இதில் முழுக்க ஆங்கிலத்திலேயே இருந்தது மனதை கொஞ்சம் செருட செய்தது. வழக்கமான மிஷ்கின்
திரைப்படம்தான் இது. இவர் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு செய்த செலவை கொஞ்சம் LIGHTS வாங்க
செலவு செய்திருக்கலாம். திரைப்படத்தின் 90% காட்சிகள் இரவில் நடப்பது போன்ற காட்சிகள்.
ஆனாலும் ஒளிப்பதிவாளரின் திறமையால் அனைத்து காட்சிகளையும் ரசிக்க முடிந்தது. வாய மூடி
சும்மா இருடா பாடல் கண்ணுக்கும் காதுக்கும் இனிமையை அளிக்கிறது. எனக்கு தெரிந்து இந்த
பாடலில் மட்டுமே அவர்கள் அதிகமான வெளிச்சத்தை படத்தில் காட்டியிருக்கிறார்கள் என்று
நினைக்கிறேன். சண்டை காட்சிகள் அனைத்தும் அருமை. மிஷ்கின் திரைப்படத்தில் வரும் டாஸ்மாக்
பாடல் இதிலும் மறக்காமல் இடம் பிடித்து இருக்கு. அஞ்சாதே திரைப்படத்தின் கண்ணதாசன்
காரைக்குடி பாடல் போல இதில் நாட்டுல நம்ம ரேட்டுல பாடல் இனிக்கிறது.
“
போதை இல்லாத சந்தோஷமா
ராஜா இல்லாத சங்கீதமா? ” என்று இந்த பாடலில் வரும் வரிகள் என்னை அதிகம் ரசிக்கவைத்தது. இளையராஜாவை இவர் புகழ்ந்திருப்பது அனைவருக்கும் இதில் வெளிப்படையாகவே தெரிகிறது. இந்த பாடலை எழுதி பாடியவர் மிஷ்கின் தான். வாயமூடி சும்மா இருடா பாடலில் சில வரிகள் மனதில் நிற்கிறது.
” ஓயாமலே பெய்கின்றதே
என் வானில் ஏன் இந்த காதல் ”
“கன்னம் சுருங்கிட நீயும்,
மீசை நரைத்திட நானும்,
வாழ்வின் கரைகளைக் காணும்
காலம் அருகினில் தானோ? ”
“ கண்மூடிடும் அவ்வேளையும், உன் கண்ணில் இன்பங்கள் காண்பேன் ! ”
ராஜா இல்லாத சங்கீதமா? ” என்று இந்த பாடலில் வரும் வரிகள் என்னை அதிகம் ரசிக்கவைத்தது. இளையராஜாவை இவர் புகழ்ந்திருப்பது அனைவருக்கும் இதில் வெளிப்படையாகவே தெரிகிறது. இந்த பாடலை எழுதி பாடியவர் மிஷ்கின் தான். வாயமூடி சும்மா இருடா பாடலில் சில வரிகள் மனதில் நிற்கிறது.
” ஓயாமலே பெய்கின்றதே
என் வானில் ஏன் இந்த காதல் ”
“கன்னம் சுருங்கிட நீயும்,
மீசை நரைத்திட நானும்,
வாழ்வின் கரைகளைக் காணும்
காலம் அருகினில் தானோ? ”
“ கண்மூடிடும் அவ்வேளையும், உன் கண்ணில் இன்பங்கள் காண்பேன் ! ”
மிஷ்கினின்
திரைப்படங்களில் பல Shots – அந்த குறிப்பிட்ட சீனில் நடிப்பவரின் முகங்களை காட்டாமல்
கால்களோடு நிறுத்திக்கொள்வார் ஒளிப்பதிவாளர். அது இப்படத்திலும் தொடர்ந்தது. மிஷ்கினுக்கே
உரிதான Reverse Shots இந்த படத்திலும் ஆங்காங்கே பார்க்க முடிந்தது. அஞ்சாதே படத்தில்
குருவி என்றொரு பாத்திரம் வந்ததுபோல, இந்த படத்திலும் ஊனமாய் ஒரு கதாபாத்திரம் கொஞ்ச
நேரத்திற்கு வந்து போகிறார். எனக்கு இன்னொரு அஞ்சாதே படம் பார்த்த மாதிரி இருந்தது.
மற்றவர்கள் இப்படத்தை ரொம்பவே விமர்சித்து பேசியிருப்பதை சமீபத்தில் பல வலைத்தளங்களில்
படித்தேன். ஒரு படம் எடுப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. யார் வேண்டுமானலும் சுலபமாக
விமர்சித்துவிடலாம். ஆனால் அப்படி விமர்சிப்பவர்களை அனைவரையும் கவரும்படி ஒரு படத்தை
எடுக்க சொல்லுங்கள். அவர்களால் முடியாது. சொல்லப்போனால், சினிமா என்பது பல கலைகளையும்
உள்ளடக்கிய ஒரு கலை. ஒரு கலையால் ஒருவரை திருப்திபடுத்த முடியாது என்பதாலேயே ஆயக்கலைகள்
64 என்று பிரித்திருக்கிறார்கள். இதுவரை இவ்வுலகில் அனைத்து மக்களையும் மகிழ்விக்கும்படி
எந்தவொரு திரைப்படமும் வந்ததில்லை. அப்படி வரவும் முடியாது. காரணம், ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு ரசனை. உங்களுக்கு பிடித்த படங்களை ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள், மற்ற
படங்களை விமர்சிப்பதில் அர்த்தமில்லை. நிச்சயமாக ஒரு கலைஞனுக்கு பாராட்டுக்கள் எந்த
அளவிற்கு தேவையோ அந்த அளவிற்கு விமர்சனங்களும் தேவை அப்போதுதான் அவன் மேலே வர முடியும்.
அந்த விமர்சனத்தை ஆக்கப்பூர்வமானதாக அமைத்து கொடுப்பது சமூகத்தில் இருக்கும் எமது கடமை
என்று நினைக்கிறேன் நான்.
மீண்டும் சந்திப்போம்..
- அன்புடன்
****தினேஷ்மாயா****
0 Comments:
Post a Comment