ஒளிமயமான
எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல்
ஓசை காதில் விழுகிறது
ஒளிமயமான
எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
நால்வகை
மதமும் நாற்பது கோடி மாந்தரும்
வருகின்றார் - அந்த
நாயகன்
தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்
நால்வகை
மதமும் நாற்பது கோடி மாந்தரும்
வருகின்றார் - அந்த
நாயகன்
தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்
மாலை சூடி எங்கள் செல்வி
ஊர்வலம் வருகின்றாள்
வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க
என்றவர் பாடுகின்றார்
ஒளிமயமான
எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
குங்குமச்
சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக
- எங்கள்
கோவிலில்
வாழும் காவல் தெய்வம் கண்ணகியே
வருக
குங்குமச்
சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக
- எங்கள்
கோவிலில்
வாழும் காவல் தெய்வம் கண்ணகியே
வருக
மங்களச்
செல்வி அங்கயர்க்கண்ணி திருமகளே வருக
வாழும்
நாடும் வளரும் வீடும் மணம்
பெறவே வருக
ஒளிமயமான
எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல்
ஓசை காதில் விழுகிறது
ஒளிமயமான
எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
திரைப்படம்:
பச்சை விளக்கு
பாடியவர்கள்:
டி.எம். சௌந்தர்ராஜன், பி.
சுசீலா
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
வரிகள்:
கவிஞர் கண்ணதாசன்
- அன்புடன்
****தினேஷ்மாயா****
0 Comments:
Post a Comment