கடவுள் ஏன் கல்லானான்?
மனம்
கல்லாய்ப் போன
மனிதர்களாலே
கடவுள் ஏன் கல்லானான்?
மனம்
கல்லாய்ப் போன
மனிதர்களாலே
கடவுள் ஏன் கல்லானான்?
மனம்
கல்லாய்ப் போன
மனிதர்களாலே
கொடுமையைக் கண்டவன்
கண்ணையிழந்தான் - அதைக்
கோபித்துத் தடுத்தவன்
சொல்லையிழந்தான்
கொடுமையைக் கண்டவன்
கண்ணையிழந்தான் - அதைக்
கோபித்துத் தடுத்தவன்
சொல்லையிழந்தான்
இரக்கத்தை நினைத்தவன்
பொன்னையிழந்தான்
இரக்கத்தை நினைத்தவன்
பொன்னையிழந்தான் - இங்கு
எல்லோர்க்கும்
நல்லவன் தன்னையிழந்தான்
எல்லோர்க்கும்
நல்லவன் தன்னையிழந்தான்
கடவுள் ஏன் கல்லானான்?
மனம்
கல்லாய்ப் போன
மனிதர்களாலே
நெஞ்சுக்குத் தேவை
மனசாட்சி - அது
நீதி தேவனின் அரசாட்சி
நெஞ்சுக்குத் தேவை
மனசாட்சி - அது
நீதி தேவனின் அரசாட்சி
அத்தனை உண்மைக்கும்
அவன் சாட்சி
அத்தனை உண்மைக்கும்
அவன் சாட்சி - மக்கள்
அரங்கத்தில் வராது
அவன் சாட்சி
அரங்கத்தில் வராது
அவன் சாட்சி
கடவுள் ஏன் கல்லானான்?
மனம்
கல்லாய்ப் போன
மனிதர்களாலே
சதிச் செயல் செய்தவன்
புத்திசாலி - அதை
சகித்துக் கொண்டிருந்தவன்
குற்றவாளி
சதிச் செயல் செய்தவன்
புத்திசாலி - அதை
சகித்துக் கொண்டிருந்தவன்
குற்றவாளி
உண்மையைச் சொல்பவன்
சதிகாரன்
உண்மையைச் சொல்பவன்
சதிகாரன் - இது
உலகத்தில் ஆண்டவன்
அதிகாரம் - இது
உலகத்தில் ஆண்டவன்
அதிகாரம்
கடவுள் ஏன் கல்லானான்?
மனம்
கல்லாய்ப் போன
மனிதர்களாலே
கடவுள் ஏன் கல்லானான்?
மனம்
கல்லாய்ப் போன
மனிதர்களாலே
திரைப்படம்:
என் அண்ணன்
பாடியவர்:
டி.எம். சௌந்தர்ராஜன்
இசை: கே.வி. மஹாதேவன்
வரிகள்:
கவிஞர் கண்ணதாசன்
- அன்புடன்
****தினேஷ்மாயா****
0 Comments:
Post a Comment