நமது இமயம் இயக்கத்தின் சார்பாக, 02-Sep- 2012 அன்று, திண்டுக்கல் அருகில் பஞ்சம்பட்டி என்ற கிராமத்தில் இருக்கும் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு சென்று அவர்களுடன் ஓர் நாள் இருந்து, பல விளையாட்டு போட்டிகள் அவர்கட்கு நடத்தி அவர்களை மகிழ்வித்தோம். என் வாழ்நாளின் சில அற்புத தருணங்களில் நான் இதையும் சேர்த்துக்கொள்வேன்.
எனக்கு இதை நடத்தி முடிக்க,அனைத்து கட்டத்திலும் உறுதுணையாய் இருந்த
திரு. சிவக்குமார், திரு.குணா, திரு.சுரேந்தர், திரு.சிவா, இவர்களுக்கு நன்றிகள் பல.
மற்றும் பல நல்ல உள்ளங்கள் நமக்கு ஆதரவாய் பல உதவிகள் புரிந்தன. அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி..
அவர்களை பிரிந்து வர எங்களுக்கும் மனமில்லை, எங்களுக்கு விடையனுப்ப அவர்கட்கும் மனமில்லை. அவர்களோடு நாங்கள் வாழ்ந்த அந்த மகிழ்ச்சியான தருணங்களை இங்கே என் வலையில் பதிய விரும்புகிறேன்.
எங்களை வரவேற்க அவர்கள் முதலில் கூடியிருந்த அறை இது. எங்களுக்காக அவர்கள் இறைவனிடம் அன்போடு பிரார்த்தனை செய்தார்கள். இது ஒன்று போதுமே இறைவா. உன் அன்பை நாங்களும் பெற்றுவிட்டோம்..
அங்கிருந்த 80 பிள்ளைகளுக்கும் சான்றிதழ் வழங்கினோம். முதலாம் இடம், இரண்டாம் இடம் என்று சொல்லி அவர்களுக்கிடையில் பாகுபாடு வந்திரக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்தினோம். விளையாட்டு போட்டிகளில் கூட, முதலாம் இடம் என்று யாரையும் அறிவிக்கவில்லை. அனைவரும் வென்றனர் என்றே அவர்களிடம் சொன்னோம். இதுதான் அவர்களுக்காக நான் வடிவமைத்த சான்றிதழ். அடுத்தமுறை இன்னமும் சிறப்பாக செய்யனும்..
முதலில் வயது வாரியாக அனைத்து பிள்ளைகளுக்கும் கயிறு இழுக்கும் போட்டி நடத்தினோம். அனைவரும் ரொம்ப மகிழ்ச்சியாக கலந்துக்கிட்டாங்க.
இவர்கள் ஒன்றாவது முதல் ஐந்தாவது வரை படிக்கும் பிள்ளைகள். இவர்களை கட்டுப்படுத்துவதுதான் மிகப்பெரிய சவாலாக இருந்தது நமக்கு. இது அவர்களின் ஓட்டப்பந்தய போட்டி.
ஓட்டப்பந்தயத்தில் முதலாவதாக வந்த ஜெனிஃபர்..
வலது பக்கம் நீல நிற ஆடையில் இருப்பது நிஷா. வெற்றிப்பெற வேண்டும் என்கிற ஆர்வத்தில் நான் 1,2,...3... சொல்வதற்குள்ளேயே தன் போட்டியை தானே துவக்கிக்கொண்டாள்.. :)
நானும் திரு.சிவாவும் ஒரு விளையாட்டை மேற்பார்வையிடுகிறோம்..
வாயில் கரண்டியை பிடித்துக்கொண்டு, அதில் எலுமிச்சையை வைத்து நடக்கும் போட்டி. எல்லா போட்டிகளும் வழக்கமாய் நடத்துவதுதான், சிறுபிள்ளைத்தனமானது தான், ஆனால் அதை அனைவரும் ரசித்தோம்..
தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாய் கையில் அள்ளிக்கொண்டு,
சற்று தொலைவில் நிற்கும் இவர்களிடம் சென்று சேர்க்க வேண்டும். அனைவரும் தண்ணீரை,வைத்திருந்த வாளியில் ஊற்றியதைவிட கீழே ஊற்றியதுதான் அதிகம்..
குழந்தைகளோடு விளையாடுகையில் தானும் ஒரு குழந்தையாய் மாறிவிட்டார் நம் சிவா..
பலூனை உடைக்கும் விளையாட்டு. உண்மையை சொல்லனும்னா யாராலும் இதை எளிதாக உடைக்க முடியாது. அதனால் நான் கையில் ஒரு சிறு ஊசியை வைத்திருந்தேன். ஒரு சில நொடிகளுக்குப்பின் ஒவ்வொருத்தர் போட்டியிலும் பலூனை நான்தான் வெடித்து வந்தேன்..
இமயத்திற்காக நான் என் கையெழுத்தை மாற்றிவிட்டேன். இது என் கையெழுத்துதான், இமயத்திற்கு மட்டும்.
இமயத்திற்காக நாம் புதிதாய் ஒரு முத்திரை செய்தோம்..
நாம் வழங்கிய சான்றிதழ்..
பிள்ளைகளை இரண்டு குழுக்களாய் பிரித்து, அவர்களுக்குள் விவாதம் நடத்தினோம். திரு.குணா ஒரு குழுவோடும், திரு.சிவக்குமார் மற்றொரு குழுவோடும் சேர்ந்துக்கொண்டனர்..
திரு.சிவக்குமார் அவர்களின் குழு, நான் ஒரு முதல்வரானால் என்ன செய்வேன் என்ற தலைப்பில் விவாதித்தார்கள்..
திரு.குணா அவர்களின் குழுவினர், இயற்கை வளங்களை நாம் அழித்து வருவதால் வருங்காலத்தில் நாம் சந்திக்கப்போகும் பிரச்சனைகளைப் பற்றி விவாத்திதனர்.
நானும் திரு.சிவா அவர்களும் விவாதத்திற்கு நடுவராய் இருந்தோம். எங்களுக்கு பின்னால் நின்றிருப்பவர் திரு,சுரேந்தர்.
பிள்ளைகளுக்கு பரிசு வழங்கவுன், சான்றிதழ் வழங்கவும் சிறப்பு விருந்தினர் என்று யாரையும் அழைக்கவில்லை. உண்மையான அன்போடும், சேவை மனதோடும் நம்முடன் வந்திருந்த நல்ல உள்ளங்களையே நாம் சிறப்பு விருந்தினராக்கி அவர்களை கவுரவித்தோம்.
இது ஹெலம் மேடம். நாம் சென்ற இந்த இல்லத்தின் காப்பாளர். இவர்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி..
இவையனைத்தும் அவர்களுக்கும் எங்களுக்கும் என்றும் இனிமையாய் மனதில் நிற்கும் தருணங்கள்...
இறைவனின் விளையாட்டை பாருங்களேன். ஆதரவற்ற குழந்தைகளின் வாழ்வில்தான் அதிக சோகம் இருக்கும். அதுவும் இந்த சிறுவயதில். ஆனால், நாம் அவர்களுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும் நம் வாழ்வின் சோகங்களை மறந்துவிடுகிறோம். என் பள்ளிப்பருவத்தில் சில மணிநேரம் நான் வாழ்ந்துவிட்டு வந்தேன். அவர்கள் எங்களுக்கு பரிசாக இவ்வுலகில் எவ்வளவி விலை கொடுத்தாலும் கிடைக்காத அவர்களின் அன்பை கொடுத்தார்கள்.
இக்குழந்தைகளும், இதுப்போன்ற எண்ணற்ற குழந்தைகளும் எந்த குறையும் இன்றி இன்புற்றிருக்க இறைவனை பிரார்த்திக்கிறோம், இவர்கள் போன்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க நல்ல மனம் படைத்தவர்கள் முன் வரவேண்டும்.
இப்போன்றோர்க்கு, என்றும் நாம் நமது இமயம் இயக்கத்தின் சார்பாக நம்மால் இயன்ற சேவையினை என்றும் தொடர்ந்து அளிப்போம்.. உங்களால் இயன்ற உதவியினை நம் இமயம் இயக்கத்திற்கு அளியுங்கள்..
IMAYAM FOUNDATION - TOGETHER WE CAN...
- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****
0 Comments:
Post a Comment