காதல் செய்யாதீர்கள்..

Tuesday, April 06, 2010




  • காதல் செய்தால் பாவம்,
    பெண்மை எல்லாம் மாயம்,
    உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே !!!

  • அட பொன்னான மனசே
    பூவான மனசே
    வெக்காத பொன்னுமேல ஆச..
    நீ வெக்காத பொன்னுமேல ஆச.. !!!

  • அவள் பறந்து போனாளே..
    என்னை மறந்து போனாளே.. !!!

  • யாருக்காக இது யாருக்காக...
    இந்த மாளிகை வசந்த மாளிகை
    காதல் ஓவியம் கலைந்த மாளிகை...
    காதலே போ போ..
    சாதலே வா வா.. !!!

  • எங்கிருந்தாலும் வாழ்க..
    உன் இதயம்
    அமைதியில் வாழ்க.. !!!

  • நினைவுகள் நெஞ்சினில்
    புதைந்ததினால்..
    நெருப்பால் எந்தன் நெஞ்சை
    சுடுகின்றேன்.. !!!
இதுபோன்ற பாடல்கள் என்றுமே வந்துக் கொண்டுதான் இருக்கிறது..
காதல் தோல்வி என்பது காதல் இருக்கும் வரை தொடர்ந்து கொண்டேயிருக்கும்..

அட முட்டாள் ஆண்களே...
கொஞ்சம் கண் திறந்துப் பாருங்கள்... உங்கள் காதலை புரிந்துக் கொள்ளாத ஒரு பெண்ணிற்காக ஏன் உங்கள் வாழ்கையினை வீணாக்குகிறீர்கள்.. உங்கள் காதல் உண்மையானதாக இருந்தால் அவள் என்றாவது ஒரு நாள் உன்னை தேடி வருவாள்.. அது வரை அவளை நினைத்து வருந்துவதைவிட உன் வாழ்க்கையை பார்.. 

இன்னொரு வேண்டுகோள்..

முடிந்தவரை காதலில் விழுவதை தவிர்க்க பார்.. விழுந்தால் எழ முடியாத பள்ளம் என்று தெரிந்தும் ஏன் அதில் நீயே தேடிப் போய் விழுகின்றாய்...???

முழிச்சுக்கோ... SUNRISE குடிச்சுக்கோ... காதலை மட்டும் கனவிலும்கூட
நினைத்துப் பார்க்காதே..

அன்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: