முதன் முதலில் பார்த்தேன்
காதல் வந்ததே
எனை மறந்து எந்தன்
நிழல் போகுதே
என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
எங்கே எந்தன் இதயம் அன்பே
வந்து சேர்ந்ததா
முதன் முதலில் பார்த்தேன்
காதல் வந்ததே...
நந்தவனம் இதோ இங்கேதான்
நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன்
நல்லவேளை அன்பே உன்னால்தான்
நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்
நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்
நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்
முதற்பார்வை நெஞ்சில் என்றும் உயிர் வாழுமே
உயிர் வாழுமே...
முதன் முதலில் பார்த்தேன்
காதல் வந்ததே
உத்தரவே இன்றி உள்ளே வா
நீ வந்த நேரத்தில் நான் இல்லை என்னில்
அந்த நொடி அன்பே என் ஜீவன்
வேறெங்கு போனது பாரடி உன்னில்
உன்னைக் கண்ட நிமிசத்தில் உறைந்து நின்றேன்
மறுபடி ஒருமுறை பிறந்து வந்தேன்
உன்னைக் கண்ட நிமிசத்தில் உறைந்து நின்றேன்
மறுபடி ஒருமுறை பிறந்து வந்தேன்
என் சுவாசக் காற்றில் எல்லாம்
உன் ஞாபகம்.. உன் ஞாபகம்..
முதன் முதலில் பார்த்தேன்
காதல் வந்ததே
எனை மறந்து எந்தன்
நிழல் போகுதே
என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
எங்கே எந்தன் இதயம் அன்பே
வந்து சேர்ந்ததா
முதன் முதலில் பார்த்தேன்
காதல் வந்ததே
எனை மறந்து எந்தன்
நிழல் போகுதே...
படம் :ஆஹா
இசை : தேவா
இந்த பாடலை நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதுதான் முதலில் கேட்டேன்.. அநேகமாக அப்போதுதான் இப்படம் வெளிவந்திருக்கும்...பாடலை கேட்டதுமே அந்த விடலை பருவத்தில், அரும்பு மீசை துளிர்விட ஆரம்பித்த வயதில், மனம் காற்றில் பறந்தது.. காதல் என்றால் என்ன என்பது அப்போது எனக்கு கொஞ்சம் புரிந்திருந்தது.. என்னவள் என்று வருவாள் என்பதை நினைத்து நினைத்து மனம் காற்றில் மிதந்துக் கொண்டிருந்த காலம் அது.. என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லை.. என்னவள் எங்கே இருக்கிறாள் என்று இன்றுவரை தெரியவேயில்லை..
- தினேஷ்மாயா
0 Comments:
Post a Comment