பசுமை நினைவுகள்...
அப்ப நான் 10th படிச்சிட்டு இருந்தேன்.. அதை காதல் என்று சொல்ல முடியாது.. ஒருவித ஈர்ப்பு என்று சொல்லலாம்.. அவள் மீது ஓர் ஈர்ப்பு.. My First Crush .. இப்படியும்கூட சொல்லலாம்.. அவள் என் Class தான்.. அவள் மதிய நேரத்தில் சாப்பிடும் போது அதை ரகசியமாக இருந்து ரசித்திருக்கிறேன்.. அவள் தேர்வுதாளை அவள் பார்க்கும் முன்னாடியே திருட்டுத்தனமாய் எடுத்து பார்த்திருக்கிறேன்.. அவள் சீவிப் போட்ட பென்சில் துகள்களை சேகரித்திருக்கிறேன்.. அவள் கிழித்தெறிந்த காகிதம் இன்னமும் எங்காவது ஒரு மூளையில் வீட்டில் என் அறையில் கிடக்கும்.. அவளுக்கே தெரியாமல் அவள் புத்தகத்தின், முதல் பக்கத்தை அவளின் பெயரோடும் அவள் கையெழுத்தோடும், கிழித்து வைத்திருந்தேன்.. P.Et Period-ல அவள் இருக்கும் பக்கம் அதிகம் முறை Football-ஐ வேண்டுமென்றே அடித்திருக்கிறேன்.. காலையில் Prayer-ன் போது அவளை மட்டுமே பார்த்திருந்து Sir-இடம் மாட்டி இருக்கிறேன்.. அவ வரும் ஆட்டோ நம்பர் இன்னமும் நினைவிருக்கிறது.. TMU 9742.. யாருக்கு தெரியும் இது.. ஒருவேளை என் நண்பர்கள் இந்த வலைப்பக்கத்தை படித்துப் பார்த்தாலும் எனக்கு கவலை இல்லை.. இந்த ஆட்டோ நம்பரை வைத்து அவளை கண்டு பிடிக்கும் அளவு அறிவும் நினைவும் யாருக்கும் இருக்காது.. அவகூட நிறைய சண்டை போட்டிருக்கிறேன்.. அவ School-க்கு வரும் முன்னரே அவளுக்கு முன்னால் சென்று வகுப்பறையில் காத்திருந்திருக்கிறேன்.. அவ சரியா 8 மணிக்குதான் வருவா.. Bag-ஐ தோளில் மாட்டிக்க மாட்டா.. கையில்தான் கொண்டு வருவா.. இன்னொரு கையில் Rose கலர் Lunch Bag, அதில் ஒரு சின்ன Tiffin Box, Brown கலர் Watter Bottle இருக்கும்.. நல்லா படிப்பா.. நான் அப்ப கொஞ்சம் மக்கு.. இப்ப மட்டும் என்ன.. இப்பவும்தான்.. என்ன மாதிரி மக்கு பசங்கள Geography Miss ஒரு Group Form செய்து அதில் இருப்பவர்களுக்குள் தினன் தினம் பாடங்களை சொல்லி பார்க்கனும்னு சொன்னாங்க.. அவளும் நானும் ஒரே Group.. அட அவ எங்க Group பசங்களுக்கு Leader-ங்க.. நாங்க Lunch time-ல அவகிட்ட Essay Questions-லாம் படிச்சிட்டு சொல்லனும்.. நான் வேணும்னே Late-ஆ வருவேன்.. அவ என்ன Miss - கிட்ட போட்டு தந்திடுவா.. அதெல்லாம் ஜாலியா எடுதுக்குவேன்.. ரொம்ப நல்ல பொன்னு.. அமைதியா இருப்பா.. எங்கேயும் தனியா போக மாட்டா.. அவ Friend-கூடதான் போவா.. ரெட்டை ஜடை பொட்டுட்டு வருவா.. Brown colour Ribbon மட்டும் போட்டுட்டு வருவா.. ஏன்னா அது எங்க School Uniform-ல ஒரு Part.. பூ எதுவும் வெச்சிக்க மாட்டா.. ஒரு நாள் School-ல Sports day நடந்துச்சி.. அவ 400m Race-ல 2nd-ஆ வந்தா.. எனக்கோ ஆச்சர்யம்.. இவ எப்படி ரெண்டாவதா வந்தானு.. அடிப்பாவி.. படிப்பில் தான்னு பாத்தா, விளையாட்டிலும் கலக்குறாளேனு எனக்குள்ளேயே நினைச்சுக்குவேன்.. நாங்க மட்டும் சும்மாவா.. Long Jump, Triple Jump, Javelin Throw, Discuss Throw, 800m, 1500m இதில் எல்லாத்திலும் Win பண்ணி இருக்கோம்ல.. ஒரே சந்தோஷம் என்னனா, அவள விட நான் அதிகமா ஒருபடி மேல இருப்பது இதில்தான்.. அப்பறம் Heigt-லயும் அவள விட நான்தான் அதிகம்... என்னவோ தெரியல.. அவள எனக்கு பிடிச்சிருந்துச்சி.. இதுதான் காதல்னு அப்ப அந்த சின்ன வயசில நினைச்சிட்டு இருந்தேன்.. அவள நான் பார்க்கும்போதெல்லாம் எனக்குள்ள ஒரு மாதிரி இருக்கும்.. அப்பறம் Chemistry Practical lab class-ல நான் ரொம்ப சீன் போடுவேன்.. அங்கே Solutions-லாம் ஒரே இடத்தில்தான் இருக்கும்.. எந்தவொரு Experiment செய்யனும்னாலும் அந்த ஒரே இடத்தில்தான் அனைவரும் வந்தாகனும்.. நான் Experiment எதுவும் செய்ய மாட்டேன்.. ஆனா Experiment செய்றேனு சொல்லிட்டு, Sulphuric Acid, Copper Sulphate, Hydrogen Sulphide Gas, Sodium Chloride Solution, இப்படி கையில் கிடைக்கும் எல்லாத்தையும் ஒன்னா Mix செய்வேன்.. அதில் என்னென்னமோ சேர்ப்பேன்.. Chalk piece, Ink, Water, Sand, Pencil Lead, Eraser-னு இப்படி கையில் எது கிடைச்சாலும் விடறதில்ல.. எல்லாத்தையும் ஒருவழி செஞ்சி ஒரு பெரிய ஆராய்ச்சியே நடத்துவேன்.. இந்த மாதிரி செஞ்சு பலமுறை Miss கிட்ட மாட்டியிருக்கேன்.. ஏன் நான் இதையெல்லம் செய்தேன்னா, அவ நான் செய்றத பார்த்து சிரிப்பா.. மனசு விட்டு சிரிப்பா.. அவ Friends-கிட்ட சொல்லி சொல்லி சிரிப்பா.. அவ சந்தோஷமா இருக்கறத பார்க்கறதுக்காக எதையும் செய்தேன்.. இப்படிதான் ஒரு நாள் எங்க Botany Miss , நான் Class-ல பேசிட்டே இருந்தேன்னு சொல்லி, அவங்க என்ன நடத்தினாங்களோ அதை Board-ல் போய் நடத்த சொன்னாங்க.. நான் திறுதிறுனு முழிச்சிட்டு இருந்தேன்.. எல்லாரும் சிரிக்க ஆரம்பிச்சாங்க.. அவளும் சிரிக்க ஆரம்பிச்சா.. அவ்ளோதான்.. நான் உடனே கிளம்பிபோய் Board-கிட்ட போனேன்.. என்ன பண்றதுனே தெரியல.. அங்கே போய் சும்மா நின்னுட்டு இருந்தேன்.. பசங்க எல்லாரும் ரொம்ப சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க.. என்ன பண்றதுனே தெரியாம Board-ல என்ன எழுதியிருந்துச்சோ அதை அப்படியே படிச்சிட்டு வந்துட்டேன்..Miss என்னை ரொம்ப பாராட்டினாங்க.. நான் சும்மா அவள் சிரிக்கிறதையும், அவளையும் முன்னாடியிருந்து பார்க்கலாம்னுதான் அங்கே போனேன்..எத்தனை நாள்தான் Last Bench-லேயே இருந்துக் கொண்டு First bench-அ பார்க்கிறது.. அப்பலாம் ஒரு நாள்கூட Leave போட்டதில்லங்க.. அவள எப்படி பார்க்காம இருக்க முடியும்.. அப்ப நான் பண்ணாத அட்டகாசமே இல்ல.. எப்ப பார்த்தாலும் எல்லர்கிட்டயும் ஜாலியா பேசிட்டு அரட்டை அடிச்சிட்டு மத்தவங்கள சிரிக்க வெச்சுகிட்டு இருந்தேன்.. படிக்கிறத தவிற மத்தது எல்லாம் பிடிச்சிருந்துச்சி.. ஒரு முறை எங்க பள்ளீயில் Zonal Football tournament-காக Practice எடுத்துகிட்டு இருந்தேன்.. அவ ஆட்டோவிற்காக Wait செஞ்சுட்டு இருந்தா.. அப்பதான் என்கிட்ட பேச ஆரம்பிச்சா.. எப்ப உனக்கு மேட்ச், இதுதான் அவ என்கிட்ட நட்பா பேச ஆரம்பிச்ச முதல் வார்த்தை.. நான் இன்னும் 2 நாள்-ல மேட்ச் இருக்குனு சொன்னேன்.. P.Et Sir பார்த்துட்டே இருந்தார்.. சரி நான் கிளம்பறேன்னு சொல்லிட்டு வந்தேன்.. Shoe Lase tight செய்துட்டு ஓட ஆரம்பிச்சேன்.. அவ என்னை கூப்பிட்டா.. நான் ஓடுவதை நிறுத்திட்டு அவளை திரும்பி பார்த்தேன்.. "All the Best" னு சொன்னா.. அவ அன்னைக்கு சொன்ன வார்த்தைதான் இன்றுவரை என் வாழ்வில் நான் நிறைய விஷயங்கள் சாதிக்க துணையாய் இருக்குனு மனசுக்குள்ள ஒரு நம்பிக்கை..
அவ சொன்னதும் நான் வியர்வையை துடைச்சுட்டு Thanks ரொம்ப Thanksனு சொல்லிட்டு ஓடி வந்துட்டேன்.. நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன்..அவளாகவே வந்து என்கிட்ட பேசினா.. எனக்கு All the Best வேற சொல்லி இருக்கா.. மறுநாள் கொஞ்சம் வேலை அதிகம் இருந்துச்சு.. நாளைக்கு மேட்ச்காக ரொம்ப Practice செய்துட்டு இருந்தோம்.. இதுதான் எனக்கு First Zonal Match.. Last year நான் school team-ல இல்ல.. இந்த வருஷம் Senior Level-ல நானும் Team-ல இருக்கேன்.. எனக்கு ரொம்ப பெருமையா இருந்துச்சி.. ரொம்ப சந்தோஷமாகவும் இருந்துச்சி.. நாளைக்கு மேட்ச் நடக்கறதால எல்லாருக்கும் Classes cancel. அவ நான் விளையாடுறத பார்க்க வருவானு தெரியும், அதான் ரொம்ப சந்தோஷமாக இருந்தேன்... Zonal Tournament ஆரம்பிச்சுச்சி.. என்ன கொடுமை சார் இது.. அன்று எங்கள் கூட மோதும் டீம் பார்க்க பெரிய ஆளுங்க போல இருந்தானுங்க.. ஆனா பத்தாவதுதான் படிக்கிறாங்கனு சொல்றாங்க.. அப்பதான் புரிந்தது நாமதான் இன்னமும் இப்படி வளராம இருக்கோம்னு.. சரி எங்க பசங்க எல்லாம் மனசில் தைரியத்தை வளர்த்துகிட்டு மேட்ச் டாஸ் கேட்க போனோம்.. நாங்க Kick எடுத்தோம்.. நல்லா ஆரம்பிச்சோம்.. அவங்க எல்லோரும் முரட்டுத்தனமா இருந்தானுங்க.. அவங்க கிட்ட வந்தாலே நாங்க பந்தை நிறுத்திவிடுவோம்.. எங்கே வந்து நம்மளை மோதி விடுவேனானு.. சொல்ல மறந்துட்டேனே.. நாங்க எல்லோரும் வெறும் சாதாரன Sports Shoe-தான் போட்டுட்டு இருந்தோம்.. ஆனா அவங்க Spikes Shoe போட்டுட்டு இருந்தாங்க.. அதிசமயா எங்களுக்கு கிடைச்ச Corner Shot-அ பயன்படுத்தி நான் ஒரு Goal அடிச்சேன்.. நாங்கதான் முதலில் கோல் அடித்தோம்... First half நாங்க லீட்-ல இருந்தோம்.. Break time-ல அவ அவ்ளோ கூட்டத்திலும் என்கிட்ட வந்து, கைகொடுத்து ரொம்ப நல்லா விளையாடினடா-னு சொல்லிட்டு போனா.. அவ வந்த போது, எனக்கு கை தந்த போது, அப்புறம் திரும்பி சென்ற போதும் நான் எதுவும் பேசவில்லை.. எல்லாம் ஒரு கனவு மாதிரி இருந்துச்சி எனக்கு..
முதல் முறையா அவள் கையை தொட்டிருகேன்.. I mean அவ கை கொடுத்து வாழ்த்திவிட்டு போனா.. அட போங்கப்பா.. நான் எங்க இருக்கேன்னு எனக்கே தெரியல... Break time up-னு refree விசில் அடிச்சார்.. நானும் ஒரே சந்தோஷமா இருந்தேன் அதனால ரொம்ப Enthu-வா Field-குள்ள போனேன்.. அப்ப அவங்க டீம்-ல Substitute-ஆ ஒருத்த வந்தான்.. பேர் தெரியாது.. ஆனா அவன் நம்பர் 37 இது மட்டும் இன்னும் நினைவிருக்கு.. எல்லாரையும் இடிச்சுதள்ளி ரொம்ப ஆக்ரோஷமா விளையாடினான்.. அவனும் ஒரு கோல் போட்டுட்டான்.. அவன் மோதியதால் எல்லா பசங்களும் ரொம்ப சோர்வாஇருந்தொம்.. எங்க P.Et Sir 2 நிமிஷம் Tie-Time கேட்டுட்டு எங்க குட பேச வந்தார்.. டேய் பசங்களா ரொம்ப மோதிக்காதீங்க டா.. நம்ம School-ல தான Zonal நடக்குது அதனால நாம Direct Semi finals-கு போய்டுவோம்டானு சொன்னார்.. அதுக்கு நான், இருக்கட்டும் சார் எங்களால முடிஞ்சவரை ட்ரை பண்றோம் சார்.. இன்னும் ஒரே கோல் அடிச்சிட்டா நாம Win ஆகிடிவோம்ல சார் என்றேன்.. அவர் சிரிச்சுகிட்டே என் கன்னத்தில் செல்லமாய் தட்டிவிட்டு சென்றுவிட்டார்..
இப்ப நான் என் Captainகிட்ட சொல்லி என் Position-அ மாத்திகிட்டேன்.. அந்த 37 நம்பர் பையன் இருக்கும் இடத்திற்கு கொஞ்சம் பக்கத்தில்.. நான் பசங்ககிட்ட சொல்லிட்டேன்.. மச்சி.. கோல் அடிக்கலனாலும் பரவாயில்லடா.. நல்லா Defense பண்ணுங்கடா.. கோல் மட்டும் போகாம பார்த்துக்கடா என்றேன்.. பசங்களும் ரொம்ப கஷ்டபட்டு அவங்ககிட்ட வரும் எல்லா Shot-ஐயும் எங்க Goal keeper கிட்ட தந்திடுவாங்க.. கடைசி 5 நிமிஷம் இருக்கும் போது, பந்து என்கிட்ட வந்துச்சு.. நான் வேகமாக ஓடிசென்று பந்தை எடுத்து கோல் போட ரொம்ப Try பண்ணேன்.. அந்த 37 நம்பர் பையன் வேகமா ஓடிவந்து என்னை இடிச்சான்.. நான் கிழே விழுந்துட்டேன்.. அவன் அப்பவும் நிக்காமல் பந்தை எடுக்க Try பண்ணான்.. தெரிஞ்சோ தெரியாமலோ என் காலை மிதிச்சுட்டான்.. அவன் போட்டுட்டு இருந்தது Spikes Shoe வேற.. என் கால் போச்சு.. அதே இடத்திலேயே அம்மானு கத்திட்டு கீழே படுத்துகிட்டேன்.. Referee ஒடி வந்து penalty shot தந்தார்.. எங்க Captain அதை ரொம்ப திறமையா கோலா மாத்திட்டான்.. கடைசில நாங்க 2-1 னு மேட்ச்-அ ஜெயிச்சுட்டோம்.. ஆனா அதே சமயத்தில என் காலில் ரத்தம் அதிகமா வந்திட்டு இருந்துச்சு..என்னால நடக்க முடியல.. நான் வலியில அழுதிட்டு இருந்தேன்.. அப்ப அவ அங்க ஓடி வந்தா.. அவள பார்த்ததும் நான் அழுவதை கொஞ்ச நேரம் நிறுத்தினேன்.. என் Friend என் Shoe-வ கலட்டினான்.. அப்ப வலி தாங்க முடியாம ரொம்ப கத்திட்டேன்.. கண்ல இருந்து ரொம்ப கண்ணீர் வந்துக் கொண்டிருந்தது.. என் கண்களில் இருந்து அல்ல.. அவள் கண்களில் இருந்து.. Sir எனக்கு First Aid Box-ல இருந்த Cotton-அ எடுத்து அடிபட்ட இடத்தை துடைத்தார்.. சும்மா சாதாரணமா cotton வெச்சுட்டு, போய் சீக்கிரமா ஒரு Auto கூப்பிடுங்கனு சொன்னார்.. நான் Hospital போய் 4 தையல் போட்டுகிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.. Sir, Friends வீட்டுக்கு வந்து என்னை விட்டுட்டு போனாங்க..
Zonal 5 நாள் நடக்கும்.. முதல் நாளிலேயே இப்படி அடிபட்டு கிடக்கிறேனே அப்படினா அவளை பார்க்க முடியாதுனு ரொம்ப வருத்த பட்டேன்.. மறுநாள், நான் வீட்டிலேயே படுத்திருந்தேன்.. மாலை பள்ளி முடிந்து மணி அடிக்கும் ஓசை எனக்குக் கேட்டது.. எங்க வீடு என் பள்ளியின் அருகில்தான் இருக்கிறது.. நானும் அவளை நினைத்துக் கொண்டிருந்தேன்.. மேட்ச் என்ன ஆகியிருக்கும் என்று தெரிந்து கொள்ளவும் ஆசையாக இருந்தேன்.. ஒரு அரை மணி நேரம் கழித்து, என் வீட்டின் முன் ஒரு ஆட்டோ வந்து நின்றது.. அம்மா போய் கேட்டை திறந்தாங்க.. அவளும் அவ Friend-ம் ஆட்டோவில் என் வீட்டிற்க்கு வந்தாங்க.. என்னால எழுந்து உட்கார முடியல.. ரொம்ப Tired-ஆ இருந்தேன்.. அம்மா அவங்களை உள்ளே கூட்டிட்டு வந்து தண்ணி தந்துட்டு என்கிட்ட கூட்டிட்டு வந்தாங்க.. நானும் அவளை பார்த்து ஒரு சின்னதாய் புன்னகையை பூத்தேன்.. ஆனால் அவள் முகத்தில் எந்தவித மாற்றமும் இல்லை.. மாறாக ஒருவித வருத்தம் தெரிந்தது.. இப்ப எப்படி Aunty இருக்கான் என்று அம்மாவிடம் கேட்டா.. பரவாயில்லைமா வலி அதிகமா இருக்குனு சொல்றான், சரியாக 2 வாரம் ஆகும்னு சொன்னாங்கனு அம்மா சொன்னாங்க.. அவ என்கிட்ட நல்லா இருக்கியா என்று கேட்டாள்.. நான் எதுவும் பேசாமல் தலையாட்டினேன்.. நல்லா சாப்பிடு, உடம்ப பார்த்துக்கோனு சொன்னா.. நானும் “ம். ரொம்ப Thanks. நீங்க விட்டுக்கு போகலியா. Time ஆச்சு என்றேன்..” அவளும் சரினு சொல்லிட்டு, அவ Bag-ல இருந்து ஒரு Greeting Card எடுத்து என்கிட்ட தந்தா.. GET WELL SOON என்று எழுதியிருந்தாள்.. அதை பார்த்ததுமே கண்ணீர் தானாய் வந்தது.. அவ கிளம்பும் போது என் நண்பர்கள் வீட்டிற்கு வந்தனர்.. இவளுக்கு நேரம் ஆனதால் இவளை நான் கிளம்ப சொன்னேன்.. இவளும் கிளம்பிப் போய்ட்டா..
2 வாரம் நான் School போகல.. அதுக்கப்புறம் என்னை 2 முறை அவ வந்து பார்த்துட்டு போனா.. அதில்தான் எங்க FRIENDSHIP வளர ஆரம்பம் ஆச்சு..
அவ Birthday நவம்பர்ல வரும்.. அவ வீட்டு போன் நம்பர் 1-ல முடியும்.. அவ எனக்கு ரொம்ப நல்ல தோழியா இருந்தா.. நான் தோழினு சொல்ல காரனம் இருக்கு.. என் மனசில் ஆசை இருந்தது.. அந்த சின்ன வயசில் எது காதல் எது ஈர்ப்பு என்று தெரியாதே.. அவ என்ன ரொம்ப ஊக்கப் படுத்தினா.. என்கிட்ட இருக்கும் திறமைகளை எனக்கு புரிய வைத்தாள்.. படிக்கவே வெறுப்பா இருக்கும் எனக்கு.. அதை அவ கிட்ட சொன்னப்போ எப்படி படிக்கனும்னு எனக்கு சொல்லிக் கொடுத்தா.. எனக்கும் Maths மட்டும்தான் ரொம்ப நல்லா வரும்.. அதை அவ அடிக்கடி சொல்லிக் காட்டி, உன்னால் மத்த பாடத்திலும் நல்லா வர முடியும்டா என்று ஊக்கப் படுத்துவா.. அதே சமயம் படிப்பை தவிர மற்ற விஷயங்களிலும் எனக்குள் இருந்த திறமையை எனக்கு வெளிச்சம் போட்டுக் காட்டினாள்.. கவிதை என்ற பெயரில் ஏதோ எழுதி அவளிடன் கட்டினேன்.. அவ என்னை ரொம்ப பாராட்டினா.. அவ சொல்லித்தான் என்னால் கவிதை எழுத முடியும் என்பதை தெரிந்துக் கொண்டேன்.. நான் அவளிடம் முதன்முதலில் எழுதி காட்டிய கவிதையின் பெயர் “ சுமை” இன்னமும் அந்த கவிதை நினைவில் இருக்கிறது.. என் பிறந்த நாளின் போது எனக்கு ஒரு டைரியை பரிசளித்தாள்.. Scribbling Pad அது.. என்னை பத்தி அது முழுவதும் எழுதி தந்திருந்தா.. 20 பக்கங்களில் என்னைப் பற்றி எழுதியிருந்தா.. என் வாழ்வில் மறக்க முடியாத பரிசு.. நான் கொஞ்சமும் எதிர்பாராத பரிசு.. இன்னமும் என் வீட்டில் பத்திரமாக இருக்கிறது அது.. காதலைவிட நட்புதான் எங்களுக்குள் அதிகம் இருந்தது.. என் மனம்தான் காதல் என்று அதை தவறாக புரிந்துக் கொண்டிருந்தது.. நட்பின் இலக்கணமாய் இருந்தாள் அவள்.. பள்ளி முடியும் நேரம் வந்தது.. Public Exam இன்னும் ஒரு மாத்திற்க்குள் வரவிருக்கிறது.. பள்ளியின் கடைசி நாளில் அவள் என்னிடம் 2 மணிநேரம் தனியாக பேசினாள்.. அடுத்த வருடம் +1 வேற School-ல் சேரப் போவதாக சொல்லி Feel பண்ணா.. எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.. எனக்கு ரொம்ப Advice செஞ்சா.. அவ அன்று சொன்ன வார்த்தகள்தான் இன்னமும் என்னை துடிப்புடன் வைத்திருக்க உதவுகிறது.. Motivation Books படித்தாலும் இத்தனை மனத் தெளிவு வந்திருக்காது.. அவள் எனக்கு ஒரு Black Colour Hero Pen பரிசா தந்தா.. அதைதான் என் Public Exam-ல Use செஞ்சேன்.. நீங்க நம்புவீங்களானு தெரியல.. கிட்டதட்ட 6 வருஷம் ஆகிடுச்சி.. அவ தந்த அந்த Hero pen இன்னமும் என் இதயத்தின் பக்கத்திலேயே இருக்கிறது.. இன்னமும் அதைதான் நான் எழுத பயன்படுத்துகிறேன்.. அவள் தந்த பரிசு மட்டுமல்ல அவளும் அவளின் நட்பும் அந்த பசுமையான நினைவுகளும் என்றென்றும் என் இதயத்தின் அருகிலேயே இருந்துக் கொண்டுத்தான் இருக்கிறது.. Public-ல நான் அவள விட அதிகமா Mark எடுத்தேன்.. எனக்கே ஆச்சர்யமா இருந்துச்சி.. எப்படி இது சாத்தியம் என்று.. நான் அவளை தயங்கி தயங்கி சென்று பார்க்க போன போது அவள் ஓடி வந்து என்னை கைகொடுத்து வாழ்த்திவிட்டு ரொம்பவும் மகிழ்ந்தாள்.. நான் Sorry சொன்னேன்.. அதற்கு அவ, நீ என்னைவிட அதிகம் மார்க் வாங்க வேண்டும் என்பதுதான்டா என் ஆசை.. நீ என்னைவிட கம்மியா மார்க் வாங்கியிருந்தாதான் நான் உன்மேல கோபப்பட்டிருப்பேன்.. நாம Friends-டா.. எப்பவும் Friends, Thanks and Sorry சொல்லிக்கவே கூடாது என்றாள்.. அவ சொன்னது இன்னமும் என் மனதில் இருக்கிறது.. அதற்கப்புறம் Mark Sheet வாங்க அவ அம்மா அப்பா கூட வந்திருந்தா.. எதுவும் பேசிக்க முடியல.. அவ எனக்கு All The Best மட்டும் சொல்லிட்டு கிளம்பிட்டா.. அதுதான் அவள் என்னிடம் பேசிய கடைசி வார்த்தை.. அவள் இன்னமும் என்னை நினைவில் வைத்திருப்பாளா என்று எனக்கு தெரியவில்லை.. இந்த 6 வருஷத்தில் ஒரே ஒரு முறை மட்டும் அவளைப் பார்த்தேன்.. அதுவும் போன வருஷம்தான்.. கொஞ்சம் Height ஆயிட்டா.. அவ அம்மாகூட நடந்துப் போயிட்டு இருந்தா.. நான் வண்டியில் அவளை Cross செய்து போய்ட்டு இருந்தேன்.. நான் எதுவும் பேசிக்கல.. அவ என்னை மறந்திருக்க கூடும்.. நான் கொஞ்சம் Sensitive.. என் மனதை தொட்ட விஷயங்கள என்றும் மறக்க மாட்டேன்.. அவளைப் பற்றி இங்கே சொன்னது சரியா தப்பா என்றெல்லாம் எனக்கு தெரியல.. நான் இன்று இப்படி இருக்க அவளே காரணம்.. அவளுக்கு Thanks சொல்லனும்னு தோன்றும் ஆனால் அவள் சொல்லியிக்கா. நண்பர்களுக்கிடையில் நன்றியை சொல்லிக்கொள்ள கூடாது என்று.. இன்னைக்கும் அவ பிறந்தநாள் வந்தா, அவ வீட்டுக்கு போன் பண்ணுவேன்.. 2 வருஷம் முன்னாடி ஒரெ ஒரு முறை மட்டும் அவ போன் எடுத்தா.. நான் எதுவும் பேசாம இருந்தேன்.. அவ “ Hello யாரு” என்றாள்.. எதுவும் பேசாமல் ஒரு 10 Seconds அமைதியா இருந்துட்டு போனை வெச்சுட்டேன்..
இது வெறும் Harmones-ன் வேலை என்பதெல்லாம் அப்போது எனக்கு தெரியாதில்ல.. நீங்க என்ன வேணும்னாலும் சொல்லுங்க.. Science வேணும்னா இதை வெறும் harmones-ன் வேலை என்று சொல்லிவிடலாம்..
அதையும் தாண்டி மனசு என்று ஒன்று இருக்கு.. அதில் காதல் என்று ஒன்று வந்துவிட்டால் அதை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது.. முதல் காதலையும் முதல் நட்பையும் எவராலும் மறக்க முடியாது. நான் அவள் மேல் கொண்டிருந்தது காதல் இல்லை என்பது பிறகு புரிய வந்தது.. இருந்தாலும் அவளின் நினைவுகளும் அவளின் உண்மையான நட்பும் என் மனதில் இன்றும் வாசமாய் வீசிக் கொண்டிருக்கிறது.. பசுமை நினைவுகளாய் சிறகடித்துக் கொண்டிருக்கிறது..
பி.கு.: 10% உண்மை 90% கற்பனை கலந்த கதை
அன்புடன் -
தினேஷ்மாயா
0 Comments:
Post a Comment