அவளுக்கு பிடித்தவை...

Friday, April 09, 2010



எனக்கு அவளை பிடிக்கும்..

அவளுக்கு என்னென்ன பிடிக்கும் என்று சொல்லட்டுமா..

இவ்வுலகிலேயே மிகவும் பிடித்த நபர் : நான், விநாயகர்..

பிடித்த நிறம் : மஞ்சள், நீலவானத்தின் நிறம்..

பிடித்த நடிகர் : சூர்யா..

பிடித்த நடிகை : ஜோதிகா..

பிடித்த உணவு : தக்காளி சாதம், தயிர் சாதம்..

பிடித்த கடவுள் : விநாயகர், முருகர், அம்மன்..

பிடித்த பாடல் : திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு காதலா,
                                எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்,
                                உயிரே என்னுயிரே என்னவோ நடக்குதடி,
                                ஒன்றா இரண்டா ஆசைகள்..

பிடித்த உடை : சுடிதார், புடவை.. ( அவள் புடவை கட்டினால் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அதற்காகவே அவளுக்கும் புடவை கட்ட பிடிக்கும்.. )

பிடித்த டிவி சேனல் : சன் மியூசிக், இசை அருவி..

பிடித்த இடம் : என் வீடு..

வேறு என்னவெல்லாம் பிடிக்கும் என்று வரிசை படுத்த தெரியவில்லை..
ஒரு தொடர்ச்சியாக எழுதலாம் என்று தோன்றுகிறது.. அவளுக்கு பிடித்தவை என்பதைவிட அவளின் குணங்கள் என்று சொல்லலாம்..

  • அவளுக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்று ஆசை.. பள்ளியிலேயே முதல் மதிப்பெண் எடுத்தாள் 1180/1200..( ஆனால் இப்போது அவள் மருத்துவம் படிக்கவில்லை.. பொறியியலும் படிக்கவில்லை.. )
  • அவளுக்கு கவிதை படிப்பது ரொம்ப பிடிக்கும்.. அவளுக்காக கவிதை எழுத ஆரம்பித்தேன்.. இன்னமும் எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன்..
  • வீட்டில் தனியாக பாட்டு கேட்பது அவளுக்கு ரொம்ப பிடிக்கும்.. வீட்டில் யாரும் இல்லாதபோது அதிகமா Sound வெச்சு பாட்டு கேட்பா.. பல சமயங்களில்,அவளுக்கு பிடித்த பாடல்களுக்கு ஆடவும் செய்வாள்..
  • 6th வரை பரதம் கற்றுக் கொண்டிருந்தாள்.. இப்போதும் அதை மறக்கவில்லை..அவளின் அபிநயமும், அவளின் பரதமும் அத்துனை அருமையாக இருக்கும்..
  • அதிகமா Veg தான் சாப்பிடுவா.. Non-Veg ரொம்ப Rare.. அதுவும் Chicken மட்டும்தான் சாப்பிடுவா.. எப்போதாவது மீன் சாப்பிடுவா..
  • மழையில் நனைவதுனா அவளுக்கு பயம்.. எங்கே காய்ச்சல் வந்துவிடுமோ என்று..
  • +2 படிக்கும்போது எனக்காகவும் அவளுக்காகவும் சேர்த்து வெள்ளிகிழமைகளில் விரதம் இருந்திருக்கா.. என்னையும் விரதம் இருக்க வைத்தாள்..
  • நல்லா பாட்டு பாடுவா.. அவள் பாடி நான் முதலில் கேட்ட பாடல், “கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே”..
  • ரொம்ப இல்லனாலும் சுமாரா சமைப்பா.. அவ எனக்கு முதன் முதலில் சமைத்து தந்தது “Maggi Noodles”..
  • வாரத்திற்கு 2 முறை மஞ்சள் பூசி குளிப்பாள்..
  • அவ Blood Group A1B+ ve..
  • அவள் Watch கட்ட மாட்டா..
  • கையில் வளையல் மட்டுமே அணிந்திருப்பாள்..
  • விரல்களில் மோதிரம் எதுவும் இருக்காது..
  •  கம்மல் ரொம்ப Simple -ஆ போட்டிருப்பா..
  • ப்ச்.. மூக்குத்தி போட்டிருக்க மாட்டா.. எனக்கு அவள் மூக்குத்தி போட்டிருந்தா பிடிக்கும்.. அவளிடமும் இதை சொன்னேன்.. கல்யாணத்தின் போது போட்டுக்கிறேன் என்றாள்.
  • எப்பவும் Black கலர் பொட்டுதான் வெச்சுக்குவா.. அதுவும் கொஞ்சம் Medium Round Shaped.. ரொம்ப பெரிசாவும் இருக்காது, ரொம்ப சின்னதாகவும் இருக்காது..
  • கோவில் போய்ட்டு வந்தா மட்டும், திருநீர், குங்குமம் வைத்திருப்பா.. மற்ற நேரங்களில் பொட்டு மட்டும் தான்..
  • தினமும் மாலையில் தன் வீட்டிலிருக்கும் தோட்டத்தில் பூ பறித்து, தன் கையாலேயே பூ கட்டி சாமிக்கு வைப்பாள்..
  • ரொம்ப நல்லா படிப்பா.. அவளுக்கு Maths ரொம்ப பிடிக்கும்.. அவ +2 Maths-ல Centum!
  • சோக பாட்டு கேட்க மாட்டா.. நான் கேட்டாலும் அவளுக்கு பிடிக்காது..
  • யார்கிட்டேயும் சீக்கிரமா பேசிட மாட்டா.. நல்லா பேச ஆரம்பிச்சுட்டா, உண்மையான Friend-ஆ இருப்பா..
  • குழந்தைகள்னா அவளுக்கு ரொம்ப பிடிக்கும்.. வழியில் எங்கே குழந்தைகளை பார்த்தாலும் உடனே ஓடி சென்று குழந்தையின் கன்னத்தை கிள்ளிவிட்டுதான் செல்வாள்..
  • மாலை நேரங்களில் வீட்டில் Skipping ஆடுவா..
  • செடி, மரம் வளர்க்கிறது அவளுக்கு ரொம்ப பிடிக்கும்.. அதுவும் பூச்செடி வளர்க்கிறதுனா அவ்ளோ இஷ்டம்.. நான் 4 Rose செடி வாங்கி தந்திருக்கேன்..
  • அவளுக்கு Shuttle விளையாடுவது பிடிக்கும்.. நானும் அவளும் பலமுறை ஒன்றாக சேர்ந்து Shuttle விளையாடி இருக்கோம்..
  • எனக்கு Chess விளையாதுவதுதான் பிடிக்கும்.. எப்போவாவது Time இருந்தால், என்கூட Chess விளையாடுவா..
  • சிரிக்கும்போது நல்லா வாய்விட்டு சிரிப்பா.. மேல் வரிசை பற்கள் மட்டும் தெரியும்படி சிரிப்பாள்..
  • Spects போடுவது அவளுக்கு பிடிக்காது.. என்னைகூட Lens போட்டுக்க சொல்லி சொன்னா.. அப்புறம் அவளே, உனக்கு Spects தான் நல்லா இருக்கு என்றும் சொன்னாள்..
  • தண்ணீர் குடிக்கும்போது Sip செய்து குடிக்கமாட்டா.. நான் குடிக்கும்போது தவிர..
  • எப்போதாவது Hindi பாட்டு கேட்பா..
  • கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், மராத்தி, ஆங்கிலமும் பேச தெரியும்.. சும்மா சொல்லலீங்க.. அவ இதெல்லாம் எனக்கும் கொஞ்சம் சொல்லி தந்திருக்கா..
  • French, Japanese, German இம்மூன்றையும் பேச கற்றுக் கொண்டாள்.. புதுபுது விஷயத்தை தெரிஞ்சுக்க அவளுக்கு ரொம்ப பிடிக்கும்..
  • Current waste செய்தால் அவளுக்கு பிடிக்காது..
  • அதே மாதிரிதான் தண்ணீரையும் சிக்கனமா செலவு செய்ய சொல்வா..
  • பணம் ரொம்ப வெச்சுக்க மாட்டா.. என்கிட்டகூட அதிகமா பணம் வாங்கிக்க மாட்டா.. நானாக எப்போதாவது திட்டி அவளிடம் பணம் தருவேன்.. எதுக்குனு கேட்கறீங்களா.. STD-ல எனக்கு போன் செய்யதான்..
  • தன் சுயமரியாதையை எப்பவும் விட்டு தரமாட்டா.. ஆனா என்னை யார்கிட்டயும் விட்டு தரமாட்டா..
  • ரொம்ப Possessive type..
  • Computer பற்றி அதிகமா தெரியாது.. Internet-னா என்னனு கேட்பா..
  • Black கலர்ல Belt type Slipper தான் வாங்குவா.. அதிகமா Heals இருந்தா அவளுக்கு பிடிக்காது.. சாதாரணமான Slipper தான் Use செய்வா..
  • எப்பவுமே தன் Purse-ல் 1 Packet Black Color Sticker பொட்டு, 50 ரூபாய், விநாயகர் துதி புத்தகம், நான் அவளுக்கு வாங்கி தந்த மோதிரம், 2 Pen வெச்சிருப்பா.
  • தன் வீட்டின் Hall-ல் இருக்கும் Sofa-வில் தான் தூங்குவா..
  • ரொம்ப வாயாடி அவ.. பேச ஆரம்பிச்சுட்டா நிறுத்த மாட்டா.. அதே சமயம் தெரியாதவங்ககிட்ட பேசவே மாட்டா..
  • தினமும் 9 மணிக்கு மொட்டை மாடிக்கு சென்று, காற்று வாங்கிவிட்டு, நிலவுடன் கொஞ்சம் பேசிவிட்டு வருவாள்..
  • நகம் கடிச்சா அவளுக்கு பிடிக்காது..
  • பொய் சொல்லமாட்டா..
  • எந்த விஷயத்திலும் Perfect-ஆ இருப்பா..
  • ஒரு விஷயத்தை சொன்னா கண்டிப்பா அதை செஞ்சு முடிச்சிடுவா..
  • எப்பவும் Promise வெக்க மாட்டா.. ஆனா சொன்னதை கண்டிப்பா காப்பாத்துவா..
  • ரொம்ப Punctual..
  • சித்ரா அவர்களின் பாடல்கள் ரொம்ப விரும்பி கேட்பா..
  • நான் Magic செய்றத பார்க்க அவளுக்கு பிடிக்கும்..
  • Cartoon network-ல Tom & Jerry ரொம்ப விரும்பி பார்ப்பா..
  • அவளுக்கு அவங்க அப்பாவை ரொம்ப பிடிக்கும்..
  • நான் சொன்னதிலிருந்து கண்ணுக்கு மை வெச்சுக்க ஆரம்பிச்சா.. ஆனா அப்புறம் நானே வேண்டாம்னு சொன்னேன்.. அவளும் மை வெக்கறத நிறுத்திகிட்டா..
  • கந்தர் சஷ்டி கவசம், சுப்ரபாதம் முழுவதும் தெரியும்..
  • ஒரேயொரு முறை அவள் உள்ளங்கையில் 3 வரி கவிதை எழுதி தந்திருக்கிறேன்.. அவள் கேட்டுக் கொண்டதால்..
  • தினமும் 2 முறை குளிப்பா.. வழக்கம்போல் காலையில் அப்புறம் மாலையில் சாமிக்கு பூஜை செய்யும் முன்..
  • தினமும் தன் வீட்டின் அருகில் இருக்கும் கோவிலுக்கு மாலை நேரத்தில் சென்று வருவாள்..

அவளை பற்றி இன்னமும் சொல்றேன்.. இன்னொரு பதிவில்..

பி.கு.: 10% உண்மை 90% கற்பனை

என்றென்றும் அன்புடன் -

தினேஷ்மாயா

2 Comments:

JK said...

Chance eh illa Dhinesh... IS Maya reading this? if so.. I've to say this.. you are the luckiest person in the world..

தினேஷ்மாயா said...

ரொம்ப Thanks JK..

நான் இங்கே பதிவு செய்தது எல்லாம் கற்பனையே.. அவள் என்றாவது ஒருநாள் என் Blog-ஐ தேடி வந்து படிப்பாள் என்ற ஆசையில்தான் நான் இன்னமும் எழுதிக் கொண்டே இருக்கிறேன்.. அவள் Luckiest Person என்பதைவிட அவள் என்னுடன் இருந்தால், நான் தான் - The Luckiest Person in the World.. !!
also am
The Happiest Person in the World.. !!

யாருக்குத் தெரியும்,ஒருவேளை என் மாயா என் வலைப்பக்கத்தை படித்திருக்கலாம் அல்லது படித்துக் கொண்டிரும் இருக்கலாம்.. !!