நன்றி..

Sunday, April 11, 2010



நாம் இவ்வுலகில் பிறந்ததிலிருந்து இறக்கும்வரையும் இறந்தபின்னும் இவ்வுலகில் இருக்கும் ஒவ்வொருவரையும் சார்ந்தே இருக்கிறோம்..

என்றாவது இவர்களுக்கு நீங்கள் நன்றி சொல்லியதுண்டா..
அல்லது நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்ததுண்டா..

நான் இன்று வரை கடைபிடித்து வரும் ஒரு பழக்கத்தை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்..

நான் எந்த உணவு உண்ணும் முன்னும், அது எதுவாக இருந்தாலும் சரி, அம்மா செய்யும் உணவாக இருந்தாலும், ஹோட்டலில் சாப்பிடும் உணவாக இருந்தாலும், தண்ணீராக இருந்தாலும், கடையில் வாங்கி சாப்பிடும் Chocolate இப்படி எதுவாக இருந்தாலும், முதலில் நான் நன்றி சொல்லிவிட்டுதான் அதை சாப்பிடுவேன்..

உணவை சாப்பிடும் முன், இந்த உணவை படைத்த கடவுளுக்கும், இதை விளைவித்த விவசாயி, இதை சமைத்தவர், இதை சாப்பிட பணம் தந்த என் அப்பா அம்மா, இதை எனக்கு கொண்டுவந்து சேர்க்க பாடுபட்ட அனைவருக்கும் நன்றி என்று என் மனதிற்குள் சொல்லிக் கொள்வேன்.. பின் உணவை வணங்கிவிட்டு அதன் பின்னே சாப்பிட தொடங்குவேன்.. என்னை பொறுத்தவரை உணவும் ஒரு தெய்வம்தான்.. அதுதான் நம்மை வாழவைக்கிறது..

இதை செய்யும்போது மனதிற்கு ஒரு சந்தோஷம்.. அவ்ளோதான்.. எப்படியும் நான் மனசார சொல்லும் நன்றி அவர்களை சென்றடையும் என்ற ஆசையில் நன்றி சொல்கிறேன்..

அப்புறம் எந்த ஒரு பொருளையும் கடையிலிருந்தோ அல்லது தெரிந்தவர்களிடம் இருந்தோ வாங்கும்போதும் அவர்களுக்கு நன்றி சொல்வேன்..

நண்பர்களிடமிருந்து எதையாவது பெற்றால் மட்டுமே நன்றி சொல்ல மாட்டேன்.. மற்றபடி நன்றியை எல்லோருக்கும் அளிப்பேன்.. அதை மனசார அவர்களிடம் சொல்லும்போது நமக்கும் ஒரு சந்தோஷம் அவர்களுக்கும் ஒரு சந்தோஷம்..

மனிதனின் உழைப்பு இன்றி எதுவும் இவ்வுலகில் இல்லை.. எல்லாமே அவன் உழைப்பால்தான் இன்று நமக்கு கிடைக்கிறது.. மனிதனையும் அவன் உழைப்பையும் நாம் நன்றி சொல்லி வாழ்த்தி பாராட்டுவது சரிதானே தோழர்களே.....

என்றும் அன்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: