காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
அவன் வாய் குழலில் அழகாக ஆ...
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலை போல் மிதந்து
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்
பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்
வருந்தும் உயிர்க்கு ஆ..
வருந்தும் உயிர்க்கு ஒரு மருந்தாகும்
இசை அருந்தும் முகம் மலரும் அரும்பாகும்
இசையின் பயனே இறைவன்தானே
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
ஆதார ஸ்ருதி அந்த அன்னை அன்பே
அதக்கேற்ற லயம் எந்தன் தந்தை அன்பே
ஸ்ருதி லயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்
உறவாக அமைந்த நல்ல இசைக் குடும்பம்
திறந்த கதவு என்றும் மூடாது
இங்கு சிறந்த இசை விருந்து குறையாது
இது போல் இல்லம் எது சொல் தோழி
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
அவன் வாய் குழலில் அழகாக ஆ...
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலை போல் மிதந்து...
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா....
படம் : ஒரு நாள் ஒரு கனவு
இசை : இளையராஜா
நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது, பாட்டுப் போட்டியில் இந்த பாடலை பாடினேன்.. பரிசு எல்லாம் கிடைக்கவில்லை.. இருந்தாலும் மனசு ரொம்ப சந்தோஷமா இருந்தது.. நல்லா பாடியதா பலர் சொன்னாங்க.. அதைவிட அவள் சொன்னதுதான் மறக்க முடியாது.. அந்த போட்டியில் அவளும் இதே பாடலை பாடலமென்று இருந்தாள்.. நான் அவளுக்கு முன்னரே இந்த பாடலை பாடிவிட்டதால், அவள் மனசே மனசே மனசில் பாரம் பாடலை பாடினால்.. என்ன Voice தெரியுமா அவளுக்கு.. அவ பேச ஆரம்பிச்சா கேட்டுட்டே இருக்கலாம்போல இருக்கும்.. பாட ஆரம்பிச்சா சொல்லவா வேணும்.. அந்த பாடலை அவள் எவ்வளவு Feel பண்ணி பாடினா தெரியுமா.. அதான் அவளுக்கே முதல் பரிசு தந்தாங்க.. அடுத்த வருஷம் நான் “ நண்பா நண்பா நாளை உலகம் நம் கையில்” இந்த பாடலை பாடினேன்..
நான் பரிசு வாங்க வேண்டுமென்றே அவள் இம்முறை போட்டியில் கலந்துக் கொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.. ஆனால் அவள் போட்டியில் பாட இருந்த பாடல் “ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு” இந்த பாடலை எனக்கு மட்டும் பாடி காட்டினாள்.. அவள் பாடிய விதம் என் கண்களை குளமாக்கிவிட்டது.. அவ இப்ப எங்கே இருக்கானு தெரியும் ஆனா என்ன பத்திதான் அவளுக்கு எதுவும் தெரியாது..
மறக்க முடியாத பள்ளிக் கூட நட்பு என்றும் பிரியாமல் கடைசி வரை இருந்தால், அதைவிட சொர்க்கம் உலகில் வேறெதுவும் இல்லை..
- தினேஷ்மாயா
0 Comments:
Post a Comment