நான் பேருந்தில் வரும்போது எழுதியது..

Tuesday, April 27, 2010



ஜன்னலோர இருக்கை..
பனியோடு சேர்ந்த
அந்த குளிர்காற்று
பயணம் முழுவதும்
என்னை
உரசிக் கொண்டிருக்கிறது..
என் இருக்கையில் தலை சாய்த்து..
உன்னைப் பற்றி
நினைத்துக் கொண்டிருக்கிறேன்..
எனக்குத் தெரியும்..
நீ இப்போது
உறங்கி இருப்பாய் என்று..
உறக்கத்தையும் இதயத்தையும்
உன்னிடம்
தொலைத்தவனாய் நான்..
உன்னோடு நான்
வாழப்போகும் அந்த
பசுமையான நாட்களே
என் நினைவை
ஆட்கொண்டிருக்கிறது..
உனக்கு நினைவிருக்கா -
நீ என்னுடன்
இரவில் பேருந்தில்
பயணிக்கவேண்டுமென்று
சொல்லி இருந்தாயே..
இப்போது நான்
உன் நினைவுகளுடன்
பயணித்துக் கொண்டிருக்கிறேன்..
என் மனதில்
கவிதை இருக்கின்றது..
எழுதமுடியவில்லை..
என் உயிரில்
காதல் இருக்கின்றது..
சொல்லமுடியவில்லை..
உனக்காக மட்டுமே
வாழப் பழகிவிட்ட
எனக்கு -
எனக்காக வாழ தெரியவில்லை..
நீ ஒன்றும் என் உயிரை
திருடவில்லை..
நானாகவேதான் என் மனதை
தொலைத்துவிட்டேன் உன்னிடம்..
நீ அதை வேண்டாம் என்று
சொல்லாமல் சொன்னாய்
என்னிடம்..
நானும் புரிந்துக் கொண்டேன்..
மனம் லேசாக வலித்தாலும் -
நான் உன்மீது
கொண்டிருக்கும் காதல் -
என் வாழ்வை
இனிமையாக்கிக் கொண்டிருக்கின்றது..
என்றென்றும்............

நான் பேருந்தில் ஒருநாள் இரவில் சென்னை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தேன்.. இரவு 2 மணி இருக்கும்.. தூக்கம் வரவில்லை.. அதெப்படி தூக்கம் வரும்.. அதான் மனதையும் தூக்கத்தையும் அவள் திருடி சேன்றுவிட்டாளே.. ஏதோ அவளை நினைத்து கவிதை எழுதனும் போல் தோன்றியது.. அந்த நேரத்தில் எனக்கு தோன்றியதை எழுதினேன்.. அதை உங்களோடு பகிர்ந்துக் கொண்டேன்..

- தினேஷ்மாயா

0 Comments: