கல்லூரி சொல்லித்தராத பாடம்..

Friday, April 30, 2010




கல்லூரி என்னும்
நான்கு எழுத்து
வாழ்க்கை என்னும்
நான்கு எழுத்தை
எனக்கு சொல்லித்தந்தது..

ஆனால் -
பிரிவு என்னும்
மூன்று எழுத்தை
ஏற்றுக்கொள்ள
சொல்லித் தரவில்லை..

அன்புடன் -


தினேஷ்மாயா 

இலை..


ஒரு நாள் அவள் வீட்டின் மொட்டைமாடியில் நின்றுக் கொண்டு பூப்பறித்துக் கொண்டிருந்தாள்..அதை நானும் ரசித்துக் கொண்டிருந்தேன்..
அப்போது காற்று பலமாக வீசியது.. அவளும் பூப்பறிப்பதை நிறுத்திவிட்டு வீட்டினுள்ளே செல்ல முற்பட்டாள்.. அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு இலை ஒன்று அவளின் கன்னத்தை வருடி சென்றது.. உடனே நான் என் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்து அவளை வருடி சென்ற அந்த இலையினை ஒருவழியாக காற்றோடு சண்டைப்போட்டு பிடித்து விட்டேன்.. 
எப்படியும் ஒரு 10 நிமிஷம் காற்றோடு சண்டைப்போட்டிருப்பேன்.. அவளை வருடி சென்ற அந்த இலையினை கையில் பிடிக்க.. 
இன்னமும் அதை பத்திரமாக வைத்துள்ளேன் என் நினைவு பெட்டியில்..

அன்புடன் -

தினேஷ்மாயா 

சென்னையின் அதிகாலை முகம்...

Wednesday, April 28, 2010



ஒருநாள் நான் காலை 5 மணிக்கு என் ஊரில் இருந்து சென்னை வந்து சேர்ந்தேன். அந்த அதிகாலை நேரத்து நினைவுகள் இன்னும் என் மனதில் இருக்கின்றது. அதை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்..

சென்னையின் அதிகாலை முகம் எப்படி இருக்கும் என்று நம்மில் பலர் பார்த்திருக்க வாய்ப்பில்லை.. ஏனென்றால் அப்போது நாம் நன்றாக அயர்ந்து உறங்கிக் கொண்டிருப்போம்.. எனக்கு சென்னையின் அதிகாலை முகத்தை பார்க்கும் சந்தர்ப்பம் பலமுறை கிடைத்துள்ளது.. அப்போது நான் சந்தித்த அனுபவங்களை இங்கே பதிவு செய்கிறேன்..


  • சென்னை மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகள் பெரும்பாலும் 4 அல்லது 5 பயணிகளை மட்டுமே சுமந்து சென்றுக் கொண்டிருக்கிறது..

  • சாலையில் மின்விளக்குகள் சூரிய வெளிச்சத்தோடு சண்டைப்போட்டு தங்கள் ஒளியை இழந்துக் கொண்டிருக்கிறது..

  • அங்கொன்றும் இங்கொன்றுமாய் சாலையில் வாகனங்கள் ஊர்ந்து சென்ற வண்ணம் உள்ளன..

  • பேருந்து நிறுத்தங்களில் மக்கள் தங்கள் பேருந்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்..

  • சாலையின் குறுக்கே நின்றுக் கொண்டிருக்கும் போக்குவரத்து விளக்குகள் மஞ்சள் நிற விளக்கை மின்மினி பூச்சிபோல் ஒளிரவிட்டுக் கொண்டிருக்கிறது..

  • சூரியன் FM ஒலித்தபடி டீ கடையில் இருக்கும் ஒருசில வாடிக்கையாளர்களுக்கு டீ போட்டுக் கொண்டிருக்கிறார் ஒரு டீ கடைக்காரர்..

  • செய்திதாள்களை ஏரியா வாரியாக பிரித்து வைத்து அடுக்கிக் கொண்டிருக்கின்றனர் செய்தித்தாள் வணிகர்கள்..

  • அதிசயமாய் வானில் குருவிகளும் இன்னும் சில பறவைகளும் வட்டமடித்து சிறகை விரித்துக் கொண்டு பறந்துக் கொண்டிருக்கிறது..

  • மாசுப்படாத மெல்லிய காற்று என் நுரையீரலை தீண்டிச் செல்கிறது.. நான் பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தவாறு அதை ரசித்துக்
    கொண்டே பயணிக்கிறேன்..

  • ஒருசில ஹோட்டல்கள் மும்முரமாய் இட்லியை வேகவைத்தும் சட்னியை தயார் செய்தவண்ணம் உள்ளன..

  • கோயில்களில் சுப்ரபாதமும், இன்னும் சில கோயில்களில் கந்த சஷ்டி கவசமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது..

  • சவாரிகளைத் தேடி பல ஆட்டோக்கள் சாலையை வட்டமடித்துக் கொண்டிருக்கின்றது..

  • ஏதோ அவசரம் போல.. ஒரு ஆம்புலன்ஸ் வேகமாக காற்றை கிழித்துக் கொண்டு சீறிப்பாய்ந்து செல்கிறது..

  • நிலவு நம்மிடம் போய் வருகிறேன் என்று சொல்லி தற்காலிகமாக விடை பெறுகிறது..

  • இதோ உன்னைக் காண வந்துவிட்டேன் என்று சொல்லியபடி, சூரியன் கடலில் இருந்து துயில் எழுகிறான்..

  • சாலையின் ஓரத்தில் நடந்துக் கொண்டிருக்கின்றனர் சில வயதான பெரியவர்கள்..

  • கூலி வேலைக்கு செல்பவர்கள் சைக்கிளில் தங்கள் வேலைக்கு புறப்பட்டு செல்கின்றனர்..

  • தன் மனைவி சொல்லி அனுப்பிய அனைத்து காய்கறிகளையும் மார்க்கெட்டில் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றுக் கொண்டிருக்கிறார் ஒரு பொறுப்பான இல்லத்தரசன்..

  • கடைக்கு வந்திருக்கும் சரக்கை கடையில் இறக்கிவைப்பதில் குறியாய் வேலைசெய்துக் கொண்டிருக்கின்றனர் நம் உழைக்கும் வர்க்கத்தினர்..

  • இப்போதுதான் விழித்திருக்கும் போல.. ஒரு சின்னஞ்சிறிய நாய்குட்டி என்ன செய்வது என்று தெரியாமல் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருக்கிறது..

  • புதிதாய் வாங்கிய தன் வண்டியை துடைத்துக் கொண்டிருக்கிறார் ஒருவர்..

  • குப்பைகளை சுமந்துக்கொண்டும், அதில் பாதியை வீதியில் தூவிக்கொண்டும் விரைந்து சென்றுக் கொண்டிருக்கிறது சென்னை மாநகரின் குப்பை வண்டி..

  • தண்ணீரை சாலையில் தெளித்து, சாலைக்கு தண்ணீர் அபிஷேகம் நடத்தியவாறே வேகமாய் சென்றுக் கொண்டிருக்கிறது தண்ணீர் லாரி..

  • ஒரு கையில் மதிய உணவுடனும், இன்னொரு கையில் Handbag உடனும் தன் கம்பெனி வண்டிக்காக காத்துக் கொண்டிருக்கிறார் ஒரு பெண்மணி..

  • சென்னை நகரம் முழுவதும் இயந்திர வாழ்க்கைக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது..

ஆம்.. அதிகாலை வந்துவிட்டது.. அனைவரும் தங்களின் கால்களில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு சுழல தயாராகிக்கொண்டிருக்கின்றனர்..

இன்னும் இதுப் போன்ற எனது அதிகாலை அனுபவத்தை அடுத்த பதிவில் வெகுவிரைவில் உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்..

அன்புடன் -







தினேஷ்மாயா 

Making Love Out Of Nothing At All...

Tuesday, April 27, 2010



Making Love Out Of Nothing At All...






I know just how to whisper
and I know just how to cry
I know just where to find the answers
and I know just how to lie

I know just how to fake it
and I know just how to scheme
I know just when to face the truth
and then I know just when to dream

And I know just where to touch you
and I know just what to prove
I know when to pull you closer
and I know when to let you loose

And I know the night is fading
and I know that time's gonna fly
And I'm never gonna tell you
ev'rything I've got to tell you
But I know I've got to give it a try

And I know the roads to riches
and I know the ways to fame
I know all the rules and then
I know how to break them
and I always know the name of the game

But I don't know how to leave you
and I'll never let you fall
And I don't know how you do it
Making love out of nothing at all
(Making love) out of nothing at all
(Making love) out of nothing at all
(Making love) out of nothing at all
(Making love) out of nothing at all
(Making love) out of nothing at all
(Making love) out of nothing at all

Ev'ry time I see you all the rays of the sun
Are streaming through the waves in your hair
And ev'ry star in the sky is
taking aim at your eyes like a spotlight

The beating of my heart is a drum
and it's lost and it's looking for a rhythm like you
You can take the darkness from the pit of the night
and turn into a beacon burning endlessly bright
I've got to follow it
'cause ev'rything I know
Well it's nothing till I give it to you

I can make the run or stumble
I can make the final block
And I can make every tackle
at the sound of the whistle
I can make all the stadiums rock

I can make tonight forever
Or I can make it disappear by the dawn
And I can make you every promise
That has ever been made
and I can make all your demons be gone

But I'm never gonna make it without you
Do you really want to see me crawl?
And I never gonna make it like you do
Making love out of nothing at all
(Making love) out of nothing at all
(Making love) out of nothing at all
(Making love) out of nothing at all
(Making love) out of nothing at all
(Making love) out of nothing at all
(Making love) out of nothing at all....



Album : Air Supply - Making Love Out Of Nothing At All..

நான் எதேச்சையாக இந்த POP  பாடலை கேட்டேன்..
இதன் வரிகள் என்னை தின்றுவிட்டன..
இந்த வரிகள் சொல்லும் அர்த்தங்கள் அப்படியே எனக்கு அவளை நினைவு படுத்துகிறது.. நான் இப்பாடலின் வரிகளை அர்ப்பணிக்கிறேன்..

அன்புடன் -

தினேஷ்மாயா 

நான் பேருந்தில் வரும்போது எழுதியது..



ஜன்னலோர இருக்கை..
பனியோடு சேர்ந்த
அந்த குளிர்காற்று
பயணம் முழுவதும்
என்னை
உரசிக் கொண்டிருக்கிறது..
என் இருக்கையில் தலை சாய்த்து..
உன்னைப் பற்றி
நினைத்துக் கொண்டிருக்கிறேன்..
எனக்குத் தெரியும்..
நீ இப்போது
உறங்கி இருப்பாய் என்று..
உறக்கத்தையும் இதயத்தையும்
உன்னிடம்
தொலைத்தவனாய் நான்..
உன்னோடு நான்
வாழப்போகும் அந்த
பசுமையான நாட்களே
என் நினைவை
ஆட்கொண்டிருக்கிறது..
உனக்கு நினைவிருக்கா -
நீ என்னுடன்
இரவில் பேருந்தில்
பயணிக்கவேண்டுமென்று
சொல்லி இருந்தாயே..
இப்போது நான்
உன் நினைவுகளுடன்
பயணித்துக் கொண்டிருக்கிறேன்..
என் மனதில்
கவிதை இருக்கின்றது..
எழுதமுடியவில்லை..
என் உயிரில்
காதல் இருக்கின்றது..
சொல்லமுடியவில்லை..
உனக்காக மட்டுமே
வாழப் பழகிவிட்ட
எனக்கு -
எனக்காக வாழ தெரியவில்லை..
நீ ஒன்றும் என் உயிரை
திருடவில்லை..
நானாகவேதான் என் மனதை
தொலைத்துவிட்டேன் உன்னிடம்..
நீ அதை வேண்டாம் என்று
சொல்லாமல் சொன்னாய்
என்னிடம்..
நானும் புரிந்துக் கொண்டேன்..
மனம் லேசாக வலித்தாலும் -
நான் உன்மீது
கொண்டிருக்கும் காதல் -
என் வாழ்வை
இனிமையாக்கிக் கொண்டிருக்கின்றது..
என்றென்றும்............

நான் பேருந்தில் ஒருநாள் இரவில் சென்னை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தேன்.. இரவு 2 மணி இருக்கும்.. தூக்கம் வரவில்லை.. அதெப்படி தூக்கம் வரும்.. அதான் மனதையும் தூக்கத்தையும் அவள் திருடி சேன்றுவிட்டாளே.. ஏதோ அவளை நினைத்து கவிதை எழுதனும் போல் தோன்றியது.. அந்த நேரத்தில் எனக்கு தோன்றியதை எழுதினேன்.. அதை உங்களோடு பகிர்ந்துக் கொண்டேன்..

- தினேஷ்மாயா

வண்ண ரோஜா மலர்கள்..

ரோஜா..
காதலின் சின்னம் என்று மட்டும் சொல்லிட முடியாது..
அனைவருக்கும் பிடித்தமான மலர் இது..
ரோஜா மலரில் பல வண்ணங்கள் உள்ளது.
ஏதோ என்னால் முடிந்த அளவிற்கு தேடி இங்கே பதிவு செய்திருக்கிறேன்..





























































என்ன நண்பர்களே.. வண்ண வண்ண ரோஜா மலர்களை கண்டு ரசித்தீர்களா..
மீண்டும் சந்திப்போம்..

என்றும் அன்புடன் -

தினேஷ்மாயா