நெஞ்சோடு கலந்திடு
உறவாலே
காலங்கள் மறந்திடு
அன்பே
நிலவோடு தென்றலும்
வரும் வேளை
காயங்கள் மறந்திடு
அன்பே
ஒரு பார்வை பார்த்து
நான் நின்றால்
சிறு பூவாக நீ
மலர்வாயே
ஒரு வார்த்தை இங்கு
நான் சொன்னால்
வழி போகும் என்
அன்பே அன்பே
நெஞ்சோடு கலந்திடு
உறவாலே
காலங்கள் மறந்திடு
அன்பே
நிலவோடு தென்றலும்
வரும் வேளை
காயங்கள் மறந்திடு
அன்பே
கண்ணாடி என்றும்
உடைந்தாலும் கூட
பிம்பங்கள் காட்டும்
பார்க்கின்றேன்
புயல் போன பின்னும்
புது பூக்கள் பூக்கும்
இளவேனில் வரை நான்
இருக்கின்றேன்
முகமூடி அணிகின்ற
உலகிது
உன் முகம் என்று
ஒன்றிங்கு என்னது
நதி நீரிலே அட
விழுந்தாலுமே
அந்த நிலவென்றும்
நனையாது வா நண்பா
நெஞ்சோடு கலந்திடு
உறவாலே
காலங்கள் மறந்திடு
அன்பே
நிலவோடு தென்றலும்
வரும் வேளை
காயங்கள் மறந்திடு
அன்பே
காலங்கள் ஓடும்
இது கதையாகி போகும்
கண்ணீர் துளியின்
ஈரம் வாழும்
தாயாக நீதான் தலை
கோத வந்தாலும்
உன் மடிமீது மீண்டும்
ஜனனம் வேண்டும்
என் வாழ்க்கை நீ
இங்கு தந்தது
அடி உன் நாட்கள்
நான் இங்கு வாழ்வது
காதல் இல்லை இது
காமம் இல்லை
இந்த உறவுக்கு
உலகத்தில் பெயரில்லை
ஒரு பார்வை பார்த்து
நான் நின்றால்
சிறு பூவாக நீ
மலர்வாயே
ஒரு வார்த்தை இங்கு
நான் சொன்னால்
வழி போகும் என்
அன்பே அன்பே
நெஞ்சோடு கலந்திடு
உறவாலே
காலங்கள் மறந்திடு
அன்பே
நிலவோடு தென்றலும்
வரும் வேளை
காயங்கள் மறந்திடு
அன்பே
படம்: காதல் கொண்டேன்
இசை: யுவன் ஷங்கர்
ராஜா
பாடியவர்கள்: சுஜாதா,
உன்னி கிருஷ்ணன்
என் மனதில் காதல் நட்பாயிருந்த போது வெளிவந்த பாடல் இது. அப்போது எங்களுக்குள் காதல் இல்லை. நெருங்கிய நண்பர்களாய் இருந்தோம். அவளிடம் இப்பாடலில் வரும் சில வரிகளை சொல்லி, இது நமக்காகவே எழுதப்பட்டது போல் இருக்கிறது என்றேன். அந்த வரிகள்
“என் வாழ்க்கை நீ இங்கு தந்தது
அடி உன் நாட்கள் நான் இங்கு வாழ்வது
காதல் இல்லை இது காமம் இல்லை
இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை”
- அன்புடன்
****தினேஷ்மாயா****
0 Comments:
Post a Comment