ஆசான்

Wednesday, October 03, 2012




  ‘சுந்தரகாண்டம்’ திரைப்படத்தில் பாக்யராஜ் ஒரு வசனம் சாக்ரடீஸ் சொன்னதாக சொல்வார். இந்த உலகத்தில் நீ சந்திக்கும் ஒவ்வொருவரும் உனக்கு ஆசான். அவரிடத்தில் நீ கற்றுக்கொள்ள நிச்சயம் எதாவது ஒரு விஷயம் இருக்கும் என்று.

       இந்த வசனம் என் மனதில் ஆழமாய் பதிந்துவிட்டது. பல நேரங்களில் இதை நான் சிந்தித்து பார்ப்பேன். சிலரை பார்த்து எப்படி இருக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டேன். பலரை பார்த்து, எப்படி இருக்கக்கூடாது என்று அதிகம் கற்றுக்கொண்டேன். மனிதர்கள் எப்படியெல்லாம் நடந்துக்கொள்வார்கள் என்பதையும் புரிந்துக்கொண்டேன். 

      மு.வரதராசனார் சொன்னது போல, மற்றவர் வாழ்க்கையில் ஏற்படும் விஷயத்தை பார்த்து நாமும் அதை ஒரு அனுபவமாகக்கொண்டு வாழவேண்டும். சில நேரங்களில் அது போல நடந்துக்கொள்ள வேண்டும் என்று மனது சொல்லும், சில நேரங்களில் அது போல நடக்கக்கூடாது என்று மனது சொல்லும். நம் அனுபவங்கள்தான் நம்மை வாழ்க்கை முழுவதும் வழிநடத்தி  செல்கிறது.

      வாழ்வில் நாம் சந்திக்கும் ஒவ்வொருவரையும் நிச்சயம் கூர்ந்து கவனியுங்கள். அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிச்சயம் ஒரு விஷயம் இருக்கும். இவ்வுலகில் இருக்கும் ஒவ்வொரு உயிரும் நமக்கு ஆசான் என்பதை மறந்திட வேண்டாம்.

- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: