அனாதை குழந்தைகளை பார்க்கும் போது, இரண்டு உயிர்கள் அவசரத்தில் செய்யும் தவறுக்காக இன்னொரு உயிர் வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறது. ஏன் இவர்களின் சிற்றின்ப சந்தோஷத்திற்காக எந்த ஒரு தவறும் செய்யாத ஒரு உயிரை தேவையில்லாமல் ஆயுசு முழுக்கவும் துன்பத்தில் விட்டு செல்கின்றனர் என்று தோன்றுகிறது.
நாம் செய்யும் ஒவ்வொரு விஷயமும் எதாவது ஒரு விஷயத்தில் மற்றவர்களை பாதிக்கத்தான் செய்யும். ஆனால், அந்த பாதிப்பு பெரிதாய் இருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சில நிமிட சந்தோஷத்திற்கு ஆசைப்பட்டு அவர்கள் செய்யும் தவறை மறைக்க குழந்தைகளை அனாதை ஆசிரமத்தில் விட்டுவிடுகின்றனர். தாய் தந்தை பெயரே தெரியாத குழந்தைகளை நான் பார்த்திருக்கிறேன். அடிக்கடி அவர்களை பார்க்க செல்லும்போதெல்லாம் அவர்கள் அதிகம் மகிழ்வர். எங்களை வந்து பார்க்க சொந்தம் என்று யாருமில்லை, நீங்கள் எங்கள் அனைவரையும் பார்க்க வருவது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கு என்பார்கள். குழந்தையை ஆசிரமத்தில் விட்டதுடன் தங்கள் கடமை முடிந்துவிட்டதாய் எண்ணுகின்றனர். பின்னர் தங்கள் வாழ்க்கையை பார்த்து ஓடத்துவங்கிவிடுகின்றனர். ஒரு குழந்தை தான் அனாதை, தனக்கு ஆதரவளிக்க யாரும் இல்லை என்பதை உணரும்போது அந்த தருணத்தில்அதன் மனது எவ்வளவு வலிக்கும் என்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. தங்கள் நண்பர்கள் வீட்டில் பெற்றோருடன் வாழும்போது அதை எண்ணி இவர்கள் எவ்வளவு துடித்துப்போவார்கள் என்று நினைத்துப் பார்க்கிறேன். இவர்கள் பெற்றோர் செய்யும் சிறிய தவறு வாழ்க்கை முழுவதும் இவர்களுக்கு எவ்வளவு பெரிய துன்பம் என்பது அவர்கள் சந்தோஷமாக இருக்கும் அந்த தருணத்தில் தோன்றுவதேயில்லை. மனிதன் என்பவன் இன்பத்திற்கு அடிமை என்பதற்கு இதுவே ஒரு சிறந்த எடுத்துகாட்டு என்பேன் நான்.
- அன்புடன்
****தினேஷ்மாயா****
0 Comments:
Post a Comment