7/G ரெயின்போ காலனி

Friday, October 19, 2012


7/G ரெயின்போ காலனி



    இந்த திரைப்படம் வெளிவந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் எனக்கு இந்த திரைப்படத்தை பார்க்க சரியான நேரம் கிடைக்கவில்லை. சில மாதங்களுக்கு முன்னர்தான் இந்த திரைப்படத்தை பார்த்தேன். சாதாரண காதல் கதை என்று இதை சொல்லிவிட முடியாது. வழக்கமான காதல் கதை இல்லை இது. உண்மையான காதல் கதை என்றும் சொல்லி இதை விளம்பரப்படுத்தினார்கள். ஆனால் எது எப்படியோ. என் மனதை இந்த திரைப்படம் வெகுவாய் கவர்ந்துவிட்டது. கடைசியில் கண்களில் அல்ல, மனதில் கண்ணீரை வரவைத்துவிட்டது. அதுவும் இந்த திரைப்படத்தை அவள் என்னை  பிரிந்து சென்றபிறகுதான் பார்த்தேன். அதனால்தானோ என்னவோ தெரியவில்லை இந்த படம் மனதில் ஆழமாய் பதிந்துவிட்டது. அதை என் வலையில் நிச்சயம் பதிந்தே தீரவேண்டும் என்று நினைத்தேன்.


காதலியை துரத்தி துரத்தி காதலிக்கும் நாயகன் நன்றாக நடித்துள்ளார். இது ரவிகிருஷ்ணாவிற்கு முதல் படம் என்றுதான் நினைக்கிறேன். வெகுளியான காதலன் கதாபாத்திரத்தில் கச்சிதமாய் பொருந்தியுள்ளார்.


காதலை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் தடுமாறும் போது இன்றைய பெண்களின் மனநிலையை அப்படியே நடிப்பில் வெளிகாட்டியுள்ளார் சோனியா அகர்வால்.


முதலில் ரவிகிருஷ்ணாவின் காதலை வெறுப்பது ஒரு பெண்ணின் பக்கம் இருந்து பார்க்கும்போதுதான் அவளின் கஷ்டங்கள் என்ன என்று தெரிகிறது. இதை வெறும் படமாய் நான் பார்க்கவில்லை. இன்றைய காதலர்களின் வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளாய்த்தான் பார்த்தேன்.


இந்த திரைப்படம் என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தை அப்படியே பதிவு செய்ய என்னால் எவ்வளவு முயன்றும் முடியவில்லை. சில விஷயங்களை பதிவு செய்வதைவிட உணர்வதில்தான் அதிகம் இன்பம் கிடைக்கிறது.


- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: