அழகு அழகு

Thursday, October 11, 2012



அழகு அழகு உலகம் அழகோ அழகு
அழகு அழகு வாழ்க்கை அழகோ அழகு
முதலில் தோன்றும் காதல் அழகு
முதலில் கிடைத்த முத்தம் அழகு
முதலில் பூத்த பூவும் அழகு
முதலில் அமைந்த நட்பும் அழகு
வானம் கருத்து முதலில் தூவும்
துளிகள் அழகு…

அழகு அழகு மனிதம் அழகோ அழகு
அழகு அழகு மலரும் நினைவோ அழகு
கடைசி பக்க நாவல் அழகு
கடைசி நிமிட தூக்கம் அழகு
கடைசி கால நினைவுகள் அழகு
கடைசி வரியில் கவிதை அழகு
கடைசி கோடு வரையும் போது
ஓவியம் அழகு…

"கச்சேரி ஆரம்பம்" திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. ஒருநாள் பேருந்தில் என் ஊருக்கு பயணிக்கும்போது எதேச்சையாக இந்த பாடலை கேட்க நேர்ந்தது. முதலில் கேட்ட போதே வரிகள் என் மனதில் ஒட்டிக்கொண்டன. அதை இங்கே ரொம்ப நாட்களாக பதிய விரும்பினேன். இப்போதுதான் நேரம் கிடைத்திருக்கிறது.

- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: