பழைய குரல் கேட்கிறதே

Thursday, October 11, 2012




பழைய குரல் கேட்கிறதே யாரோ யாரோ
புதிய குரல் அழைக்கிறதே யாரோ யாரோ
எதனோடு என் நெஞ்சம் செவி சாய்க்குமோ
இரண்டோடும் சேராமல் உயிர் மாய்க்குமோ
யாரோ யாரோ…
பழைய குரல் கேட்கிறதே யாரோ யாரோ
புதிய குரல் அழைக்கிறதே யாரோ யாரோ

பகலில் சூரியன் இரவில் நிலவு
இரண்டும் பிழையா இரண்டும் சரியா
இயற்கை தீர்ப்பு சொல்லுமா ?
எந்தக் கண்ணால் உலகம் பார்ப்பேன்
நொந்து இளைத்தேன் நூலாக‌
ரெட்டைப் பிள்ளையில் எதன்மேல் நேசம்
என்று மயங்கும் தாயாக‌
துடிக்கும் துடிக்கும் மனது
தடுக்கும் தடுக்கும் மரபு
எனது வானத்தில் என்னவோ
ஏதோ இரண்டு திங்களா இரவு
பழைய குரல் கேட்கிறதே யாரோ யாரோ
புதிய குரல் அழைக்கிறதே யாரோ யாரோ

கடலில் ஒருவன் கரையில் ஒருவன்
அவனோ உயிரில் இவனோ மனதில்
இரண்டில் எதுதான் வெல்லுமோ
சொல்லி முடிக்கும் துயரம் என்றால்
சொல்லி இருப்பேன் நானாக‌
உள்ளுக்குள்ளே மூடி மறைத்தேன்
ஊமை கண்ட கனவாக‌
துடிக்கும் துடிக்கும் மனது
தடுக்கும் தடுக்கும் மரபு
எனது வானத்தில் என்னவோ
என்னவோ இரண்டு திங்களா இரவு

பழைய குரல் கேட்கிறதே யாரோ யாரோ
புதிய குரல் அழைக்கிறதே யாரோ யாரோ
எதனோடு என் நெஞ்சம் செவி சாய்க்குமோ
இரண்டோடும் சேராமல் உயிர் மாய்க்குமோ
யாரோ யாரோ…


படம்: இயற்கை
வரிகள்: வைரமுத்து
பாடியவர்: சுஜாதா
இசை: வித்யாசாகர்


- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: