மஞ்சள் நிறத்திலொரு அழகி

Thursday, October 18, 2012



    என்னவளுக்கு மிகவும் பிடித்த நிறம் மஞ்சள். எனக்கு எந்த நிறம் அதிகம் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. அனைத்து நிறங்களும் பிடிக்கும். வெண்மை, பச்சை, சிவப்பு, அப்புறம் என்னவளுக்கு பிடிக்கும் என்பதால் எனக்கும் மஞ்சள் அதிகம் பிடிக்கும். அவளுக்கு மஞ்சள் பிடிக்கும் என்பதால், ஒருமுறை தாஜ்மஹாலை நான் மஞ்சள் நிறத்தில் வரைந்து அவளிடம் கொடுத்தேன். அது நாங்கள் காதலிக்க துவங்கிய காலம். அப்போது நான் அவளுக்கு அதை கொடுத்தேன். காதலித்தால் இப்படியெல்லாம் தரனும் என்றெல்லாம் எனக்கு தெரியாது. என் அன்பை வெளிப்படுத்த எனக்கு தெரிந்த வழிகளில் எல்லாம் அவளிடன் வெளிப்படுத்தினேன். ஒருமுறை அவளைப்பற்றி கவிதை எழுதும் போது,

மஞ்சள் நிறத்திலொரு அழகி என்று அவளை குறிப்பிட்டிருந்தேன். அதை அவள் அதிகம் விரும்பினாள். அதை இங்கே நினைவுகூர்கிறேன்.

- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: