திருச்செந்தூர் இராஜபோபுரம்

Tuesday, October 30, 2012



நான் திருச்செந்தூர் சில தினங்களுக்கு முன்னர் சென்றபோது , இராஜகோபுரத்தின் தோற்றத்தை என் மூன்றாவது கண் வழியாக பார்த்தபோது எடுத்த புகைப்படம் இது.


- அன்புடன்
****தினேஷ்மாயா****

பச்சைத்தமிழ்

Sunday, October 28, 2012



இவன் யார்?’ என்குவை ஆயின், இவனே,
புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய,
எய்கணை கிழித்த பகட்டுஎழில் மார்பின்,
மறலி அன்ன களிற்றுமிசை யோனே;
களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும்,
பன்மீன் நாப்பண் திங்கள் போலவும்,
சுறவு இனத்து அன்ன வாளோர் மொய்ப்ப,
மரீஇயோர் அறியாது, மைந்துபட் டன்றே;
நோயிலன் ஆகிப் பெயர்கதில் அம்ம!
பழன மஞ்ஞை உகுத்த பீலி
கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும்,
கொழுமீன், விளைந்த கள்ளின்,
விழுநீர் வேலி நாடுகிழ வோனே.

புறநானூறு : 13 - நோயின்றிச் செல்க!
பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன் : சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி.
திணை : பாடாண். துறை : வாழ்த்தியல்


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


  இது புறநானூற்றில் இருந்து எடுக்கப்பட்ட பாட்டு. இதை நான் இங்கே எதற்காக பதிவு செய்திருக்கிறேன் என்று கேட்கிறீர்களா ?
    
   மேலே புறநானூற்றில் இருப்பதும் தமிழ்தான், நான் இங்கே எழுதுவதும் தமிழ்தான். ஆனால், புறநானூற்றில் இருப்பது நமக்கு அவ்வளவாக புரிவதில்லையே. ஏன்??

   தமிழை நாம் வாழவைக்கிறோம் என்று எவ்வளவு கொலை செய்திருக்கிறோம் என்று தெரிகிறதா. சங்க காலத்து தமிழ் என்று பிரித்து சொல்ல வேண்டாம். அதுவும் தமிழ்தான். அந்த தமிழை வேற்றுமொழிகளில் கலப்பால், நாம் கொஞ்சம் கொஞ்சமாய் அழித்துவிட்டோம் என்பதுதானே மறுக்கமுடியாத உண்மை. இன்றைய சூழலில் வெறும் ஏட்டுக்களில் மட்டுமே வாழ்ந்துக்கொண்டிருக்கிறது என் பச்சைத்தமிழ். இப்போது இருப்பதெல்லாம் சாயம் வெளுத்துப்போன தமிழ் மட்டுமே. சங்க இலக்கியத்தை அனைவரும் படிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களை அறிந்துக்கொள்ள அனைவரும் முயற்சி செய்ய வேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள். அதுதான் ஒரு பச்சைத்தமிழனுக்கு அழகு..

- அன்புடன்
****தினேஷ்மாயா****

ஆசை





  என் ஆயிரமாவது பதிவில் எனது சின்ன சின்ன ஆசைகளை பதிவு செய்திருந்தேன். இன்னும் சொல்ல ஆயிரம் ஆயிரம் ஆசைகள் மனதில் ஒளிந்திருக்கிறது. இப்போது சில வித்தியாசமான ஆசைகள் சிலவற்றை இங்கே பதிய விரும்புகிறேன்.

  • முற்றிலும் நான்கு சுவர்களால் மட்டுமே ஆன ஒரு அறை. அதில் கதவுகூட இருக்க கூடாது. மின்விசிறி, ஜன்னல், நாற்காலி இப்படி எதுவும் அங்கே இருக்க கூடாது. வெறும் அறையாக இருக்க வேண்டும். என்னிடமும் எந்தவொரு பொருளும் இருக்க கூடாது. அந்த அறையில் நான் ஒருநாள் இருக்க வேண்டும். என்னத்தான் நான் அப்படி செய்கிறேன் என்று நான் பார்க்க வேண்டும்.
  • ஒரு தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு பொழுதில் தன்னந்தனியாய் தூரத்தில் இருக்கும் ஊர் நோக்கி என் கைப்பேசியில் பாடல்களை கேட்டவாரே நடந்து செல்ல வேண்டும்.
  • ஒரு பெரிய நீர்வீழ்ச்சியின் மேலே இருந்து கீழே குதிக்க வேண்டும். பாராஷூட் உதவியுடன் !!
  • ஒரு நூறு அடியாட்களின் மத்தியில் தனியாளாய் மாட்டிக்கொண்டு, ஒரு ஹீரோ போல அனைவரையும் சண்டையிட்டு ஜெயிக்கனும்.
  • சஹாரா பாலைவனத்தில் ஒரு நாளை கடக்க வேண்டும்.
  • Igloo-வின் உள்ளே ஓரிரவு தங்க வேண்டும்.
 இனியும் நிறைய இருக்கு. அடுத்தபதிவில் சொல்கிறேன்.

- அன்புடன்
****தினேஷ்மாயா****

எவ்வளவோ முயற்சித்தேன்




“எவ்வளவோ முயற்சித்தேன்”
   பெரும்பாலான மனிதர்கள் தங்கள் தோல்வியை நியாயப்படுத்த சொல்லும் வார்த்தை இது. வெற்றியாளர்கள் என்றுமே காரணங்களை சொல்வதில்லை. தோல்வியாளர்கள் மட்டுமே தங்கள் தோல்வியை ஏற்கமுடியாமல் காரணம் சொல்வார்கள். எவ்வளவோ முயற்சித்தேன் என்கிறார்கள். எவ்வளவு வரை முயற்சித்தார்கள் என்று அவர்களால் சொல்ல முடியாது. வெற்றியாளர்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வரை முயற்சிப்பதில்லை. அவர்கள் வெற்றி கிட்டும்வரை முயற்சிப்பார்கள். 

 NEVER GIVE UP - என்று ஆங்கிலத்தில் ஒரு நல்ல வாசகம் சொல்வார்கள்.எவ்வளவோ முயற்சித்தேன் என்று சொல்பவர்கள் எதோ ஒரு இடத்தில் முயற்சியை விட்டுவிட்டார்கள் என்று அர்த்தம். ஆனால், வெற்றி கிட்டும்வரை தொடர்ந்து  முயற்சி செய்பவனே வெற்றியை முத்தமிடுவான் என்று எத்தனையோ பழமொழிகள் இருக்கு, பல்வேறு நாட்டு மேதைகளும் பலவாறு சொல்லிவைத்து சென்றாலும் அதை நம் மனது தேவைப்படும் இடத்தில் நினைவில் வைத்துக்கொள்ள மறக்கிறது, மறுக்கிறது....


- அன்புடன்
****தினேஷ்மாயா****

செத்துடலாம் போல இருக்கு




“செத்துடலாம் போல இருக்கு” 

  இந்த வார்த்தைய எல்லோரும் ஒருமுறை மனதிற்குள் நிச்சயம் ஒருமுறையாச்சும் சொல்லி பார்த்திருப்பார்கள். அப்படி நினைத்தவர்கள் கோழைகளும் அல்ல, இதை நினைக்காதவர்கள் வீரரும் அல்ல. அவரவர் சூழ்நிலையை பொருத்தது இது.

- அன்புடன்
****தினேஷ்மாயா****

தத்துவமழை


   பொதுவாக மனிதன் தனிமையில் இருக்கும்போதும், அதுவும் சோகத்தில் இருக்கும்போதும்தான்  அதிகமாக தத்துவ மழை அவனுள் பெய்கிறது. ஏமாற்றமும், தோல்வியும் சில சமயங்களில் பல தத்துவங்களை ஊற்றெடுக்க செய்கிறது.
  எனக்கும் ஒரு சின்ன சோகம். அப்போது உதிர்ந்த தத்துவத்தைதான் எனது “கசப்பான உண்மை” என்னும் முந்தைய பதிவில் எழுதியிருந்தேன்.
  வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களைவிட சோகமான தருணங்கள்தான் மனிதனுக்கு வாழ்க்கையையும் , வாழ்க்கையின் மற்ற பாடங்களையும் கற்றுக்கொடுக்கிறது.


- அன்புடன்
****தினேஷ்மாயா****

கசப்பான உண்மை



கசப்பான உண்மை !!

அன்பும் கூட இனிப்பு மாதிரிதான். நாம் அதை அதிகமாக தந்தால் பிறர்க்கு திகட்டத்தான் செய்யும்.. 


- அன்புடன்
****தினேஷ்மாயா****

நம் தனி உலகம்

Monday, October 22, 2012


நான் என்மனதில் அவளுக்காக ஏற்படுத்திய உலகம் இதுபோல் தான் இருக்கும்.

- அன்புடன்
****தினேஷ்மாயா****

அன்பு



அன்பை கையில் எடுத்துக்கொள்ளுங்கள். கால் போன போக்கில் நடந்து செல்லுங்கள். வழியில் சந்திக்கும் அனைவருக்கும் அன்பை இலவசமாக தாருங்கள். இதைவிட ஒரு சிறந்த செயல் இவ்வுலகில் வேறெதுவும் இருக்க முடியாது.

- அன்புடன்
****தினேஷ்மாயா****

ஒருநாள்



    ஒருநாள் நிச்சயம் அவளை நான் சந்திக்க நேரிடும். அப்போது எவ்வளவு பணம் நான் சம்பாதித்திருப்பேன் என்று எனக்கு தெரியாது. ஆனால், அவள் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு நிறைய அன்பையும் நல்ல உள்ளங்களையும் சம்பாதித்திருப்பேன். அந்த அற்புதமான வாழ்க்கையை என்னுடன் வாழமுடியாமல் போனதற்கு அவள் தான் அன்று வருத்தப்படுவாளே தவிர அவள் பிரிந்து சென்றதற்காக நான் வருந்தமாட்டேன்.

- அன்புடன்
****தினேஷ்மாயா****

சிற்றின்பம்

Sunday, October 21, 2012



   அனாதை குழந்தைகளை பார்க்கும் போது, இரண்டு உயிர்கள் அவசரத்தில் செய்யும் தவறுக்காக இன்னொரு உயிர் வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறது. ஏன் இவர்களின் சிற்றின்ப சந்தோஷத்திற்காக எந்த ஒரு தவறும் செய்யாத ஒரு உயிரை தேவையில்லாமல் ஆயுசு முழுக்கவும் துன்பத்தில் விட்டு செல்கின்றனர் என்று தோன்றுகிறது.
   நாம் செய்யும் ஒவ்வொரு விஷயமும் எதாவது ஒரு விஷயத்தில் மற்றவர்களை பாதிக்கத்தான் செய்யும். ஆனால், அந்த பாதிப்பு பெரிதாய் இருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சில நிமிட சந்தோஷத்திற்கு ஆசைப்பட்டு அவர்கள் செய்யும் தவறை மறைக்க குழந்தைகளை அனாதை ஆசிரமத்தில் விட்டுவிடுகின்றனர். தாய் தந்தை பெயரே தெரியாத குழந்தைகளை நான் பார்த்திருக்கிறேன். அடிக்கடி அவர்களை பார்க்க செல்லும்போதெல்லாம் அவர்கள் அதிகம் மகிழ்வர். எங்களை வந்து பார்க்க சொந்தம் என்று யாருமில்லை, நீங்கள் எங்கள் அனைவரையும் பார்க்க வருவது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கு என்பார்கள். குழந்தையை ஆசிரமத்தில் விட்டதுடன் தங்கள் கடமை முடிந்துவிட்டதாய் எண்ணுகின்றனர். பின்னர் தங்கள் வாழ்க்கையை பார்த்து ஓடத்துவங்கிவிடுகின்றனர். ஒரு குழந்தை தான் அனாதை, தனக்கு ஆதரவளிக்க யாரும் இல்லை என்பதை உணரும்போது அந்த தருணத்தில்அதன் மனது எவ்வளவு வலிக்கும் என்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. தங்கள் நண்பர்கள் வீட்டில் பெற்றோருடன் வாழும்போது அதை எண்ணி இவர்கள் எவ்வளவு துடித்துப்போவார்கள் என்று நினைத்துப் பார்க்கிறேன். இவர்கள் பெற்றோர் செய்யும் சிறிய தவறு வாழ்க்கை முழுவதும் இவர்களுக்கு எவ்வளவு பெரிய துன்பம் என்பது அவர்கள் சந்தோஷமாக இருக்கும் அந்த தருணத்தில் தோன்றுவதேயில்லை. மனிதன் என்பவன் இன்பத்திற்கு அடிமை என்பதற்கு இதுவே ஒரு சிறந்த எடுத்துகாட்டு என்பேன் நான்.

- அன்புடன்
****தினேஷ்மாயா****

கற்றது தமிழ்..



- அன்புடன்
**** தினேஷ்மாயா****

துன்பம்



துன்பம்
அனைவருக்கும் ஒன்று தான்
ஆனால் அது...

அழுபவனுக்கு ‘கண்ணீர்’ கொடுக்கும் !
எழுபவனுக்கு ‘தண்ணீர்’ கொடுக்கும் !

@ படித்ததில் பிடித்தது @

- அன்புடன்
****தினேஷ்மாயா****

அன்பு மகனுக்கு

Saturday, October 20, 2012




அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!

வசதியாகத்தான் இருக்கிறது மகனே
நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம்.

பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ வெளியேறிய போது, முன்பு நானும்
இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு
என் முதுகுக்குப் பின்னால் நீ கதறக் கதறக்
கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி
ஞாபகத்தில் எழுகிறது!

முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து
நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட
அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி
எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்!

இதுவரையில் ஒருமுறையேனும் என் முகம் பார்க்க
நீ வராமல் போனாலும் என் பராமரிப்பிற்கான
மாதத் தொகையை மறக்காமல்
அனுப்பி வைப்பதற்காக மனம் மகிழ்ச்சியடைகிறது

நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில்
உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் படிப்பை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததன் எதிர்வினையே இதுவென்று இப்போது அறிகிறேன்!

இளம் வயதினில் நீ சிறுகச் சிறுக சேமித்த அனுபவத்தை என் முதுமைப் பருவத்தில் மொத்தமாக எனக்கே செலவு செய்கிறாய் ஆயினும்உனக்கும் எனக்கும் ஒரு சிறு வேறுபாடு.

நான் கற்றுக்கொடுத்தேன் உனக்கு
வாழ்க்கை இதுதானென்று!
நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு
உறவுகள் இதுதானென்று!!

@ படித்ததில் பிடித்தது @

- அன்புடன்
****தினேஷ்மாயா****

எங்களை வாழவிடுங்கள்




எங்களின் மரணத்திற்குப் பின்
காற்றுக்கு எங்கே போவீர்கள்
மழைக்கு எங்கே போவீர்கள்..!!
எங்களின் மரணத்திற்கு
அடுத்த நொடி 
உங்களின் மரணம்
அதனால் சொல்லுகிறேன்
நீங்கள் வாழ
எங்களை வாழவிடுங்கள்..!!

இப்படிக்கு,
-மனிதரை நேசிக்கும் மரம்...!!! 

@ படித்ததில் பிடித்தது @

- அன்புடன்
****தினேஷ்மாயா****

அவள் நினைவாக

Friday, October 19, 2012



அவள் நினைவாக எதுவும் இல்லை

நினைவுகள் முழுவதும் அவளாகவே இருக்கிறாள் !

****தினேஷ்மாயா****

சுயமுயற்சி




அடுத்தவனின் நிழலில் நின்று

சுகத்தை அனுபவிப்பதை விட,

தனியாக நின்று கருகிப்போவதே மேல்...


@ படித்ததில் பிடித்தது @

- அன்புடன்
****தினேஷ்மாயா****

7/G ரெயின்போ காலனி


7/G ரெயின்போ காலனி



    இந்த திரைப்படம் வெளிவந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் எனக்கு இந்த திரைப்படத்தை பார்க்க சரியான நேரம் கிடைக்கவில்லை. சில மாதங்களுக்கு முன்னர்தான் இந்த திரைப்படத்தை பார்த்தேன். சாதாரண காதல் கதை என்று இதை சொல்லிவிட முடியாது. வழக்கமான காதல் கதை இல்லை இது. உண்மையான காதல் கதை என்றும் சொல்லி இதை விளம்பரப்படுத்தினார்கள். ஆனால் எது எப்படியோ. என் மனதை இந்த திரைப்படம் வெகுவாய் கவர்ந்துவிட்டது. கடைசியில் கண்களில் அல்ல, மனதில் கண்ணீரை வரவைத்துவிட்டது. அதுவும் இந்த திரைப்படத்தை அவள் என்னை  பிரிந்து சென்றபிறகுதான் பார்த்தேன். அதனால்தானோ என்னவோ தெரியவில்லை இந்த படம் மனதில் ஆழமாய் பதிந்துவிட்டது. அதை என் வலையில் நிச்சயம் பதிந்தே தீரவேண்டும் என்று நினைத்தேன்.


காதலியை துரத்தி துரத்தி காதலிக்கும் நாயகன் நன்றாக நடித்துள்ளார். இது ரவிகிருஷ்ணாவிற்கு முதல் படம் என்றுதான் நினைக்கிறேன். வெகுளியான காதலன் கதாபாத்திரத்தில் கச்சிதமாய் பொருந்தியுள்ளார்.


காதலை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் தடுமாறும் போது இன்றைய பெண்களின் மனநிலையை அப்படியே நடிப்பில் வெளிகாட்டியுள்ளார் சோனியா அகர்வால்.


முதலில் ரவிகிருஷ்ணாவின் காதலை வெறுப்பது ஒரு பெண்ணின் பக்கம் இருந்து பார்க்கும்போதுதான் அவளின் கஷ்டங்கள் என்ன என்று தெரிகிறது. இதை வெறும் படமாய் நான் பார்க்கவில்லை. இன்றைய காதலர்களின் வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளாய்த்தான் பார்த்தேன்.


இந்த திரைப்படம் என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தை அப்படியே பதிவு செய்ய என்னால் எவ்வளவு முயன்றும் முடியவில்லை. சில விஷயங்களை பதிவு செய்வதைவிட உணர்வதில்தான் அதிகம் இன்பம் கிடைக்கிறது.


- அன்புடன்
****தினேஷ்மாயா****

விழியில் உன் விழியில்



கண்ணோடு கண் சேரும்போது
வார்த்தைகள் எங்கே போகும் ?
கண்ணே உன் முன்னே வந்தால்
என் நெஞ்சம் குழந்தை ஆகும்…

விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன்
அந்த நொடியில் என் எதிர்காலம்
நீதான் என்று உயிர் சொன்னதே...
வழியில் உன் வழியில் வந்து நடந்தேன்
அந்த நொடியில் என் வழிதுணை
நீதான் என்று நிழல் சொன்னதே...

உன்னோடு வாழ்ந்திடத்தானே நான் வாழ்கிறேன்..
உன் கையில் என்னை தந்து தோள்சாய்கிறேன்
ஓ தோள்சாய்கிறேன் ..

விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன்
அந்த நொடியில் என் எதிர்காலம்
நீதான் என்று உயிர் சொன்னதே...
வழியில் உன் வழியில் வந்து நடந்தேன்
அந்த நொடியில் என் வழிதுணை
நீதான் என்று நிழல் சொன்னதே...

இதுவரை என் இருதயம்
இந்த உணர்வினில் தடுமாறவில்லை
முதல்முறை இந்த இளமையின்
சுகம் உணர்கிறேன் நான் தூங்கவில்லை
குடையோடு நான் போனேன்
மழையினில் ஏனோ நனைகின்றேன்..
கடிகாரம் இருந்தாலும்
காலடி சத்தத்தில் மணி பார்த்தேன்..
என் தனிமைக்கு தனிமைகள் நீ வந்து கொடுத்தாய்..

விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன்
அந்த நொடியில் என் எதிர்காலம்
நீதான் என்று உயிர் சொன்னதே...
வழியில் உன் வழியில் வந்து நடந்தேன்
அந்த நொடியில் என் வழிதுணை
நீதான் என்று நிழல் சொன்னதே...

சிரிப்பிலே உன் சிரிப்பிலே
சிறையடைக்கிறாய் நான் மீழவில்லை
உறவுகள் ஒன்று சேர்கையில்
என்ன ஆகிறேன் என்று தெரியவில்லை
உன்னோடு நான் பேசும்
ஒவ்வொரு வார்த்தையும் இனிக்கிறதே
உரையாடல் தொடர்தாலும்
மௌனங்கள் கூட பிடிக்கிறதே
என் கனவுக்கு கனவுகள் நீ வந்து கொடுத்தாய்

விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன்
அந்த நொடியில் என் எதிர்காலம்
நீதான் என்று உயிர் சொன்னதே...
வழியில் உன் வழியில் வந்து நடந்தேன்
அந்த நொடியில் என் வழிதுணை
நீதான் என்று நிழல் சொன்னதே...
உன்னோடு வாழ்ந்திடத்தானே நான் வாழ்கிறேன்..
உன் கையில் என்னை தந்து தோள்சாய்கிறேன்
ஓ தோள்சாய்கிறேன் ..
விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன்
அந்த நொடியில் என் எதிர்காலம்
நீதான் என்று உயிர் சொன்னதே...

படம்: கிரீடம்
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: சோனு நிகம், ஷ்வேதா


இந்த பாடல் நான் கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும்போதுதான் முதலில் கேட்டேன். அதிகம் மனதை தொடவில்லை என்றாலும் இந்த பாடல் ஏனோ எனக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. ஒருமுறை பேருந்தில் என் ஊருக்கு சென்றுக்கொண்டிருக்கும்போது ஜன்னலோர இருக்கையில் அமர்ந்துக்கொண்டு இந்த பாடலை மனதிற்குள் பாடிக்கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் பாடல் கேட்கும் வசதிகொண்ட செல்பேசி இல்லை. அன்று நினைத்துக்கொண்டேன். அடுத்தமுறை ஒரு நல்ல செல்பேசி வாங்கியதும், இப்பாடலை அதில் பதிவேற்றம் செய்துக்கொண்டு, ஊருக்கு செல்லும்போது பேருந்தில் ஹெட்செட் மாட்டிக்கொண்டு கேட்கவேண்டும் என்று. சின்ன ஆசைதான். இருந்தாலும் சில மாதங்கள் கழித்து அதை நிறைவேற்றிக்கொண்டேன். புது செல்பேசி வாங்கியதும் ஊருக்கு பேருந்தில் சென்றேன். அதே ஜன்னலோர இருக்கை. வெளியே மழை தூரல். என் காதில் ஹெட்செட். இந்த பாடலை கேட்டவாரே சென்றேன். என் சின்ன ஆசையை நிறைவேற்றிக்கொண்ட சந்தோஷத்துடன் இப்பாடலை கேட்டபடியே பயணித்தேன். எனக்கு அதிகம் பிடித்த ஒவ்வொரு பாடலை கேட்கும்போதும் என் மனதில் அந்த பாடல் பதிந்ததற்கான காரணம் ஒன்று இருக்கும். இந்த பாடல் என் மனதிற்குள் வந்த காரணம் இது..

- அன்புடன்
****தினேஷ்மாயா****

உனக்குள் நானே உருகும் இரவில்





மின்னும் பனிச் சாறு உள் நெஞ்சில் சேர்ந்தாளே
கண்ணில் உன்னை வைத்து பெண் தைத்துக் கொண்டாளே
வெண்ணிலா தூவி தன் காதல் சொன்னாளே
மல்லிகை வாசம் உன் பேச்சில் கண்டாளே
பொன் மான் இவளா...உன் வானவில்லா...
பொன் மான் இவளா...உன் வானவில்லா...

உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திடவா
சிறுகச் சிறுக உன்னில் என்னை
தொலைத்த மொழி சொல்லவா
சொல்லா சொல்லும் என்னை வாட்டும்
ரணமும் தேனல்லவா
உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா

ஏனோ நம் பொய் வார்த்தைதான்
ஏன் அதில் உன் என் மௌனமேதான்
உதட்டில் சிரிப்பைத் தந்தாய்
மனதில் கனத்தைத் தந்தாய்
ஒரு முறை உன்னை எனக்கென்று சுவாசிக்கவா
மறுமுறை உன்னை புதிதாக சாசிக்கவா

உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திடவா

தீப்போல் தேன்போல் சலனமேதான்
மதி என் நிம்மதி சிதையவேதான்
நிழலை விட்டுச்சென்றாயே
நினைவை வெட்டிச்சென்றாயே
இனி ஒரு பிறவி உன்னோடு வாழ்ந்திடவா
அதுவரை என்னை காற்றோடு சேர்த்திடவா

உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திடவா
சிறுகச் சிறுக உன்னில் என்னை
தொலைத்த மொழி சொல்லவா
சொல்லா சொல்லும் என்னை வாட்டும்
ரணமும் தேனல்லவா
ரணமும் தேனல்லவா
ரணமும் தேனல்லவா

திரைப்படம்: பச்சைக்கிளி முத்துச்சரம்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள்: தாமரை


- அன்புடன்
****தினேஷ்மாயா****

ரகசியமானது காதல்





ரகசியமானது காதல் மிகமிக
ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம்தனை மறைக்கும்
ஒருதலையாகவும் சுகமனுபவிக்கும்
சுவாரசியமானது காதல் மிகமிக
சுவாரசியமானது காதல்

சொல்லாமல் செய்யும் காதல் கனமானது
சொல்லச் சொன்னாலும் சொல்வதுமில்லை மனமானது
சொல்லும் சொல்லைத் தேடித்தேடி யுகம் போனது
இந்த சோகம் தானே காதலிலே சுகமானது
வாசனை வெளிச்சததைப் போல
அது சுதந்திரமானதுமல்ல
ஈரத்தை இருட்டினைப் போல
அது ஒளிந்திடும் வெளிவரும் மெல்ல

ரகசியமானது காதல் மிகமிக
ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம்தனை மறைக்கும்
ஒருதலையாகவும் சுகமனுபவிக்கும்
சுவாரசியமானது காதல் மிகமிக
சுவாரசியமானது காதல்

கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது
கேட்டுக் கொடுத்தாலே காதல் அங்கு உயிராகுது
கேட்கும் கேள்விக்காகத் தானே பதில் வாழுது
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது
நீரினை நெருப்பினைப் போல
விரல் தொடுதலில் புரிவதும் அல்ல
காதலும் கடவுளைப் போல
அதை உயிரினில் உணரணும் மெல்ல

ரகசியமானது காதல் மிகமிக
ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம்தனை மறைக்கும்
ஒருதலையாகவும் சுகமனுபவிக்கும்
சுவாரசியமானது காதல் மிகமிக
சுவாரசியமானது காதல்

படம் : கோடம்பாக்கம்
குரல் : ஹரிஷ் ராகவேந்திரா, ஹரிணி
இசை : சிற்பி

- அன்புடன்
****தினேஷ்மாயா****

கல்யாண தேன் நிலா





கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

தென்பாண்டிக் கூடலா
தேவாரப் பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா

என் அன்புக் காதலா
என்னாளும் கூடலா
பேரின்பம் நெய்யிலா
நீ தீண்டும் கையிலா

பார்ப்போமே ஆவலா
வா வா நிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா

உன் தேகம் தேக்கிலா
தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா
நான் கைதிக் கூண்டிலா
சங்கீதம் பாட்டிலா
நீ பேசும் பேச்சிலா
என் ஜீவன் என்னிலா
உன் பார்வை தன்னிலா
தேனூறும் வேர்ப்பலா
உன் சொல்லிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

திரைப்படம்: மௌனம் சம்மதம்
வரிகள்: வாலி
குரல்: கே.ஜே.யேசுதாஸ், சித்ரா

இந்த பாடலுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. பாடலின் வரிகள் அனைத்தும் இயைபுத்தொடையில் அமைந்திருக்கும்படி எழுதியிருப்பார் கவிஞர் வாலி அவர்கள். இந்த சிறப்பை என்னவள் எனக்கு சொன்னபின்னர் தான் நானே கவனித்தேன்.

- அன்புடன்
****தினேஷ்மாயா****

எங்கேயோ பார்த்த மயக்கம்




Can you feel her?
Is your heart speaking to her?
Can you feel the love?
Yes !

எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாழ்ந்த‌ நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்திவள் பார்க்கும் போது
கடவுளை என்று நம்பும் மனது

இன்னும் கண்கள் திறக்காத செல்வம்
ஒரு கோடி பூ பூக்கும் வெட்கம்
ஆண் மனதை அழிக்க வந்த சாபம்
அறிவை மயக்கும் மாய தாகம்
இவளைப் பார்த்த இன்பம் போதும்
வாழ்ந்துப் பார்க்க நெஞ்சம் ஏங்கும்

கனவுகளில் வாழ்ந்த நாளை
கண் எதிரே பார்க்கிறேன்
கதைகளிலே கேட்டப் பெண்ணா
திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்
அங்கும் இங்கும் ஓடும் கால்கள்
அசைய மறுத்து வேண்டுதே
இந்த இடத்தில் இன்னும் நிற்க
இதயம் கூட ஏங்குதே..
என்னானதோ ஏதானதோ
கண்ணாடி போல் உடைந்திடும் மனது
கவிதை ஒன்று பார்த்து போக
கண்கள் கலங்கி நானும் ஏங்க
மழையின் சாரல் என்னைத் தாக்க
விடைகள் எல்லாம் கேள்வி கேட்க

எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாழ்ந்த‌ நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்திவள் பார்க்கும் போது
கடவுளை என்று நம்பும் மனது

ஆதி அந்தமும் மறந்து
உன் அருகில் கரைந்து நான் போனேன்
ஆண்கள் வெட்கப்படும் தருணம்
உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்
இடி விழுந்த வீட்டில் இன்று
பூச்செடிகள் பூக்கிறதே
இவள் தானே உந்தன் பாதி
கடவுள் பதில் கேக்கிறதே
வியந்து வியந்து உடைந்து உடைந்து
சரிந்து சரிந்து மிரண்டு மிரண்டு
இந்த நிமிடம் மீண்டும் பிறந்து
உனக்குள் கலந்து தொலைந்து தொலைந்து…

திரைப்படம் : யாரடி நீ மோகினி
இசை : யுவன் ஷங்கர் ராஜா
வரிகள்: நா. முத்துகுமார்
பாடியவர்கள் : கார்த்திக், நவீன், உதித் நாராயணன்


- அன்புடன்
****தினேஷ்மாயா****

என் மேல் விழுந்த மழைத் துளியே




என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன்

என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

மண்ணை திறந்தால் நீர் இருக்கும் என்
மனதை திறந்தால் நீ இருப்பாய்

ஒலியை திறந்தால் இசை இருக்கும் என்
உயிரை திறந்தால் நீ இருப்பாய்

வானம் திறந்தால் மழை இருக்கும் என்
வயதைத் திறந்தால் நீ இருப்பாய்

இரவை திறந்தால் பகல் இருக்கும் என்
இமையைத் திறந்தால் நீ இருப்பாய்

என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

இலையும் மலரும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
அலையும் கரையும் உரசுகையில்
பேசும் பாஷை பேசிடுமோ

மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ

பார்வை ரெண்டும் பேசிக் கொண்டால்
பாஷை ஊமையாய் விடுமோ

என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன்

என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

திரைப்படம் : மே மாதம்
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
வரிகள்: வைரமுத்து
பாடியவர்கள்: பி. ஜெயச்சந்திரன், சித்ரா

- அன்புடன்
****தினேஷ்மாயா****