எமனுக்கு தூது

Friday, July 09, 2010






யார் என்ன சொன்னாலும் சரி, எனக்கென்ன என்று இருப்பவர்கள் இவ்வுலகில் ஏராளம். செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்ட வேண்டாம் என்று ஆயிரம் முறை சொன்னாலும் நம் மக்கள் திருந்துவதாயில்லை.    
     பெரும்பாலும் 2 மற்றும் 4 சக்கர வாகன ஓட்டுனர்கள்தான் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.அதாவது அவர்களால் மற்றவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். வண்டியில் செல்லும்போது ஏதாவது போன் வந்தால் வண்டியை நிறுத்திவிட்டு அதன் பின் பேசிமுடித்துவிட்டு செல்லலாமே. முடியாது நான் அப்படியே வண்டியை ஓட்டிய படியேதான் பேசுவேன் என்று சொல்பவர்களுக்கு ஆயுள் கொஞ்சம் கம்மிதான். வண்டி ஓட்டும்போது உங்கள் கவனம் சாலையில்தான் இருக்க வேண்டும். நீங்கள் செல்ல வேண்டிய இடம் முக்கியமானால் முதலில் அந்த இடத்திற்கு சென்ற பிறகு போனை எடுத்து பேசுங்கள் இல்லை உங்களுக்கு வரும் போன் முக்கியமானதாக இருந்தால் உங்கள் வண்டியை நிறுத்திவிட்டு பேசி முடித்த பின் செல்லுங்கள். எனக்கு இரண்டுமே முக்கியம் நான் வண்டி ஓட்டிக்கொண்டே பேசுவேன் என்பவர்களுக்காக மரணம் காத்துக் கொண்டிருக்கிறது என்பதை மறந்திட வேண்டாம். அட என்னய்யா சும்மா பூச்சாண்டி காட்டிட்டு.. நான் எவ்ளோ முறை வண்டி ஓட்டியபடியே போன் பேசிட்டு போய் இருக்கேன் தெரியுமா என்று சொல்கிறீர்களா. உங்களுக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான். பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான். பல முறை நீங்கள் தவறு செய்து மாட்டாமல் இருப்பதாய் கர்வம் கொள்ளாதீர்கள். மரணம் உங்களை தழுவும் அந்த தருவாயில் நீங்கள் வருத்தப் படாமலிருக்க இப்போதே திருந்துங்கள்.



அன்புடன் -



தினேஷ்மாயா 

0 Comments: