அவளுக்கு விநாயகர்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும். தினமும் விநாயகர் முகத்தில் விழித்த பின்னர்தான் தன் நாளை தொடங்குவாள். அவள் பிறந்தநாளிற்கு ஒரு சிறிய விநாயகர் சிலை வாங்கி தந்தேன்.. மறுநாளே நான் வாங்கிதந்த விநாயகர் சிலைக்கு அழகாக ஒரு Dress தயார்செய்து அதை விநாயகருக்கு போட்டிருந்தாள்... என்னடி இது புதிய பழக்கம் என்று அவளிடம் கேட்டேன். அவள் சொன்னாள், இனிமேல் தினமும் விநாயகரை குளிப்பாட்டிவிட்டு இந்த துணியை போட்டுவிட்டுதான் நான் மற்ற வேலையை செய்வேன் என்றாள்.. அவள் அப்பாவித்தனத்தை எண்ணி பலமுறை சிரித்திருக்கிறேன்..
எனக்கு ரொம்பவும் பிடிச்ச கடவுள் - முருகர்... எனக்கு தமிழ் என்றால் உயிர். நான் கவிதை எழுத எனக்கு துணையாய் இருப்பதால். அதோடு தமிழ் கடவுள் முருகனும் எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு முருகரை பிடிக்கும் ஆதலால் அவளுக்கும் முருகரை ரொம்ப பிடிக்கும். அவள் கோவிலுக்கு செல்வதே எனக்காக வேண்டிக் கொள்ளத்தான். அவளுக்கென்று எதையும் வேண்டிக் கொள்ள மாட்டாள். ஏன் என்று கேட்டாள், நீ தான் இருக்கியே, நீ என்னை நல்லா பாத்துக்குவனு எனக்குத் தெரியும் அதை எதற்கு கடவுளிடம் கேட்டுட்டு என்று சொல்வாள்.......
அன்புடன் -
தினேஷ்மாயா
0 Comments:
Post a Comment