ஒருநாள் அவள் ஊருக்கு சென்றிருந்தேன். அவள் அன்று ஊரில் இல்லை. அவளுக்கு மிகவும் பிடித்த அவள் வீட்டின் அருகாமையில் இருக்கும் கோவிலுக்கு சென்று வழிப்பாடு செய்துவிட்டு வந்தேன். பின் அவள் வீடு எங்கு உள்ளது என்று தேடிதேடி அலைந்தேன். நல்லவேளை நான் என் நண்பனுடன் சென்றிருந்ததால் அதிகமாக நான் அலையவில்லை. ஒருவழியாக அவள் வீட்டை கண்டுபிடித்துவிட்டேன். சரி இன்னொரு நாள் அவள் இருக்கும்போது அவள் வீட்டிற்கு செல்லலாம் என்று திரும்பி வந்துவிட்டேன்.
அவளிடன் CellPhone எதுவும் இல்லை. அவளை எப்படி தொடர்பு கொள்வது என்று புரியாமல் தவித்த போது அவள் வீட்டு தொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்கலாம் என்று முடிவு செய்தேன். கடவுள் எனக்கு சாதகமாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவள் வீட்டு தொலைப்பேசி எண்ணை கண்டுபிடித்துவிட்டேன். அதில் என்ன ஒரு குழப்பம் என்றால் அவள் வீட்டில் 2 தொலைப்பேசி இணைப்புகள் இருப்பது தெரிய வந்தது. அதில் எந்த எண்ணில் அழைத்தால் அவள் கிடைப்பாள் என்று குழம்பிக் கிடந்தேன். சரி. இதை பின்னர் பார்த்துக் கொள்வோம் என்று அவள் வீட்டின் தொலைப்பேசி எண்ணை மனப்பாடம் செய்துக் கொண்டு என் வீடு வந்து சேர்ந்தேன். ஆனால் இன்று வரை அவளிடம் தொலைப்பேசியில் பேசியது இல்லை.
பேருந்தில் பயணிக்கும்போது பேசுவது மட்டுமே உண்டு.அதுவும் எதேச்சையாகவே எப்போதாவது பேசிக் கொள்வோம்.ஒருநாள் அவள் வீட்டு தொலைப்பேசி எண் என்ன என்று அவளிடமே கேட்டேன். அவள் எதற்கு கேட்கிறாய் என்று என்னிடம் கேட்டாள். சும்மாதான் கேட்டேன் என்று நான் சொல்ல அவளோ சும்மா தானே கேட்கிறாய் அதனால் உனக்கு முழு நம்பரையும் தரமாட்டேன். பாதி நம்பரை மட்டும் தருகிறேன் என்று சொன்னவள், எங்கள் வீட்டில் 2 LandLine Connections இருக்கு. 2 நம்பரும் ஒரே மாதிரிதான் இருக்கும். கடைசி நம்பர் மட்டும்தான் மாறும். மொத்தம் 8 நம்பர். அதில் இரண்டு 2 மற்றும் இரண்டு 0 இருக்கும். மற்ற நம்பர் 2 Muliples ஆக இருக்கும்னு சொல்லிட்டு கிளம்பிட்டா. ஆனாலும் இந்த பொன்னுங்களுக்கு இவ்வளவு குறும்பு இருக்க கூடாதுங்க. இவ்ளோ சொல்லிட்டு போனவ பேசாம போன் நம்பரையே சொல்லிட்டு போயிருக்கலாம். ஒரு வழியா 1st 2 நம்பர் என்னனு கண்டுபிடிச்சுட்டேன். அதுக்கப்புறம் அதைதொடர்ந்து 2- 0 வரும்னும் கண்டுபிடிச்சுட்டேன். கடைசியில் எல்லா நம்பரையும் கண்டுபிடிச்சு
பார்த்தால்.............................................................................................................................................
நான்தான் அவங்க வீட்டு நம்பரை ஏற்கெனவே கண்டுபிடிச்சுட்டேனே திரும்ப ஏன் லூசு மாதிரி மீண்டும் இல்லாத மூளைக்கு வேலை கொடுத்து தேடினேன் என்று தெரிய வரும் முன்......
தூக்கம் கலைந்து கனவும் கலைந்து என் Cell Phone WallPaper-ல் வைத்திருக்கும் அவள் கண்களைப் பார்த்து ஒரு Good Morning சொல்லிவிட்டு பள்ளிக்கூடம் செல்ல Ready ஆகிறேன். இன்றாவது அவளுடன் பேசுவேனா என்று.....
-------------------------------------------------------------------------------------------------------------
P.S. : இது வெறும் கற்பனைதான்..
தினேஷ்மாயா
0 Comments:
Post a Comment