அன்று ஒருநாள் மழை வெகுநேரமாக பெய்துக் கொண்டிருந்தது.. அவள் வீட்டில்தான் நான் இருந்தேன்.. பள்ளி முடித்து வீடு செல்லலாம் என்று கிளம்பும்போது மழை பூமியை முத்தமிடத் துவங்கியிருந்தது. அவள் வீடு நான் செல்லும் வழியில்தான் என்பதால் அவளே என்னை தன் வீட்டிற்கு அழைத்தாள். மழை நின்றபின் செல்லுமாறு சொன்னாள்.. நானும் சென்றேன்.. அவள் வீட்டின் படிக்கட்டிலேயே நான் நின்றுக் கொண்டிருந்தேன். ஏன் வெளியே இருக்க, வீட்டுக்குள் வாடா என்றாள். நான், வேணாம்டா நான் இங்கேயே இருக்கேன் மழையை கொஞ்ச நேரம் ரசிக்கிறேனே என்றேன். சரி நானும் உன்னுடன் சேர்ந்து மழையை ரசிக்கிறேன் என்று என் எதிரில் வந்து நின்றுக் கொண்டாள். அவளே பேச்சை ஆரம்பித்தாள்.. உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும்னு கேட்பேன் மறைக்காம சொல்லனும் என்றாள். நானும் சரிடா கேளு என்றேன். அவள் ஆரம்பித்தாள்..
உனக்கு பிடிச்ச Hero யார்னு கேட்டா.. கமல்,விக்ரம் பிடிக்கும்னு சொன்னேன். அவளுக்கு கமல் பிடிக்காதுனு சொன்னா. அப்பவே எனக்கும் அவளுக்கும் வாக்குவாதம் ஆரம்பித்துவிட்டது. ஒருவழியாக அது முடிந்தது. அவளுக்கு பிடிச்ச நடிகர் சூர்யா பிடித்த நடிகை ஜோதிகா என்றாள். எனக்கும் ஜோதிகாவைதான் பிடிக்கும் என்று சொன்னேன். அவள் முகத்தில் ஒரு சந்தோஷம். அப்பாடா இதிலாவது நம் Taste ஒன்னா இருக்கே என்று சொன்னாள்.
எனக்கு பிடிச்ச கலர் என்னனு கேட்டா. நான் ரொம்ப யோசிச்சு, உனக்கு எந்த கலர் பிடிக்கும்னு கேட்டேன். முதல்ல நீ சொல்லு அப்பறமா நான் சொல்றேன்னு சொன்னா. நான் விடல. அவளை வற்புறுத்தி அவளிடம் இருந்து விடையை வாங்கினேன். ரொம்ப பிடிச்சது Yellow அடுத்து Sky-Blue பிடிக்கும்னு சொன்னா. எனக்கு Parrot-Green தான் ரொம்ப பிடிக்கும்னு சொன்னேன்.
எந்த சாப்பாடு ரொம்ப பிடிக்கும்னு கேட்டா. சாப்பாடு விஷயமாச்சே. இதிலெல்லாம் தாமதிக்கவே மாட்டோம்ல. எனக்கு Vegetable சாதம் ரொம்ப பிடிக்கும்டா. உனக்கு என்ன பிடிக்கும்னு கேட்டேன். அவ என் கையை கிள்ளி Same Pinch எனக்கும் Vegetable தான் பிடிக்கும், ஒரு 5 Star வாங்கிதானு கேட்டா. சரிசரி வாங்கி தரேன் விடுனு சொன்னேன். எப்போ வாங்கிதரனு கேட்டா. இப்பவேனு சொன்னேன். போடா லூசு. இப்ப எப்படி வாங்கி தருவ. மழை வருவது கண்ணுக்கு தெரியலையானு கேட்டா. சரி ரொம்ப தண்ணி தாகமா இருக்கு, கொஞ்சம் தண்ணி எடுத்து வாடா என்று கேட்டேன். அவ ரொம்ப அப்பாவி எதை கேட்டாலும் அப்படியே செஞ்சிடுவா. மழை வரும்போது எப்படி தாகம் எடுக்கும் என்றுகூட யோசிக்காமல் வீட்டினுள் சென்றாள். நான் உடனே என் சைக்கிளை எடுத்துக்கொண்டு கடைக்கு சென்று 10 ரூபாய் 5 Star ஒன்னு வாங்கிட்டு அவள் வீடு வந்தேன். அப்போது அவள் அப்பா வெளியே நின்னுட்டு இருந்தார். என்னப்பா மழைல இப்படி நனைஞ்சிட்டு இருக்க. ஏம்மா மஹா தம்பிக்கு அந்த டவளை எடுத்து தா என்று சொன்னார். தலையை நல்லா துவட்டிக்கோப்பா என்று சொல்லிவிட்டு அவர் வீட்டினுள்ளே சென்றுவிட்டார். நானும் அவளிடம் டவளை வாங்கி தலை துடைத்துவிட்டு அந்த டவளிலேயே நான் வாங்கிவந்த 5 Star சாக்கலேட்டை வைத்து அவளிடம் தந்தேன். என்கிட்ட தண்ணி வேணும்னு கேட்டுட்டு எங்கடா எருமை போனனு செல்லமா கோபிச்சுகிட்டா. நீதான 5 Star வேணும்னு கேட்ட. அதான் கடைக்குப் போய் வாங்கி வந்தேன்னு சொன்னேன். போடா லூசுனு செல்லமாக திட்டினாள். அவள் என் சாக்கலேட்டை எடுத்து அவள் Purse-ல் வைத்துக் கொண்டாள். ஒரு Thanks சொல்ல மாட்டியானு நான் கேட்டேன். அதெல்லாம் சொல்ல முடியாது நீ வேணும்னா எனக்கு சொல்லிக்கோ நானெல்லாம் சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டா.. ரொம்ப வாயாடி......
அப்புறம், உனக்கு எந்த சாமிடா பிடிக்கும்னு கேட்டா. நான் முருகர் என்று சொன்னேன். அவளுக்கு விநாயகர் பிடிக்கும்னு சொன்னா. முருகர்னா சுத்தமா பிடிக்காதுனு சொன்னா. எனக்கு ரொம்ப கோபம் வந்துடுச்சு. என் கோபத்தை புரிந்தவளாய் , ஏய் சும்மாதான் சொன்னேன்பா, கோச்சுக்காத, எனக்கும் இனிமேல் முருகரையும் பிடிக்கும் ஆனா, எப்பவுமே என் விநாயகர்தான் First என்றாள்..
எனக்கு இளையராஜா தான் பிடிக்கும் உனக்கு எந்த Music Director பிடிக்கும்னு கேட்டா. எனக்கு சொல்ல தெரியல. அதுவரை அப்படி நான் யோசிச்சது இல்ல. எல்லார் இசையையும் விரும்பி கேட்பேன். இதே பதிலைதான் அவளிடமும் சொன்னேன். ஏதோ சொல்ல வந்தவள் சொல்லாமல் அடுத்த கேள்விக்கு சென்றாள்...
உனக்கு வண்டி ஓட்ட தெரியுமா என்றாள், Gear வண்டி ஓட்ட தெரியாது TVS ஓட்டுவேன் என்றேன். சரி ஆனா சீக்கிரமா Gear வண்டி ஓட்ட கத்துக்கோ என்றாள். எதுக்குடினு கேட்டேன். அட, என்ன வண்டில உட்காரவெச்சு ஓட்டனும்ல அதுக்குதான் என்றாள்.. சரிங்க மேடம்னு நான் சொன்னேன்...
உனக்கு பிடிச்ச Subject Maths-னு எல்லாருக்கும் தெரியும் ஆனா நீ சொல்லு. உனக்கு உண்மையா எந்த Subject ரொம்ப பிடிக்கும்னு கேட்டா. இதிலென்னடா சந்தேகம். எனக்கு எப்பவுமே Maths தான் ரொம்ப பிடிக்கும் அப்புறம் தமிழ் ரொம்ப பிடிக்கும்னு சொன்னேன். அவளுக்கு பிடித்ததும் Maths தான். தமிழ் அவளைவிட எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனாலும் அவள்தான் என்னைவிட அதிகம் மதிப்பெண் எடுப்பாள். அவள் கையெழுத்து அப்படி.. ம்.. அதுக்கு நாம என்ன செய்ய முடியும் சொல்லுங்க.. நமக்கு என்ன செஞ்சாலும் இந்த கிறுக்கல் கையெழுத்தை மாற்றவே முடியவில்லை...
இப்ப வந்த படத்தில் எந்த பாட்டு உனக்கு ரொம்ப பிடிக்குனு கேட்டா..
நிறைய இருக்குடா. எதை சொல்லட்டும்னு தெரியலனு சொன்னேன். பரவாயில்லடா உனக்கு பிடிச்ச பாட்டு எல்லாத்தையும் சொல்லுடானு கேட்டா.
நான் ஒரு பெரிய List பொட்டேன்.
1. காதலே என் காதலே - மாயா காதல் மாயா..
2. உள்ளம் கேட்குமே - மழை மழை என் உலகத்தில் அடிக்கின்ற முதல் மழை..
3. கோடம்பாக்கம் - ரகசியமானது காதல்..
4. ABCD - தவமொன்று செய்தேனே வரம் நூறு தந்தாயே...
5. February 14 - நண்பா நண்பா நாளை உலகம் நம் கையில்..
6. ஒரு நாள் ஒரு கனவு - காற்றில் வரும் கீதமே...
7. கனா கண்டேன் - மூளை திருகும், மூச்சுக்குள் அடுப்பெரிக்கும்..
8. அந்நியன் - குமாரி.. என் காதல் சிக்கி முக்கி விக்கி திக்குது...
9. சந்திரமுகி - ராரா...
10. -----------------------
நான் சொல்ல வரும் முன்னர் போதும் போதும் பிடிச்ச பாட்டை சொல்ல சொன்னா எல்லா பாட்டையும் சொல்றியேனு சொன்னா.
அதோடு உங்களுக்கு ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்ங்க. என் செல் போனின் ரிங்டோன் மாயா காதல் மாயா என்னும் பாடல் என்பது உங்களில் பலருக்கு தெரியும். அப்படி ஒரு பாடல் ராஜ் டிவியில் வந்தபோது என் வீட்டு லேண்ட்லைன் நம்பருக்கு போன் செஞ்சு எனக்கு சொன்னா. அவள் சொன்னதாலோ என்னவோ தெரியவில்லை அந்த பாடல் எனக்கு இன்று வரை என் உயிரில் கலந்துவிட்டது கூடவே அவளும்,மாயா என்னும் பெயரும்...
அப்புறம் இதையெல்லாம் கேட்டுட்டு அவ சொன்னா, பரவாயில்ல, நீ ஒரு மாங்கானு நினைச்சேன், உனக்கும் நல்ல Taste இருக்குனு சொன்னா. நான் கொஞ்சம் முறைத்தேன் அவளை..
இவ்வாறு நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது மணி இரவு 8.30 ஆகியிருந்தது. டியூசன் 7.30 மணிக்கே முடிந்துவிட்டது மழை என்பதால் அனைவரும் முன்னரே எப்படியோ சமாளித்து வீடு சென்றுவிட்டனர், நான் மட்டும் இவளை பார்க்கும் எண்ணத்தில் இவள் வீட்டிலேயே இருந்துவிட்டேன். மழை இன்னமும் முழுதாய் நிற்கவில்லை. சரிடா நான் வீட்டுக்கு கிளம்பறேன், நாளைக்குப் பேசலாம் என்று சொன்னபோது தன் முகத்தை திருப்பிக் கொண்டாள். சாரிடா லூசு, புரிஞ்சுக்கோ ஏற்கனவே ரொம்ப லேட் ஆகிடுச்சு என்றேன். அவளும் சரி சரி பொளைச்சுப்போனு விட்டுட்டா. நானும் அவள் அம்மா அப்பாவிற்கு சொல்லிட்டு என் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினேன். அவள் நான் சைக்கிளில் சாவியைப் போட்டு திறக்கும்போது, ஒரு குடையை எடுத்து வந்து என்னிடம் தந்தாள். இந்தாடா இந்த குடையை வெச்சுக்கனு சொல்லி குடுத்தா. வேணாம் பரவாயில்லை குடையிருந்தா சைக்கிள் ஓட்ட முடியாதுனு சொல்லி நான் கிளம்பிட்டேன். அவளிடம் Gud Nyt சொல்லிட்டு கிளம்பினேன். அவள் கொஞ்சம் என் மீது கோபமாய் இருப்பது அவளிடமிருந்து GudNyt வராதபோதே புரிந்துக் கொண்டேன். சரி இவளை நாளை சமாளிச்சுக்கலாம்னு நான் வீடு நோக்கி மிதிக்கத் தொடங்கினேன் என் சைக்கிளை....
இது நானும் அவளும் ஒருநாள் மழை வந்தபோது பேசிய ஒரு சிறிய உரையாடல்தான்.. இது இன்னொரு நாள் தொடர்ந்தது... பல விஷயங்களை பரிமாறிக்கொண்டோம். அதைப்பற்றி இன்னொரு நாள் நேரம் கிடைக்கும்போது உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்...
பி.கு.: 10% உண்மை 90% கற்பனை கலந்த கதை
என் மனதில் இருக்கும் சின்னஞ்சிறு ஆசைகளை கற்பனையால் செதுக்கி இப்படி கதையாக மாற்றிவிடுகிறேன். இப்படி நடக்காவிட்டாலும், இதை படிக்கையில் இப்படி நடந்த சந்தோஷம் ஏற்படுகிறதே ! அது போதாதா என்ன ?!
- தினேஷ்மாயா