தீபம் + ஒளி = தீபாவளி

Wednesday, October 13, 2010



தீபாவளி என்றால் வீட்டில் தொலைக்காட்சியில் சில புதுப்படங்கள் பார்த்துட்டு, பட்டாசு வெடிச்சுட்டு, சும்மா காசை கரியாகிட்டு, இதுதான் தீபாவளி என்றாகிவிட்டது இப்போது...

வீட்டில் எத்தனை பேர் விளக்கேற்றி தீபாவளியை கொண்டாடுகிறோம்..

நான் மூன்று வருடங்களாக வீட்டில் விளக்கேற்றி தான் தீபாவளியை கொண்டாடி வருகிறேன்.. அட என்ன இருந்தாலும் சின்ன குழந்தைங்க மாதிரி பட்டாசு வெடிக்கும் குணம் மட்டும் என்னைவிட்டு போயிடுமா என்ன. எங்க வீட்டின் அருகில் இருக்கு சின்ன பசங்களைவிட நான் தான் அதிகம் பட்டாசு வெடிப்பேன். அதுவும் சின்ன சின்ன பட்டாசுக்களை ஒவ்வொன்றாக வெடிப்பதுதான் எனக்கு ரொம்ப பிடிக்கும்....
என் தீபாவளி அனுபவங்களை உங்களுடன் அடுத்த மாதம் பகிர்ந்துக்கொள்கிறேன்....


என்றும் அன்புடன் ..
தினேஷ்மாயா

0 Comments: