இங்க சென்னையில் நான் என் அக்கா வீட்லதான் தங்கியிருக்கேன். எங்க விட்டுக்கு பின்னாடியே கடற்கரை இருக்கு.. எப்பெல்லாம் நேரம் கிடைக்குதோ எப்பெல்லாம் மனசு கொஞ்சம் பாரமா இருக்கோ அப்பல்லாம் விட்டு பின்னடி இருக்குற கடற்கடைக்கு போயிடுவேன்...
காதுல ஹெட்செட் மாட்டிகிட்டு எப்.எம். ல பாட்டுகேட்டுடே கடல் அலையில் நடந்து போயிட்டே இருப்பேன்.. எவ்ளோ கஷ்டமா இருந்தாலும் அது அப்போ அங்கே மறைஞ்சு போயிடும். மனசு ஒரு சின்ன குழந்தை மாதிரி மாறிடும்.. இன்று இப்போ நான் கடற்கரைக்கு சென்றபோது எடுத்த புகைப்படங்களை மட்டும்தான் இங்கே பதிவு செஞ்சு இருக்கேன். இப்போ எனக்கு அவ்வளவா நேரம் கிடைக்கல. நேரம் கிடைக்கும்போது என் கடற்கரை அனுபவத்தை முழுதும் உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன்..
சென்னை மெரினா கடற்கரையில் இருக்கும் உழைப்பாளர்கள் சிலை இது...
அட.. இது வேற யாரும் இல்ல.. நான்தேன்... :)
கடற்கரை மணலில் நான் எழுதிய “என் மாயா”
சீறி வரும் கடல் அலைகள்.. ( அலைகள் ஓய்வதில்லை )
கடற்கரை அருகே இருந்த ஒரு புங்காவில் மண்ணோடு மண்ணாய் இருந்து எடுத்த புல்லின் புகைப்படம் இது ...
இது பேய் ஒன்னும் இல்லங்க. இதுவும் நான்தான். காந்திசிலை அருகே இருந்த மின்விளக்கின் அருகே நின்று எடுத்தது. சும்மா வித்தியாசமா ஏதாச்சும் முயற்சி செய்யலாமே என்று எடுத்தது..
ஒரு இருபது நிமிஷதுக்கு மேல துரத்தி துரத்தி அப்புறம் இந்த பட்டாம்பூச்சி ஒரு இடத்தில் அமைதியா உட்கார்ந்தப்போ எடுத்தது இது..
ஒருநாள் காலை ஆறுமணிக்கு கடற்கரை போனப்போ எடுத்தது இது... அதிகம் ஆக்ரோஷம் எல்லாம் இல்லாம, மிதமான வேகத்தோடு வந்த அலைகளில் நிற்பது மனசுக்கு ரொம்பவே இதமா இருந்துச்சு...
என்னை வளைச்சு வளைச்சு போட்டோ எடுக்குறதா சொல்லி என் அக்கா எடுத்த போட்டோ இது. ம். பரவாயில்ல.. நல்லாதான் எடுத்திருக்காங்க. ஆனா என்ன, சூரியன் வரும் முன்னரே எடுத்ததால் என் முகம் சுத்தமா தெரியாமல் போச்சு. இத எடுத்து முடிச்சதும் என்கிட்ட கேட்டாங்க. ஏண்டா, இதை நீ கண்டிப்பா உன் வலைப்பக்கத்தில் போடாம இருக்க மாட்டியேனு கேட்டாங்க. அப்புறம்தான் இதை இங்கே பதிவு செய்யும் எண்ணமே வந்தது எனக்கு...
சூரியனின் கதிர்கள் கடலில் பிரதிபலிப்பதை உங்களால் பார்க்க முடியுதா??
ரொம்ப நாள் கழிச்சு எனக்கு ரொம்ப பிடிச்ச மாதிரி இருக்கும் என் போட்டோ இது. என் அக்காவிற்கு தான் நன்றி சொல்லனும்.. உங்களுக்கு பிடிச்சிருக்கோ இல்லையோ .. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க.
காலை 6 மணிக்கு வந்தோம் கடற்கரைக்கு. சரியா 7 மணி இருக்கும்போது வீட்டிற்கு கிளம்பினோம் நானும் என் அக்காவும். அப்போ நான் கடைசியா எடுத்த போட்டோ இது. ரொம்ப எதேச்சையா வந்து இருக்கு. எடுக்கும்போது அவ்வளவா தெரியல. வீட்டுக்கு வந்து கம்ப்யூட்டர்ல பார்த்தப்போதான் ரொம்ப அருமையா வந்து இருக்குனு தெரிஞ்சு இதையும் இங்கே பதிவு செஞ்சு உங்களோடு பகிர்ந்துகிட்டேன்..
இது ஒன்னும் என் காதல் தேவதை நடந்து சென்ற கால்தடம் இல்லை. இது நான் நடந்து வந்த கால்தடம்... ஏன்.. காதல் தேவதை மட்டும் அப்படி என்ன ஸ்பெஷல். அவளை காதலிக்கும் இந்த அழகு தேவன் ( நான்தான் ! ) நானும் ஸ்பெஷல் தான் இல்லையா.... :)
என்றும் அன்புடன் ..
தினேஷ்மாயா
0 Comments:
Post a Comment