உழைப்பாளி

Wednesday, October 13, 2010



எத்தனை ஆட்டோக்கள் , கால் டாக்ஸி வந்தபோதிலும் இன்னமும் இதுபோன்ற ரிக்‌ஷா இழுப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இதையே தொழிலாக பலர் கொண்டுள்ளனர். இவர்கட்கு இதுதான் பிரதான தொழில். இவர்களை வாழ வைப்பவர்களும் பலர் உள்ளனர். நானும் ஒருசில நேரங்களில் ரிக்‌ஷாவில் சென்றதுண்டு. எனக்கு வருத்தமாகத்தான் இருக்கும், இருந்தாலும் என் பணம் அவர்கட்கு ஒருவேலை உணவிற்கு ஆகுமே என்றுதான் நான் சில நேரங்களில் இதில் சென்றதுண்டு. இவர்களுக்கு வேறு எதாச்சும் மாற்று தொழிலை அரசாங்கம் ஏற்படுத்தி தந்தால் நன்றாக இருக்கும்.
எத்தனை நாள்தான் இவர்கள் இதையே நம்பி இருப்பார்கள். அதுவும் எல்லாம் இயந்திரமயமாக மாறிவிட்ட இன்றைய காலகட்டத்தில்...........


என்றும் அன்புடன் ..
தினேஷ்மாயா

0 Comments: