எனக்கு இந்த ஊடகங்கள் மீது அதிக கோபம் இருக்கிறது. மற்ற கோபங்களை பிறகு பதிவு செய்கிறேன். இப்போது என் சிறிய கோபத்தை பதிவு செய்கிறேன்.
அதென்னா, பெரும்பாலான வார இதழ்களிலும், இன்னபிற இதழ்களின் முதல்பக்கத்தில் கவர்ச்சியான நடிகைகளின் புகைப்படத்தை அச்சடிக்கின்றனர். கேட்டால் வியாபார யுக்தி என்பார்கள். தரமான செய்திகளும் வித்தியாசமான துணுக்குகளும் இருந்தால் எந்த பத்திரிக்கையும் சிறப்பாய் விற்பனையாகும். நீங்கள் இப்படி கவர்ச்சி விளம்பரங்களை காட்டி உங்கள் இதழ்களை பிரபலபடுத்தலாமா. இதற்கு எந்தவொரு தமிழ் ஏடும் விதிவிலகல்ல. பெரும்பாலும் தான் நான் பேசுகிறேன். சில நேரங்களில் பொதுவான தலைப்பையோ அல்லது யாராச்சும் கதாநாயகனையோ அட்டைபடத்தில் போடுவார்கள்.
கவர்ச்சி நாயகிகளை அட்டைபடத்தில் பிரசுரித்தால் மட்டுமே ஆண்கள் அதிகம்பேர் உங்கள் பத்திரிக்கைகளை வாங்குவார்கள் என்று ஊடகங்கள் கருதுகின்றனவா ? இல்லை ஆண்கள் அப்படி விரும்புவதால்தான் ஊடகங்கள் அப்படி அச்சடிகின்றனவா ? என்று கேட்டால்,
ஊடகங்கள்தாம் மக்களை அந்த மனநிலைக்கு கொண்டுவந்தது என்பதை அப்பட்டமாக எங்கும் சொல்வேன் நான். ஆனால் ஒன்று, எங்கள் தமிழ் ஆண்களைப்பற்று என்றும் குறைத்து எடைபோடவேண்டாம் என்று வெளிப்படையாகவே ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்.
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment