ஏன் 1330 ?

Saturday, March 16, 2013



     திருக்குறள் ஏன் 1330 குறள் இருக்கிறது. அதற்கு மேல் எழுதவில்லையா இல்லை அவ்வளவுதான் நமக்கு கிடைத்திருக்கிறதா ? - என்று நான் 5-ம் வகுப்பு படிக்கும்போது என் தமிழாசிரியரிடம் கேட்டேன்.

   அவர் சொன்ன பதிலை இங்கே நினைவு கூர்கிறேன். 1330 என்கிற எண்ணை கூட்டிபார்த்தால், 1+3+3+0 = 7.
   
   இவ்வுலகில் மொத்தம் 7 கண்டங்கள் இருக்கிறது, 7 பெருங்கடல்கள் இருக்கிறது, ஒரு வாரத்திற்கு 7 நாட்கள் இருக்கிறது. அதனால் 7 என்கிற எண்ணை குறிப்பாய் உணர்த்த அவர் 133 அதிகாரத்தில் 1330 குறள் எழுதியிருக்கலாம் என்றார்.

  அந்த பதில் அப்போது என்னால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், இன்றும் எனக்கு அந்த் சந்தேகம் இருக்கிறது. ஏன் திருக்குறள் மொத்தம் 1330 மட்டுமே இருக்கிறது ??


* தினேஷ்மாயா *

0 Comments: