Made In India

Tuesday, January 01, 2013



    எங்கு பார்த்தாலும் எந்த பொருளை எடுத்தாலும் சீனாவில் தயாரிக்கப்பட்டது என்றுதான் போட்டிருக்கிறது. இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் இருக்கும் விஷயம்தான். சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள்தான் இன்று உலகை வலம் வந்துக்கொண்டிருக்கிறது. அப்படியானால் நம் நாட்டில் எந்த பொருட்களும் தயாரிப்பதில்லையா ?

    நம் நாட்டிலும் அனைத்து பொருட்களும் தயாரிக்கப்படுகிறது ஆனால் அதற்கு ஆதரவுதான் நம் மக்களிடையே இல்லை. மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி நம் நாட்டில் தயாரிக்கும் பொருட்களுக்கு வரிகளை குறைத்து அந்நிய நாட்டின் பொருட்களுக்கு வரிகளை அதிகப்படுத்தி நம் வியாபாரிகளுக்கு நன்மைப்பயக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடலாம்.

     ஆனால், எல்லாவற்றிற்கும் அரசை மட்டுமே எதிர்பார்த்திருப்பது என்பது மூடத்தனம். அதனால் தான், நான் என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவுமட்டும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை உபயோகித்து வருகிறேன். நன் நண்பர்களையும், வீட்டிலும் இதையே பழக்கப்படுத்தி வருகிறேன்.

     நம் அன்றாட தேவைக்கு அந்நிய பொருட்களை நாடாமல், நம் இந்திய பொருட்களை நாடுவோம். குளிப்பதற்கு ஹிமாலயா அல்லது ஹிந்துஸ்தான் யுனிலிவர் தயாரிக்கும் பொருட்கள், தலைக்கு மீரா சிகைக்காய் தூள், நறுமண்த்திற்கு ஜவ்வாது மற்றும் சந்தனம், பல் துலக்க, சித்த வைத்தியசாலையில் வாங்கிய பற்பொடி, எங்காவது வெளியில் சென்றால் குடிக்கும் தண்ணீர் Aquafina, Kinley என்று வாங்காமல், Bailey போன்ற இந்திய நிறுவனங்களின் தண்ணீர், பானம் எதாவது அருந்தினால் Bovonto, இப்படி முடிந்தவரை நம் இந்தியப்பொருட்களையே பயன்பாட்டிற்கு உபயோகம் செய்கிறேன். 

   நம்ம் இந்திய பொருட்களையும் இந்தியர்களையும் நாம் வாழவைக்காமல் யார் வாழவைப்பார்கள். உபயோகிக்கும் செல்போம், மடிக்கணிணி, தொலைக்காட்சி இதில் பெரும்பாலும் அந்நிய பொருட்களின் ஆதிக்கம் அதிகம். நான் சொல்வது அனைத்திலும் இந்திய பொருட்களையே பயன்படுத்த இயலாவிட்டாலும் இயன்றவரை இந்திய பொருட்களை பயன்படுத்துவோம். நம் நாட்டின் பொருளாதாரத்தை அந்நியர்களின் கைகளில் தந்துவிட்டு வருத்தம் கொள்வதைவிட நம் பொருளாதாரத்தை நம் கைகளில் எடுப்போம். உயர்த்தி காட்டுவோம்.


- அன்புடன்

****தினேஷ்மாயா****

0 Comments: