வாழ்வில்
சில தருணங்களில் “ இன்னும் கொஞ்சம் நேரம்
” என்று மனசு கேட்கும் ஆனால்
அந்த கொஞ்ச நேரம் கிடைத்திருக்காது.
அதுபோன்ற தருணங்களை என் மனதிடம் இருந்து
கடன்வாங்கி அசைப்போட்டு பார்க்கிறேன்.
@ பலநாட்கள்
கழித்து என் ஊரில் இருந்து
சென்னைக்கு இரயிலில் பயணம் செய்தேன். இரயில்
பயணம் என்றாலே எனக்கு அலாதி
பிரியம். சென்னையை இரயில் நெருங்கும்போது, 5 மணிநேரம்
பயணித்திருந்தாலும், இன்னும் கொஞ்ச நேரம்
இரயிலில் பயணிக்கலாமே என்று மனம் கேட்கும்.
@ கல்லூரியில்
என் மனதிற்கு பிடித்த தோழி ஒருத்தியுடன்
2011 ஆங்கில புத்தாண்டு அன்று பேசிக்கொண்டிருந்தேன். நானும் அவளும்
2 மணி நேரத்திற்கும் மேலாக பேசிக்கொண்டிருந்தோம். அவள் செல்கிறேன்
என்று சொன்னபோது, இன்னும் கொஞ்ச நேரம்
என்று மனசு கேட்டது.
@ ஊர்
திருவிழாவில் அவளும் நானும் ராட்டினத்தில்
ஒன்றாக அமர்ந்தோம். அவள் என்னை இறுக்கமாய்
பிடித்துக்கொண்டாள். ராட்டினம் நிற்கும்போது இன்னும் கொஞ்ச நேரம்
என்று மனசு கேட்டது.
@ விண்ணைத்தாண்டி
வருவாயா திரைப்படத்தை முதலில் திரையில் பார்க்கிறேன்.
படம் என் வாழ்க்கையை போலவே
இருந்தது. படம் முடியும் போது
இன்னும் கொஞ்ச நேரம் என்று
மனம் கேட்டது.
@ அவளை
தேர்வு ஒன்றுக்கு தொலைதூரம் அழைத்து சென்றிருந்தேன். தேர்வு
முடிந்து அவளும் நானும் பேருந்தில்
வந்துக்கொண்டிருந்தோம். அவள் என் தோழில்
சாய்ந்து, கதைப்பேசி வந்தாள். நானும் கேட்டுக்கொண்டே வந்தேன்.
பயணம் முடியும்போது, இன்னும் கொஞ்சம் என்று
மனம் கேட்டிருந்தாலும் பரவாயில்லை, இந்த பயணம் முடியாமலே
இருக்காதா என்று மனசு ஏங்கியது.
இப்படி இன்னும் நிறைய இருக்கு, நேரம் கிடைக்கையில் மீண்டும் அசைபோடுகிறேன்.
- தினேஷ்மாயா -
0 Comments:
Post a Comment